உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வாரில் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் தனி அறையில் பூட்டிக்கொண்ட 18 வயது பெண் நடுத்தட்டு குடும்பம்! படி! படி! என தங்கள் பதட்டத்தை பெண்ணின் மீது திணித்த பெற்றோர்! அதிக அழுத்தம் காரணமாக, அடிப்படை விஷயத்தைக்கூட ஏற்காத மனத்தை உருவாக்கிக் கொண்டாள் அம்மாணவி. பத்தாம் வகுப்பு பெயிலானவுடன் பள்ளிக்கு போக மறுத்தாள். எப்போதும் போல் கடுமையாக கண்டிப்புக் காண்பித்தனர் பெற்றோர்.
தற்கொலை செய்வதாக மிரட்டியவள் வீட்டின் தனி அறையில் போய் பூட்டிக் கொண்டாள். 3 ஆண்டுகளாக வெளியே வரவில்லை. ஜன்னல் வழியாக அம்மாவின் உணவு. இதைப் பார்த்து கற்றுக்கொண்டான் தம்பி! 10ம் வகுப்பில் அவனும் பெயில். அவனும் அக்காவைப்போல் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டான் ஓராண்டாக.
இரண்டு குழந்தைகளும் நீண்ட நாட்களாக வெளியே வராததைக் கண்ட அக்கம் பக்கத்தார் போலீசுக்கு போன் பண்ண, உண்மை வெளியே வந்தது. இது செய்தி.
பெற்றோர் செய்தது சரியா? குழந்தையை படி எனக் சொல்வது பாவமா? பிரஷரா? குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை உள்ள பெற்றோர் சொல்லும் வாசகங்கள் தானே ‘படி’? இதற்கு குழந்தைகள் இவ்வளவு பெரிய ‘ரியாக்ஷன்’ காண்பிக்க வேண்டுமா?
சரி! வீட்டின் தனி அறைக்குள் சென்று பூட்டிக் கொண்ட பெண்ணை சமாதானப்படுத்த பெற்றோரால் ஏன் முடியவில்லை? அல்லது சமாதானம் செய்ய முடியாத போது மாற்று வழிகள் பற்றி அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை?
இங்கு அமர்ந்துகொண்டே ஹரித்வாரில் அவர்கள் ஏன் செய்யவில்லை ஏன் சாதாரணமாக கேட்டு விடுவது தானே நம் இயல்பு?
போகட்டும். இந்த சம்பவத்தின் இரண்டாவது பகுதியை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம். அக்காவின் செயலை தம்பி அப்படியே எடுத்துக்கொண்டு, அவனும் ஓராண்டாக பூட்டிய அறைக்குள் வாழ்க்கை நடத்துகிறான். அதாவது அக்காவின் நடத்தையை தம்பி பார்த்துக் கற்றுக் கொள்கிறான். இதுதான் வாழ்க்கை. இதுதான் மனோதத்துவமும் கூறுவது. நம் குழந்தைகளுக்கு நீ கற்றுத் தந்தது என்ன? உன்னைப் பார்த்துத்தானே உன் பையன் நடந்து கொள்வான் – என்றெல்லாம் நம் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இது நம் மூளையின் செல்களுக்கு சென்று நாம் ‘முன்மாதிரியாக’ நடந்து (வாழ்ந்து) காட்டுவதில்லையே! ஏன்?
என் மகனின் பெரும்பாலான ‘நடவடிக்கை’ என்னை ஒத்து இருக்கிறது. என் பேரனின் ‘பிகேவியர்’ முழுதும் எனது மருமகனை ‘காப்பி’ அடிக்கிறது. நமது நம் நடவடிக்கைகள் கண்காணிக்கிறார்கள். நாம் நடந்து கொள்ளும் விதமும் அவர்களது ‘மூளை ரெகார்டரில்’ வீடியோவாக பதிகிறது. இதுவே 11 வயதுக்கு பிறகு மறுபடியும் ‘ரிப்ளே’ ஆகிறது.
