பரதன் பதில்கள்

விபூதி பூசுவதன் மகிமை என்ன?

– கே. நாகராஜன், மேட்டூர்

முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே” – என்பதை எப்போதும் நினைவுபடுத்துவதற்காக…

 

* நான் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவி. தினசரி பள்ளியில் காலையில் அவர்கள் நடத்தும் கிறிஸ்தவப் பிரார்த்தனை எனக்கு உடன்பாடில்லை… என்ன செய்வது?

– ஸ்ரீநித்யா, திண்டிவனம்

எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. கண்களை மூடிக்கொள்ளுங்கள். மனதுக்குள் ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜய ராமா’ என்ற ராம மந்திரத்தையோ, அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையோ சொல்லுங்களேன்!

 

அமெரிக்காகாரன் ஒன்றும் ஜாதகம் பார்ப்பதில்லையே?

– பாரிவள்ளல், தருமபுரி

அங்கும் ஜோதிடம் உண்டு. நம் வாழ்க்கை முறை வேறு, அவர்களின் வாழ்க்கை முறை வேறு. அறம், பொருள், இன்பம், வீடு என்பது நமது ஹிந்துத்வம். அங்கோ சம்பாதிக்கணும்… அனுபவிக்கணும்… இவ்வளவுதான்.

 

நட்பு எவ்வாறு அமைய வேண்டும்?

– வி. நெல்லியான், கடலூர்

பலரைப் பற்றித் தெரிந்து கொள். சிலரோடு பழகு. ஒரு சிலரிடம் மட்டுமே நெருங்கிய நட்பு கொள்” என்கிறார் மு.வ.

 

நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடலாமா?

– சித. ராமநாதன், கோட்டையூர்

தாராளமாக வழிபடலாம். ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதரின் இஷ்ட தெய்வம் நரசிம்மரே. நம்ம கம்பரின் இஷ்ட தெய்வம் கூட அவர்தான். சோளிங்கர் உள்பட பல இடங்களில் நரசிம்மருக்கென்றே தனி ஆலயம் உள்ளது.