நாமும் சிறிது கொடுத்துப் பழகணும்!

சமீபத்தில் ஜூரிச் பல்கலைக் கழக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள்:  மகிழ்வான வாழ்வு வேண்டுமா? பிறர் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு கனிவான மனத்துடன் என்னால் இயன்ற அளவு பிறர் நலனுக்கு உதவுவேன் என்று தீர்மானம் செய்யுங்கள்”. அந்த திடமான எண்ணத்தால் உங்கள் மூளை, உங்களுக்குள் ஒரு மகிழ்வான உணர்வலைகளைத் தூண்டுகிறதாம். சுயநலமிகளை விட பிறர் நலன் நாடுபவர்கள் மிகவும் மகிழ்வாக இருக்கிறார்களாம். பிறருக்கு கொடுத்து மகிழ்பவர்கள் மனதில் தோன்றும் மகிழ்வலைகளை மனோதத்துவ நிபுணர்கள் அருள் ஒளி என்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முக்கியமே தவிர எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல. விஞ்ஞானிகள் வேண்டுமானால் இன்று கண்டுபிடித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர்  டாக்டர்ஜி 1925லேயே இதை உணர்ந்து சங்கத்தைத் துவக்கி நடைமுறைப்படுத்தி விட்டாரே! அதனால் தானே இன்றும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்திற்காக பல்வேறு வழிகளில் பணிபுரிகிறார்கள். எத்தனை எதிர்ப்பு இருந்தும் சவால்கள் இருந்தும் அவர்கள் புன்னகையுடன் இன்றும் மகிழ்வாக வாழ்ந்து கொண்டு பிறரையும் மகிழ்விக்கிறார்கள்.

– ஜம்பு, சென்னை