ஞானசூனியம்

காங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் விசுவாசிகளாகவே மாறி யுள்ளார்கள். பாகிஸ்தான் நடத்திய நாடகத்தை போலவே, இவர்களும் இங்கு நடத்துகிறார்கள்.   பிப்ரவரி 26ம் தேதி தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் மறுத்தது, வான்வெளியிலேயே இந்திய விமானப்படை விமானங்களை மறித்து திருப்பிவிட்டோம் என்றார்கள். மறுதினமே இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள், இந்த தாக்குதல் ஆள் நடமாட்டமில்லா பகுதியில் நடைபெற்றது என்றும்,  பார்வையிட  சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார் கள். இதில் தோஹாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அல் ஜசீரா சேனலின் பாகிஸ்தான் நிருபர் மட்டுமே சென்றார். இந்திய விமானப் படை தாக்குதல் நடந்த இடமான பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்–இ–முகமதுவின் பயிற்சி முகாம் அமைந்துள்ள மதரஸா இருந்த இடத் திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றார். இதுபற்றி சாம் பிட்ேராடாவிற்கு படிக்க நேர மில்லை.

சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு இந்தியர்கள் பிரிவின் தலைவரும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இந்தியர் என்பதற்கு பதிலாக பாகிஸ்தானியர் என கூறும் விதத்தில்  அமைந்துள்ளது.

2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும், புல்வாமா வில் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றவாளியாக கருதக்கூடாது என்று பிட்ரோடா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். (entire Pakistan can’t be blamed for 26/11 and Pulwama terror attacks). இவ்வளவு கீழ்த்தரமாக  விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மட்டு மல்ல. தேச அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

இந்திய ஊடகங்களில் வந்த செய்திகளில் சாம் பிட்ராடோவிற்கு நம்பிக்கை கிடையாது. உலக ஊடகங்கள் குறிப்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்த செய்தியை முன் வைத்து கேள்விக் கணைகளை எழுப்புகிறார். சிறப்பு வாய்ந்த அமெரிக்க எப் 16 ரக விமானத்தை, சாதாரண ‘மிராஜ் 3௦’ விமானம் வீழ்த்தியதைக் கண்டு மிரண்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.