அசோக்சிங்கல் தம் வாழ்நாளில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக நின்றிருந்த அவமானச் சின்னத்தை அகற்றி வரலாற்று சாதனை படைத்துவிட்டார். இப்போது அங்கே ராணுவ கூடாரம் போன்ற கட்டிடத்தில் ஸ்ரீராமர் ஆலயம் கடந்த 23 ஆண்டுகளாக அரசின் பராமரிப்பில் உள்ளது.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் டிசம்பர் 6ம் தேதியன்று ஒப்பாரி வைத்துப் புலம்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
அயோத்தி எந்த திசையில் இருக்கிறது என்பதே தெரியாத தமிழக முஸ்லிம்கள்தாம் பாபர் மசூதியைத் திரும்பவும் கட்டிக்கொடு என்று ஒப்பாரி வைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருக்காலும் அந்த இடத்தில் மட்டுமல்ல அயோத்தியின் எந்த மூலையிலும் ஒரு புதிய மசூதி உருவாக முடியாது.
இப்போது அசோக்ஜியின் கனவு நனவாக ஸ்ரீ ராமஜன்ம பூமியில் அதிவிரைவில் ஆலயம் அமைந்தாக வேண்டும்.
ஸ்ரீராமஜன்மபூமி சம்பந்தப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் தீர்ப்பு ஒன்று வந்து, அதன் மூலம் ஆலயம் எழும்பும் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை.
நீதிமன்றத் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு முழுமையாக சாதகமாக வந்தாலும் அதை நிறைவேற்றவேண்டியது மத்திய அரசும் உத்தர பிரதேச மாநில அரசும்தான்.
எனவே, என்றோ வரப்போகும் நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திராமல் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஸ்ரீராமஜன்ம பூமியில் ஆலயம் எழும்பிட வழி செய்யும் வகையில் கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்ட சட்டம் ஒன்று இயற்றப்படுவதே இன்றைக்கு எஞ்சியுள்ள ஒரே வழி.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் லக்ஷக்கணக்கான ஆண்டுகளாக அயோத்தியில் ஸ்ரீராமபிரான் அவதரித்த ஸ்தலமாகக் கருதி வழிபட்டு வரும் இடத்தை ‘ஸ்ரீராமஜன்ம பூமி’ என்று இந்த அரசு முரசு அறைந்து தெரிவிக்கிறது.
அந்தப் புனித இடத்தில் ஆலயம் எழுப்ப இடையூறாக உள்ள அனைத்து வழக்குகளையும் இந்த அறிவிப்பின் மூலம் அரசு செல்லுபடியாகாததாக அறிவிக்கிறது. இது விஷயமாக புதிய வழக்கு எதனையும் யாரும் தொடுக்க முடியாது என்றும் இந்த அரசு அறிவிக்கிறது.
அந்த ஸ்ரீராமஜன்ம பூமியில் ஆலயம் எழுப்ப வசதியாக அரசு ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள நிலப்பகுதி முழுவதையும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக அறிவித்து அந்த பூமி முழுவதையும் ஸ்ரீராமஜன்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க அரசு முன்வருகிறது.”
12 கோடி முஸ்லிம்களின் போராட்டத்திற்கு அஞ்சி ஷபானு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையே செல்லுபடியாகாதவாறு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முன்வர முடியும் என்றால்,
110 கோடி ஹிந்துக்களின் தார்மீக உரிமையை மதித்து ஸ்ரீராமஜன்ம பூமி விஷயத்திலும் சட்டம் இயற்ற முடிய வேண்டும்.
இதற்குத் தேவைப்படுவது நாடாளுமன்றத்தில் 400 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு. அத்தகைய அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி ஒன்றால் மட்டுமே இதனைச் சட்டமாக்க முடியும். லோக்சபாவில் மட்டுமல்லாது ராஜ்யசபாவிலும் இத்தகைய அறுதிப் பெரும்பான்மை உள்ள ஆளுங்கட்சியால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
இத்தகைய சட்டம் இஸ்லாமிய அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து தடுக்க முற்படாதவாறு மத்திய மாநில அரசுகள் போதிய முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இத்தகைய போராட்ட சக்திகளுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் அவர்களது வன்முறைச் செயல்களை ஆதரித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் தங்களை நிரந்தரமாக ஓரங்கட்டிவிடுகிறார்கள் என்ற அச்சம் வரக்கூடிய அளவுக்கு மக்கள் எழுச்சியை நாம் உருவாக்கிவிட்டால் அவர்கள் வாலாட்டமாட்டார்கள்.
இத்தனையும் நடந்தாக வேண்டும். நிச்சயம் நடந்தே தீரும். அயோத்தியில் ஆலயம் எழும்பியே தீரும். அசோக்ஜியின் கனவு மட்டுமல்ல கோடிக்கணக்கான ஹிந்துக்களின் கனவான ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி, காசி விசுவநாதர் ஆலயம் ஆகியவையும் முந்தைய மகோன்னத நிலைக்கு உயர்ந்தே தீரும்.
மக்களின் விழிப்புணர்வை இத்தகைய நிலையை உருவாக்கும் அளவுக்கு நாம் ஏற்படுத்த ஆவன செய்வோமாக.