கோயம்புத்தூரில் ஹிந்து முன்னணி பொறுப்பாளர், சசிகுமார் (வயது 35) வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
திண்டுக்கல்லில், ஹிந்து முன்னணியின் மற்றொரு ஊழியர் சங்கர் கணேஷ் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
வேலூரிலும், திருப்பூரிலும் ஹிந்து அமைப்புகளின் ஊழியர்களின் வீடுகள் குண்டு வீசித் தாக்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி இதுதான். நடப்பது 2016 தானா? அல்லது பாரதத்தைத் தூண்டாடுவதற்காக முகம்மது அலி ஜின்னா ‘நேரடி நடவடிக்கை’ அறிவித்த 1946ம் ஆண்டா? அப்படி ஏதாவது அறிவிக்கப்பட்டுள்ளதா?
கோவை, சசிகுமார் செய்த பாவம் என்ன? ஹிந்து முன்னணியில் இருந்தது பாவமா? விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியது பாவமா?
திண்டுக்கல் சம்பவத்தில், கைதான நான்கு பேருமே முஸ்லிம் பயங்கரவாதிகள். ஹிந்து இயக்கத் தோழர்கள் படுகொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகளே. இத்தகைய சம்பவங்களுக்கு காவல்துறையின் அலட்சியப்போக்குதான் காரணம்.
முஸ்லிம்களை தாஜா செய்து, அவர்களின் ஓட்டுகளுக்காக, திராவிட கட்சிகள் மாறி மாறி அவர்களுடன் கூட்டணி வைத்து, அவர்களை வளர்த்து வருவதும் இந்த இழிநிலைக்கு காரணம். ஒரு பக்கம், முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களை ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தள்ளுவது… மற்றொரு பக்கம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ஆர்.எஸ்.எஸ் இயக்க நிகழ்ச்சிகளுக்கு ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடுவது…
தமிழக அரசின் இத்தகைய செயல்களால் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டது. தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இத்தகைய பயங்கரவாதிகளை ஒடுக்கவில்லை எனில், ஹிந்துக்கள் நடுத்தெருவில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.