அறிந்துகொண்டன அந்நிய நாடுகள்

நம் சகோதரிகள் நமது அருமை அறிவது எப்போது?

பெட்டி ஃப்ரீடன், அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர். 1966ல் பெண் உரிமைகளுக்காக ஒரு தேசிய அமைப்பைத் துவங்கினார். அவர் எழுதிய பெண்மை வட்டம் (The Feminine Mystique)என்ற நூல் தான், அமெரிக்கப் பெண்களைப் போராட்டம் செய்யத் தூண்டியது. இந்தப் புத்தகம் மூலம் தூண்டப்பட்டு உரிமைக்காகப் போராடிய பெண்களுக்கு இன்றுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை. ஓரளவிற்கு பெண்கள் சமுதாயம் தனித்துவத்துடன் விடுதலை அடைந்ததே ஒழிய, சுயமரியாதை, பண்புகள் அவர்களைவிட்டு விலகியது. எங்கும் குடும்ப விரிசல், விவாகரத்து, புறக்கணித்தல் அதிகரித்துள்ளது.

பிறகு, அந்த ஆசிரியர் இந்த விளைவுகளைக் கண்டு, மற்றொரு நூல் எழுதினார்.   அந்த நூலின் பெயர் இரண்டாவது கட்டம் (The Second Stage). அதில் ஆண், பெண் உறவுகள் பற்றிய இந்தியக் கலாசாரத்தின் கருத்துக்களைப் பற்றி எழுதினார். பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட நமது கலாசாரத்தைப் பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறுகிறார். ஆண்கள் துணையில்லாமல் பெண்களுக்கு விடுதலையும் அமைதியும் கிடைக்காது. ஆண்களும் பெண்களும் மனித, சமுதாய வளர்ச்சிக்கு இணைந்து பணிபுரிய வேண்டும். ஒருவருக்கொருவர் அனுசரித்து, விட்டுக்கொடுத்து ஒத்துழைப்புடன் வாழ்ந்தால் தான் முன்னேற்றமும், சுதந்திரமும் கிடைக்கிறது. அந்த ஒத்துழைப்பு, குடும்பம் என்ற அமைப்பின் கீழ்தான் கிடைக்கின்றது. அதனால் குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தனியாக, பெண் விடுதலைக்காகப் போராடுவதால் ஒருவகைப் பிடிவாதமும் சுயநலமும் இறுதியில் சோர்வும் ஏற்படுகின்றன. ஆண்கள், பெண்கள் இணைந்து வாழும் குடும்ப வாழ்வில் வளரும் குழந்தைகள் தான், வலுவான மனதுடன் நெறியாக வளர்கின்றன என்று எழுதியுள்ளார்.page-23_pic_2

ஆசிரியரின் முதல் நூல் மூலம், பெண்கள் தனித்துவம், வேலை வாய்ப்புகள், பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும், குடும்ப வாழ்க்கையில் சிதறல்கள், சீரழிவுகள் தோன்றத் துவங்கின. குழந்தைகளுக்குக் கிடைக்கும் பாசமும், அன்பும் குறைந்து, தனியாக நின்றன.

அவரது இரண்டாவது நூல், முதல் நூலுக்குத் தீர்வு கொடுக்கும் நூலாக அமைந்தது. ஏன் ஆலோசனையே கொடுக்கும் நூலாக இருக்கிறது. ஆசிரியரே ஒரு கட்டத்தில், எனது முதல் நூல், தெளிவில்லாமல், குடும்பக்கட்டுக்கோப்பு இல்லாமல் இருக்க வழி செய்தது. அதற்காக நான் வருந்துகிறேன். பல பெண்களின் வாழ்க்கையில் இந்த நூலின் தாக்கம் இருக்கிறது. இந்தப் போராட்டத்துடன் குடும்பத்தையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அன்பையும் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.   இந்தப் பெண்ணுரிமைப் போராட்டம், நம்மைக் காலம்தோறும் நம்மிடம் இருந்த பண்புகளை எதிர்க்கக் கற்றுக் கொடுத்துள்ளது. பெண்கள் புதிய பாதையை அமைப்பதை விடுத்து குடும்பத்துடன் இணைந்து வேலை செய்வதுதான் எளிது.

கனடாவில் உள்ள பிரேக் த்ரூ (ஆணூஞுச்டு ணாடணூணிதஞ்ட) என்ற பத்திரிகையில் ஒரு முற்போக்கு பெண்மணி, ‘பெண்ணுரிமை போராட்டத்தின் களைப்பால் நான் தவிக்கிறேன். அந்த வாண வேடிக்கைகளின் இறுதி வெளிச்சத்திற்குப் பிறகு இருட்டு நிலவுகிறது. முன்பைவிட, இப்போது அதிகமாக அடிமையாகி விட்டேன். போராட்டப்பெண் என்ற பட்டத்தைப் பெற விரும்பவில்லை’ என்கிறார்.

மேலும் பெட்டிஃபிரீடன், தன்னிடம் பல பெண்கள், எனக்கு நல்ல குடும்ப வாழ்வு கிடைக்குமா” என்று கேட்டு ஏங்குகிறார்கள். அதற்கு ஆசிரியர், அன்பு தான் குடும்பத்தின் அஸ்திவாரம். அது, இணைந்து வாழும் குடும்ப வாழ்வில் தான் கிடைக்கும். அதில் பங்கு மிகவும் முக்கியம். அனைவருடன் இணைந்து வாழ்வதில் தான் மேன்மை கிடைக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு மிகவும் தேவை” என்கிறார்.

இன்று நம்மிடையே மேற்கத்திய பெண்ணியக் காற்று வீசுகின்றது. நம் கலாசாரத்தின் அடிப்படையில் தான் இதற்குத் தீர்வு காண முடியும். ஆண், பெண் இருபாலரும் இயற்கையில் தெய்வீகத் தன்மை உடையவர்கள். இந்த நியதியை மனித உறவுகளில் கொண்டு செல்லும் செயல் முறையில் தான் சமுதாய வளர்ச்சி, மனிதனின் சுதந்திரம், சமத்துவம், தன்மானம், தூய்மை, எல்லாம் கிடைக்கின்றன. இருவரும், ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது தான் நியதி. அதுதான் மகிழ்ச்சி.   இப்படி இருவரும் இணைந்து வாழ்வது தான் இந்தியக் கலாசாரமும் ஆன்மிகமும் மனித சமுதாயத்திற்குக் கொடுத்திருக்கும் பணி.