பாரத தேசத்தின் உள்துறை அமைச்சராக திரு. அமித் ஷா நியமிக்கப்பட்டவுடன், பிரிவினைவாதிகளின் சுரத்து குறைய தொடங்கி விட்டது. காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர், ஐ.பி. உயர் அதிகாரி, தேசிய பாதுகாப்பு படைத் தலைவர், உள்ளிட்டவர்களிடம் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு அலுவலகம், ஜம்மு காஷ்மீர் விவகார பிரிவு, ஒரு முழுமையான அறிக்கையை அமைச்சரின் பார்வைக்கு வைத்துள்ளார்கள். பதவி ஏற்று சில மணி துளிகளில் பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் மீர்வாஸ் உமர் பரூக், காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்போம் என அறிவித்துள்ளார்.
அமித் ஷா உள்துறை அமைச்சார பதவி ஏற்றவுடன், சமூக வளைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் உலா வர துவங்கிவிட்டன. குறிப்பாக காஷ்மீரில் பிரிவினைக்கு ஆதரவாக கலலெறியும் கும்பல்களும், தீவிரவாதிகளும், மாவோயிஸ்ட்களும், நாட்டை துண்டாட துடிக்கும் கும்பல்களும் அமித் ஷாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இஸ்லாமிய நாடுகளிலும் இம் மாதிரியான கருத்துகள் வெளி வர துவங்கியுள்ளன. ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், குவைத் போன்ற நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வரும் இத் தருனத்தில், அமித் ஷா விற்கு எதிரான கருத்துக்கள் பரப்பி வருவது, பிரிவினைவாதிகளின் சதி செயல் என்றால் மிகையாகாது. அரபு நாடுகளிருந்து வெளி வரும் இதழ்களில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட துவங்கி விட்டார்கள்.
அரபு நியூஸ் என்ற பத்திரிக்கையில், வாக்குபதிவுக்கு முன் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் அமித் ஷா பேசியதை விமர்சனம் செய்து, இஸ்லாமிர்களுக்கு ஆபத்து, அஸ்ஸாமில் தயாரிக்கப்பட்ட குடியுரிமை தேசிய பதிவில் பல குளறுபடிகள் இருப்பினும், அதை சரி செய்து உண்மையான இந்தியர்களை அடையாளம் கண்டு மற்றவர்களை வெளியேற்றப்படுவர்கள். இந்த குடியுரிமை தேசிய பதிவு பணியானது, மேற்கு வங்க மாநிலத்திற்கும் விரிவுப்படுத்தப்படும் என கூறியதை மேற்கோள் காட்டி, மேற்கு வங்க முஸ்லீம்களின் வாக்குகளை பறிக்க, குடியுரிமை தேசிய பதிவு என்ற ஆயுதத்தை அமித் ஷா கையில் எடுத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையான அரசியல் ஷரத்து 370 மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி, சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களை அரபு நாடுகளில் சில தீய சக்திகள் செயல்பட துவங்கி விட்டன.
மோடி, அமித் ஷா எதிர்ப்பு பிரச்சாரத்தை தேர்தல் முடிவு வெளிவந்த அடுத்த நாள் பி.பி.சியில் நரோந்திர மோடி ஆட்சியில், இஸ்லாமியர்கள் பயத்துடன் எதிர்காலத்தில் வாழவேண்டிய நிலை என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு, 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை குறிப்பிட்டுள்ளார்கள். ஊடுருவிய இஸ்லாமியர்கள் கரையான்கள் போன்றவர்கள் ( specific group of migrants – Muslims Mr. Shah said, the BJP would find these termites and throw them out ) என அமித் ஷா அஸ்ஸாமில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதை குறிப்பிட்டு, இஸ்லாமியர்களுக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக யூ.கே.விலிருந்து வெளிவரும் டைம்ஸ் யூ.கே. பத்திரிக்கையில் எழுதியுள்ளார்கள். தி குளேப் அன்ட் மெயில் என்ற இதழில் For India’s Muslims, palpable fear of what another Modi term என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், உச்ச நீதி மன்றம், 2002-ல் நடந்த கலவரத்தை Modern-day – Neros என குறிப்பிட்டுள்ளதை 17 ஆண்டுகள் முடிந்த பின்னர் குறிப்பிட்டுள்ளார்கள். 2005-ல் சேராபுதீன் என்கவுன்டர் வழக்கையும் இத்துடன் இணைத்து ராண அயூப் என்பவர் எழுதியுள்ளார். இதே நேரத்தில், அமித் ஷா வை உள்துறை அமைச்சராக நியமித்தவுடன், வல்லபாய் பட்டேலுடன் ஒப்பிட்டும் டுவிட்டரில் பதவிய விட்டுள்ளார்கள்.
