ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர்
மாணிக்யாலா ராவ் பாஜகவை சேர்ந்தவர். இனி கிருஷ்ண ஜெயந்தியை கோபூஜா தின உற்சவமாக எல்லா ஆலயங்களும் கொண்டாட வேண்டும் என்று மாநில அரசு ஆணை பிறப்பிக்கச் செய்திருக்கிறார் இவர். பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம்.