மாலேகாம் (மகாராஷ்டிரா) வெடிகுண்டு வழக்கை விசாரித்த மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புக் குழுவின் (Anti & Terrorism Squad – ATS)” ஹேமந்த் கர்கரே என்ற ஐ.பி.எஸ். அதிகாரி குண்டு வெடித்த ஒரே மாதத்திற்குள், அதாவது 2008 அக்டோபர் 10ஆம் தேதி, குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டை சுமத்தி சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் துறவியை கைது செய்கிறார். வெடிமருந்தை சுமந்து வந்த மோட்டார் சைக்கிள் சாத்விக்கு சொந்தமானது என்பது தான் மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு. சாத்வி சிறைச்சாலையில் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவித்த துன்பத்துக்கு அளவே இல்லை.
மகாராஷ்டிர மாநிலத்தின் கடும் குற்றவியல் சட்டமான மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டம்” சாத்வி மீது பாய்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் காவல் துறை அதிகாரிகள் முன் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் அளிக்கும் வாக்குமூலமாகவே கருதப்படும்.
கடந்த காங்கிரஸ் அரசு, இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு மையம் (National Investigative Agency – NIA) என்ற அமைப்பிடம் விடுகிறது. இதன் காரணமாக, விசாரணை மேலும் தீவிரமாகிறது. ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்று புதிய சொற்றொடர் கண்டுபிடிக்கப்பட்டு, ஹிந்து அமைப்புகளில் செயல்பட்டுவரும் துறவிகளை நாட்டுக்கு எதிராக கலகம் விளைவித்தனர் என்று குற்றம் சாட்டும் புதிய யுக்தி காங்கிரஸ்காரர்களால் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பொய்க் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி உள்ளிட்ட அனைவரும் எட்டு ஆண்டுகளாக சிறையில் தவித்தனர்.
2014ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே NIA நடுநிலைமையோடு செயல்படத் துணிந்தது. இதன் காரணமாக, மாலேகாம் வெடிகுண்டு விபத்து குறித்து மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முந்தைய அரசு மகாராஷ்டிரா சிறப்புச் சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்தது தவறு என்று அதிகாரிகள் புரிந்துகொண்டனர். மே மாதம் 13-ம் தேதி, மும்பையில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டு அறிக்கையில், சாத்வி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு முகாந்திரமும் இல்லை என்றும் அவர் மீதான வழக்குகள் அனைத்தையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் NIA அதிகாரிகள். மேலும், அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும், அடித்து உதைத்து உள்ள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலங்களே என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது NIA.
இதன் மூலமாக, எந்தவொரு குற்றமும் செய்யாத ஒரு ஹிந்து பெண் துறவி விரைவில் விடுதலை பெறுகிறார்.