அமித் ஷாவுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பவர்கள் என்ற சித்திரத்தை உருவாக்கிறார்கள். இது திட்டமிட்ட ரீதியில் ஒரு மோசமான பிரச்சாரம் நடைபெறுகிறது. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போபால் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாத்வி பிரக்ஞய தாக்கூருக்கு எதிராகவும், ஓடிசா மாநிலத்தில்பாலசோர் தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சரான பிரதாப் சந்திர சாரங்கி என இருவரும் கொலை குற்றவாளிகள் என பிரச்சாரத்தை சிறுபான்மையினருக்கு எதிரானவர்களாக சித்தரிக்கிறார்கள். இது தொடர்கதையாகவே மாறிவிடக் கூடிய ஆபத்து உள்ளது. ஏன் என்றால் பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் திட்டமிட்ட ரீதியில் பின்புறமாக உதவி புரிகிறார்கள். இந்தியாவில் சமூக ஆர்வலராக காட்டிக் கொள்ளும் அர்பன் நக்ஸ்சல் ஹார்ஷ் மந்தர் என்பவர் அரபு நியூஸ் க்கு கொடுத்த பேட்டியில், It is a worrying signal both in the context of defense of the rights of minorities and the rights of liberals to dissent. I am not optimistic today . the government’s plans extent the NRC to other states and to amend the Citizenship Act as “ a complete subversion of the constitutional framework , which is cumulatively worrying. என்கிறார்.
ஊடகங்கள் அமித் ஷா வை நியமித்ததை ஏற்றுக் கொள்ள இயலாமல், புது விளக்கம் கொடுக்க துவங்கியுள்ளார்கள். மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களை, சித்தார்த சங்கர் ராய் முதல்வராக இருந்த போது நடத்திய கொடுமைகளை கண்டு கொள்ளாதவர்கள். மும்பை குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்று குவித்த போதும், காஷ்மீரில் இந்து பண்டிட்களை கொடுமைப் படுத்தி மாநிலத்தை விட்டு விரட்டிய போதும் எழும்பாத கோவம், அமித் ஷா நியமிக்கப்பட்டவுடன் சமூக ஆர்வலர்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது. மித்திலி சரான் என்பவர் இஸ்லாமிய இதழுக்கு அளித்த பேட்டியில் , ஒடிஸாவில் கிறிஸ்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டெனிஸ் மற்றும் அவரது இரு மகன்களை தீயிட்டு கொழுத்தியதை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார். டெல்லி பல்கலைகழக பேரராசிரியர் அபூவர்ணாந்த் என்பவர், அமித் ஷா மற்றும் சாரங்கியை மந்திரியாக்கியது வியப்பளிக்கவில்லை. தேர்தலில் மக்கள் வாக்களி்த்துள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தீவிரவாதியான பிரக்ஞ்யா தாககூர் உங்கள் தலைவர், காந்தியை கொன்றவரை பாராட்டுகிறவர் தான் உங்கள் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இகழ்ந்து குறிப்பிட்டுள்ளதையும் கவனமாக பார்க்க வேண்டும்.
நிதி அமைச்சராக வலம் வந்த சிதம்பரம் கோடிக்கணக்கான ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதை ஆதாரங்களுடன் வெளியிட்ட பின்னரும் கூட, வாய் திறக்காதவர்கள், வெறும் 90 லட்ச ரூபாயை கடனாக கொடுத்து விட்டு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் ராகுல் காந்தி அன் கோ மீது கோப பார்வையை காட்டாதவர்கள், அமித் ஷா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ2 கோடிக்கும், எல் அன் டி யில் ரூ1.4 கோடிக்கும், டி.சி.எஸ்.சில் ரூ 1 கோடிக்கும் பங்குள் வாங்கியதை வெளியிட்டு விமர்சனம் செய்யும் அர்ப்ப புத்தி படைத்த ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு அமித் ஷா மீது கண்டனங்களை தொடுக்கிறார்கள்
தமிழகத்தில் பிரிவினைவாதிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, இந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் பிள்ளைகள் அனைவருமே இந்தி படித்துள்ளார்கள். மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் சன் சைன் பள்ளியில் இந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுகிறது. இந்தி திணிப்பை மையப்டுத்த முக்கியமான காரணம், அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரிவினைவாதிகளுக்கு ஆபத்து என்பதால் மட்டுமே. மொழிக் கொள்கையை கையில் எடுத்துள்ளார்கள்.