நம் நடவடிக்கைகள் நாம் நம் பெற்றோரிடம் கற்றுக் கொண்டது. இதை மனோதத்துவம் ‘ஸ்கிரிப்ட்’ என்கிறது. இது மிகப்பெரிய ‘விழிப்புணர்வு’. நம் மனதுக்குள் நாம் ஏற்படுத்தினால் மட்டுமே மாற்ற முடிந்தது. இல்லாவிடில் மாற்ற இயலாது. குழந்தைகளின் வளர்ப்பு பெற்றோர் சொல்லும் ‘உபதேசங்களால்’ உருவாவதில்லை. நம்மிடமிருந்து 65 சதவீதமும் சுற்றம், நட்பு, பள்ளியிலிருந்து 35 சதவீதமும் உருப்பெறுகிறது. இதில் பெற்றோர்களின் நடவடிக்கைகளில் பெரும்பங்கும் உபதேங்களில் ஒரு பங்குமாக நம் உருவாக்குகிறது. இது கரு உருவாவதிலிருந்து தொடங்குகிறது. அபிமன்யூ பத்ம வியூகத்தை அம்மாவின் கருவிலிருந்த போது (அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் உபதேசித்தை கேட்ட போது) கற்றது என்பது புராணச் செய்தி மட்டுமல்ல மனோதத்துவம் இதை உறுதி செய்கிறது.
இதனால் தான் கருவுற்றிருக்கும் போது நல்ல செய்தி கேட்க வேண்டும். நல்ல செய்தி படிக்கவேண்டும் என்றும் முன்னோர்கள் கூறி வந்துள்ளனர். பெண்கள் கருவுற்ற காலத்தில் அதிகமாக கணித புத்தகங்கள் படிப்பதையும், கணக்குப் போட்டுப் பழகுவதைவும், இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது கருவிலுள்ள மூளை வளர்ச்சிக்கு உதவுவதை விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது.
சரி! சப்ஜெட்டுக்கு வருகிறேன். ஹரித்துவார் குழந்தைகளின் ‘வீட்டு – பூட்டு’ செய்கைக்கு, பெற்றோரின் தொடர் ‘நச்சரிப்பே’ காரணம். பெற்றோர் நச்சரிக்க யார் காரணம்? பக்கத்துவீட்டு பெண், அண்டை அயலார், அதிக மதிப்பெண் எடுப்பதும் தன் பெண் ‘பாசாகாவிட்டால்’ நாம் எப்படி அடுத்தவர் முகத்தில் விழிப்பது என்கிற தாழ்வு மனப்பான்மையுமே காரணம். ஒரு நாளிதழ் 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு பரீட்சைக்கு முன்பு ‘மேளா’ நடத்தி எப்படி அதிக மதிப்பெண் பெறுவது என ‘டிப்ஸ்’ கொடுத்து உசுப்பேற்றுகிறது. ஒவ்வொரு ‘பத்திரிகையும் வியாபார அபிவிருத்திக்கு தங்கள் பங்குக்கு நம் குழந்தையின் தலைமீது ‘மார்க்’ என்னும் பாறாங்கல்லை ஏற்றி வைக்கிறது.
பள்ளிகள் டியூஷன் என்ற பெயரில் ‘பள்ளிச் சிறைக்குள்’ அடைத்து ‘மன’ பங்கம் செய்கின்றன பத்திரிகையும் பணம் படைத்த கனவான்களும் ‘மார்க் பெற்ற மாணவியருக்கு’ சன்மானம் கொடுத்து, மற்றவருக்கு ‘மன’த் தாழ்ச்சி ஏற்படுத்தி குற்ற உணர்வை விதைக்கிறார்கள்.
இந்தப் படிப்பு – மதிப்பெண் – பட்டம் – பதவி சூறாவளிக்கும் சிக்கியவர்கள் சின்னாபின்னமாகிறார்கள். இந்த மனச்சிதைவு விளையாட்டின் சூத்ரதாரி சமூகம், பங்கேற்போர் பெற்றோர், பலியாவோர் குழந்தைகள். இதை புரிந்துகொள்ளாமல் போனதற்கு காரணம், காலம் காலமாக நாம் போற்றிவந்த ‘குடும்ப அமைப்பு முறை’ சிதிலமடைந்து இதை நாமே.
