- சமாஜத்தின் அன்பர்கள், ‘யோகம்’ என்ற பெயரில் வாரம்தோறும் அவர்களது வசதிக்கேற்ப ஒரு இடத்தில் கூடி, இறைவழிபாடு முடித்தபிறகு பிரசாதம் வழங்குகிறார்கள். அருள்மிகு ஐயப்பனின் பிறந்த திரு நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் கூடி, பூஜை நடத்தி பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
- தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களில் 800 யோகங்கள் செயல்படுகின்றன. இதில் 9 யோகங்கள் மகளிரால் துவங்கப்பட்டன.
- ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர காலங்களில் (நவம்பர் 15 முதல் ஜனவரி 21 வரை) ஐயப்ப பக்தர்களுக்காக உணவு, இருப்பிட வசதி மருத்துவ சேவை, வாகன பழுதுகளை நீக்கும் பணி, தகவல் மையம் போன்ற சேவைகள் 2016 ல் 100 இடங்களில் நடைபெற்றன.
- மண்டல, மகர காலங்களில் சமாஜத்தின் மூலம் சபரிமலை அன்னதானத்தில் 15 லட்சம் பக்தர்களும், எரிமேலி, கூனன்குரா ஆகிய இடங்களில் நடைபெற்ற அன்னதானத்தில் 50,000 பக்தர்களும் பயன்பெற்றனர்.
- 18 ஆண்டுகள் சபரிமலை யாத்திரை முடித்து, சபரிமலை யாத்திரைக்கு வழிகாட்டியாக விளங்கும் குருசாமிகள் அந்தந்த மாவட்டங்களில் சமாஜ அன்பர்களால் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
- சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்கு தேவையான காய்கறிகள் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலும் பலசரக்கு பொருட்கள் ரூ. 10 லட்சம் மதிப்பிலும் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
- ‘துய்மை சபரிமலை, எரிமேலி’ திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக சபரிமலையிலும் எரிமேலியிலும் 2,000 சமாஜ தொண்டர்கள் (இருபாலரும்) தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
**************************************
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் கடந்த 2008 நவம்பரில் நம்பியார் குருசாமியின் புதல்வர் சுகுமார் நம்பியார் தலைமையில் தொடங்கப்பட்டது. சபரிமலை செல்வதற்கென கடைப்பிடிக்கக் கூடிய விரத முறைகள் பரப்புதல், சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஐயப்ப தர்மத்தை பரப்புதல் இவை சமாஜத்தின் குறிக்கோள்.
கேரளா, வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு, வடகர்நாடகா, தென்கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா, புதுச்சேரி மகாராஷ்டிரா மாநிலங்களில் சமாஜத்தின் அமைப்புகள் உருவாகியுள்ளன. குஜராத், டில்லி, கோவா மாநிலங்களில் மாவட்ட, மாநில அமைப்புகள் உருவாக்க முயற்சி நடக்கிறது. மலேசியா நாட்டிலும் புதிய அமைப்பு உருவாகவுள்ளது.
**************************************