பாகுபலி பிள்ளையாரைப் பார்க்கணுமா?

சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஹஸ்தினாபுரம் வினோபாஜி நகbagubali-vinayagarரில், விநாயகா குழுமம் சார்பில் 10ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 7,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  சுமார் 50,000 பேர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். ரயில் ஓட்டும் பிள்ளையார், பாகுபலி பிள்ளையார், இசை கச்சேரி செய்யும் பிள்ளையார், பாதாளத்திலிருந்து தோன்றும் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. நவராத்திரி வருகிறது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் ஊரிலும் இதேபோல் கொலு கண்காட்சி வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். தேசத் தலைவர்களின் பொம்மைகள் இருந்தால், அவற்றையும் ஒரு கொலு படியில் வைக்கலாம்.

– சிவராமகிருஷ்ணன்

சிட்லப்பாக்கம்