நம் குடும்பம் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத கூட்டுக் குடும்ப அமைப்பாக இருந்து வருகிறது என நான் அதை நிகழ்காலத்தில் குறிப்பிடுவதற்கு காரணம் இன்னும் அது கிராமங்களில் வாழ்ந்து வருகிறது.
இது ஏன் வெற்றிகரமாக இருக்கிறது என்பதற்கு பலநூறு காரணங்கள் சொன்னாலும், ஒருவருக்கொருவர் உதவிகரமாக லாபகரமாக, பிரயோஜனமாக இருக்கும் “”complementry to each other” என்கிற தத்துவத்தின் சாரமாக இது இருப்பது தான்.
பிரச்சினை என்று வந்தால் அதை தீர்த்து வைக்கும் ‘family court’ தாத்தாவின் வடிவில் உள்ளே இருக்கிறது. சிக்கல்கள் என்று வந்தால் அதை சரி செய்யும் போலீஸ் ஸ்டேஷன் சித்தப்பா, பெரியப்பா வடிவிலே உள்ளே இருக்கிறது. ‘கஷ்டங்கள்’ என்று வந்தால் அதை சரிசெய்யும் கோவில் அம்மா, பாட்டி வடிவிலே உள்ளே இருக்கிறது.
உதவுவதற்கும் உதவி செய்வதற்கும் இதமாக இதயத்தை தடவிக் கொடுப்பதற்கும் “counselling செய்யவும்’ கண்டிப்பதற்கும் இலாகா ஒதுக்கப்படாத அத்தனை அதிகாரிகளும் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். இதனால் ‘கூட்டுக்குடும்பம்’ வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது.
ஆசை, பேராசை, நிராசை, பயம், பொறாமை இவைகளெல்லாம் இங்கே தோன்றாமல் இல்லை. ஆனால் தோன்றியவுடனேயே அவை, கிள்ளி எறியப்பட்டன. இவை விஸ்வரூபம் கூட்டுக்குடும்பங்கள் உடைய ஆரம்பித்தது.
தனிக் குடித்தனத்தில் இவை விஸ்வரூபம் எடுத்தால் அவை கணவன் – மனைவி – குழந்தை உறவை சீர்கெடுத்தது. இதன் விளைவுதான் விவாகரத்து. குடும்ப நலத்தை கெடுக்கும் கோர்ட்களை உருவாக்கியது.
உலகத்தின் கலாச்சாரம் நமக்குத் தெரியும் அங்கே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் விவாகரத்து 2014 கணக்கெடுப்பில் 50%க்கு அதிகமாக சிங்கிள் கச்ணூஞுணணாடிணஞ் என்னும் (தாய் அல்லது தந்தையுடன் மட்டுமே வாழும் குழந்தைகள் கொண்ட) புதிய சமூகம் உருவாகியுள்ளது தெருகிறது.
இந்த உதாரணங்கள் இப்போது இந்தியாவிலும் ஜலதோஷமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இது டெங்கு காய்ச்சலாக மாறுவதற்கு முன் நாம் சிகிச்சையை சீராக்க வேண்டும்.
* * *
கூட்டுக்குடும்பம் குறைந்து வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. தனிக்குடித்தனமும் தள்ளாடுகிறதே, இதற்கு காரணம் என்ன? பெற்றோர்களோடு இருக்க முடியவில்லை. ஆனால் பெற்றோர்கள் காப்பாற்ற முற்படுவதில்லையே! ‘வசதி குறைந்தோர் அநாதை இல்லங்களில், வசதி நிறைந்தோர் முதியோர் இல்லங்களில்…’ என்பதோர் புதிய மேற்கத்தியநாட்டு கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் உருவாகி வருகிறது.
ஐஅகு மகன், ஆனால் பெற்றோர் முதியோர் நல இல்லங்களில்! அவர்களுக்கென்று சகல வசதிகளோடு ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் முதியோர் வீடு கட்டுவர். அதில் குடியமர்த்தப்படுவர். இவர்களை இல்லங்களே பராமரிக்கும், சாப்பாடு, மருந்து உட்பட ‘தூக்கிப்போட,’ மகன் / மகள் வரவில்லையெனில் அதுவும் நடத்தப்படும். பெரும்பாலும் வசதி படைத்த வெளிநாடு வாழ் மகன் / மகள் பெற்றோருக்கு இதுதான் ‘புதுவாழ்வு’.
