எனது அலுவலகத்தில் எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையே ஏன்?
– சீதாராமன், தாம்பரம்
உங்களுக்கென்று நடக்கவேண்டிய ஒன்று யார் தடுத்தாலும் நடந்தே தீரும். நடக்காது என்று இருந்தால் நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் நடக்காது. இது ரமண மகரிஷியின் வாக்கு.
*
– நிர்மலா முரளி, நெல்லூர்
தேவைகளைக் குறைத்து வாழ்ந்தது அன்றைய வாழ்க்கை. தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவது இன்றைய வாழ்க்கை.
நாம் சுவாமி படத்திற்கு அணியும் மாலை சரிந்து விழுந்தால் அது அபசகுனமா?
– சாவித்திரி வாசுதேவன், மதுரை
கடையில் வாங்கும்போதுதான் அது படம். அதே படம் வீட்டிற்கு வந்துவிட்டால் கடவுள். மாலை கீழே விழுந்தால் அதை இறைவனுடைய ஆசியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்குள் நடைபெறும் தண்ணீர் சண்டை தீர என்னதான் வழி?
– பா. சிவானந்தம், கரூர்
வெறும் சுயநலமிக்க அரசியல் தலைவர்கள் இதை ஊதி பெரிதாக்கி குளிர்காய நினைக்கின்றனர். பிரிவினைவாதிகள், தேசத் துரோகிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேசத்தை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். தேசிய தலைவர்கள் திறந்த மனதோடு மாநிலத் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது பற்றி?
– சு. ராகவன், ஹூப்ளி
எஜமான விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு.
* சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அவ்வப்போது வந்து கையெழுத்து மட்டும் போடும் கலைஞர் செயல்…?
– பொற்கை. தமிழினியன், நாகப்பட்டினம்
ஐயோ பாவம்… திருவாரூர் மக்கள், முதலமைச்சர் வேட்பாளர் என்று கருதி வாக்களித்தனர். ஆனால் இன்று ஒரு எம்.எல்.ஏ என்ற நிலையில் கூட தொகுதிப் பிரச்சினைகளை பேசக்கூட வாய்ப்பு இல்லாத நிலை.
எஸ்.ஆர்.எம். கல்லூரி வேந்தர் பச்சமுத்து கைது பற்றி?
– எம். இசக்கியப்பன், காரைக்குடி
130 நாடுகளில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி என ஒரு பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ‘திருமணத்தில் தாலி வேண்டுமா… வேண்டாமா’ என்றெல்லாம் விவாதம் நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, பச்சமுத்துவின் ஊழல் பற்றி விவாதம் நடத்தாதது ஏனோ?
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.