இது ஏன்? அப்பா தன் அம்மாவிற்கு, அதாவது (என்) பாட்டிக்கு அறையிலே அடைத்து, சட்டியிலே சாப்பாடு போடுகிறார். பாட்டி இறந்த போது, பேரன் சட்டியை மட்டும் பத்திரப்படுத்து வதை பார்த்து எதற்கு என கேட்ட அப்பனுக்கு மகன் பதில் சொல்கிறான்; இதை உங்களுக்கு சோறுபோட எடுத்து வைத்தேன்” என்று!
நம் அம்மா அப்பாவை நான் வைத்து சீராட்டி பாராட்டியதை பாக்கும் நம் மகன் / மகள் நமக்கும் அதே கூணூஞுச்ணாட்ஞுணணா தருகிறான். இது ஒருபுறம்! நன்றாக வைத்துக்கொண்ட வீடுகளிலும் வரும் மருமகளின் செய்கையால், குடும்பம் சீரழிவதும் காண முடிகிறது.
நல்ல அம்மாவாக இருக்கும் பெண்ணால் ஏன் நல்ல மாமியாராக இருக்க முடியவில்லை என்பதும் நல்ல சகோதரியாக இருக்கும் பெண்ணால் ஏன் நல்ல நாத்தனாராக இருக்க முடியவில்லை என்பதும் நல்ல மகளாக இருக்கும் பெண்ணால் ஏன் நல்ல மருமகளாக இருக்க முடியவில்லை என்பதும் மிலியன் டாலர் கேள்விகள்!
இதற்கெல்லாம் காரணம் “Possessiveness” தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்னும் பொறாமை, பேராசை என்றும் சொல்லலாம்.
இந்த மனச்சிதைவு அனைவரிடமும் உள்ளது. இதை வெல்ல வேண்டுமானால் அதீத ‘விழிப்புணர்வு’ வேண்டும்.
எப்படி பாத்திரத்தில் இருந்தால்தான், கைவிட்டால் பொருள் கிடைக்கும் என்பது போல, மனநிறைவு உள்ள மனிதர்களாலேயே அடுத்தவர்களை மனநிறைவோடு வைக்க முடியும். மனநிறைவு தரப்படும்.
இந்த மனநிறைவு என்னும் வங்கி சேமிப்புக் கணக்கில் நாம் அடிக்கடி டெபாசிட் செய்ய ‘பணம்’ தருவதற்கு நம் ஹிந்துமதமும் குடும்ப அமைப்பும் ஏற்கனவே பலவிஷயங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. நம் இதிகாச புராணங்கள், ராமாயண, மகாபாரத சொற்பொழிவுகள், கதைகள், புத்தகங்கள், நீதிபோதனை வகுப்புகள், குடும்பப் பெரியவர்கள் சொல்லும் பாட்டி சொன்ன கதைகள்” மதப்பெரியவர்களின் சொற்பொழிவுகள், புத்தகங்கள், மனதை இலகுவாக்கும் ஹாஸ்யங்கள், இயற்கை தந்த அருவிகள், மலைவாச ஸ்தலங்கள் என்பன நம் மனதின் அழிச்சாட்டியங்களை அழுத்து மனிதனுக்குள் உள்ள மானுடத்தை வெளிகாட்ட வைக்கிறது.
இதற்காகத் தான் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மிருகமாக, உணவுக்காக வாழ்ந்துவிடாமல், கூட்டமாக மனிதனாக நாம் வாழவே நம் மதத்தின் ஏற்பாடுகள் இவை.
* * *
விஞ்ஞானம் வளர வளர அந்த விஞ்ஞானத்திற்கு சவால் விடும் ‘சைபர் கீரைம்’மும் பெருகி வருகிறது. திண்டுக்கல் பூட்டு 7 லீவர் இருந்தது இன்று 14 லீவர் ஆன பின்பு இதை உடைக்க திருடன் புது வழிமுறைகள் கண்டதில் 21 லீவர் வரை பாதுகாப்பு அம்சங்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது.
கூட்டுக் குடும்பங்கள் ‘ஆவியாகி’ தனிக் குடும்பங்கள் ‘காலியாகி’ பெற்றோர் காப்பகங்கள் பெருக்கெடுத்தாலும் இந்தியாவில் இவ்வளவு நடைபெற்ற பின்பும் இன்றும் விவாகரத்து 1.1 சதவீதம் தான். ‘ஹைஜாக்கர்ஸ்,’ – ‘இன்டர்னெட் ஹாக்கர்ஸ்’ என சுற்றிலும் கூடுதல் புத்திசாலிகளாக இருந்தாலும் அதற்கு ‘செக்’ வைக்க நாம் இன்னும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கி வருகிறோம்.
அதுபோல போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று தேவைக்காக மட்டும் உழைப்பதும், வாழ்வதற்கு அளவான தேவைகள் போதும் என்பதும் ‘சந்தோஷ சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக’ எம்மை ஆக்கும் என்றும் நம் ஹிந்து குடும்ப நீதியை கடைபிடித்தால், எந்த சாவியாலும் இந்த ‘அசகாயமான பூட்டை’ திறக்க முடியாது, எந்த ஆசைகளும் நம்மை ‘ஹாக்’ செய்ய முடியாது.
உலகத்தையே ஒரு குடும்பமாக பார்க்கும் நம் முன்னோர்களின் எண்ணமும் வழிகாட்டுதலும் நம்முடைய ஒரு குடும்பத்தை நல்வழிபடுத்து
தலில் தோல்வி அடையாது. நம்முன்னோர்கள் வாழ்க்கைப் பாதை – இன்றைய இளைஞர்களுக்கு சந்தோஷம் தரும் பாதை.
*********************************************************************************************************************************************************
குடும்ப அமைப்பை வலுப்படுத்தும் அரும்பணியில் ஆர்.எஸ்.எஸ்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஊழியர்கள் நாடு முழுவதும் சங்க வேலை வாயிலாக இருபது லட்சம் குடும்பங்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். 25 கோடி மக்கள் சங்கத் தொடர்புக்கு வந்திருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் குடும்ப பிரபோதன் (விழிப்புணர்வு) மூலமாக குடும்ப அமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒரு தனி நபரை பண்பாளராக உருவாக்குவது குடும்பம்தான். குழந்தைகளுக்கு நல்ல விதமாக பண்புப் பதிவுகள் (சம்ஸ்கார்) கிடைத்தால் அவர்கள் நல்லபடியாக வளர்ந்து ஆளாவார்கள். குடும்பத்தில் சமுதாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சங்க ஊழியர்கள் முயன்று வருகிறார்கள். இதன் மூலம் சமுதாயத்தில் நல்லதொரு சூழ்நிலை உருவாகும்.
அண்மையில் மத்தியப் பிரதேசம் போபாலில் நடந்த ஆர்.எஸ்.எஸ் செயற்குழு கூட்ட முடிவில் சங்கத்தின் அகில பாரத பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் உரையாடுகையில் தெரிவித்த தகவல்.
*********************************************************************************************************************************************************
ஆவது தான் பெண்ணால்!
நம் தேசத்தின் பெண்கள் குடும்பக் கட்டமைப்பைக் காப்பதில் மிகுந்த கவனம் கொடுக்கின்றனர். அதற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். நல்ல புரிதலுடன், விட்டுக் கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஒரு சில இடங்களில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பெரும்பான்மையோர் இதில் தீவிர கவனம் செலுத்தி கட்டுக் கோப்பாகக் குடும்ப அமைப்பை பாதுகாத்து வருகின்றனர். நமது நாட்டுக் கலாச்சாரம், பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் பெரிய பொறுப்பு பெண்களிடம் இருக்கின்றது.
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் அம்மா”. இதன் பொருள் மகத்துவமானது. இந்த நாட்டில் பிறந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் ஒரு செய்யுளில் கெட்ட பையன்கள் பிறக்கலாம், ஆனால் கெட்ட அம்மா என்று யாரும் இருக்கமாட்டார்கள்” என்கிறார். இவை பெண்மைக்கு மேன்மை கொடுக்கும் வரிகள்.
– காந்தாமணி நாராயணன்
*********************************************************************************************************************************************************