நவம்பர் 13 அன்று பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக 129 பேர் கொல்லப்பட்டார்கள், நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த பயங்கரவாத செயலை செதவர்கள் இஸ்லாமிய அரசு ( ஐ.எஸ்) என்ற அமைப்பினர். இரண்டாம் உலகப் போருக்கு பின் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் என ஊடகங்கள் தெரிவித்தன. பாரீஸ் குண்டு வெடிப்பிற்கு பின் ஐரோப்பிய நாடுகள் தங்களின் நிலையிலிருந்து சற்றே பின்வாங்கி, இஸ்லாமிய அரசு என்ற பயங்கரவாத அமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இதன் மூலம் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திடப்பட்டுள்ளது.
உலகின் எஜமானர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உருவாவதற்கு ஒரு வழியில் காரணமானவர்கள் என்றால் மிகையாகாது. 1980-ல் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவின் படைகள், கம்யூனிஸ்ட் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய போது, உருவானது தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு. தாலிபான் அமைப்பு உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இருந்த நாடு அமெரிக்கா என்றால் முற்றிலும் உண்மையாகும். தாலிபான் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற ஒசாமா பின் லேடன் உருவாக்கிய அமைப்பு அல்-காயிதா. ஈராக் அல்-காயிதா தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ். என்று மாற்றிக் கொண்டது.
தற்போது கூட அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஒச்ட்ட்ச்ணா தடூ-ஊதணுணூச் என்ற அமைப்பை தடை செயவில்லை. இந்த அமைப்பு பாகிஸ்தான் இஸ்லாமிய சகோதர அமைப்புடனும், அல்-காயிதாவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த பயிற்சி முகாமில் பயிற்சி அளிப்பவர்கள் ராணுவ அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம்களை அமெரிக்க முஸ்லிம்கள் அமைப்பு நடத்துகிறது என்பது நன்கு தெரிந்தும், அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. அரசுக்கு தகவல் கொடுத்த பின்னரும் கூட அமெரிக்க அரசு தடைவிதிக்கவில்லை. அமெரிக்காவில் 23 முதல் 35 இடங்களில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
1989-ம் வருடம் அமெரிக்க முஸ்லிம் அமைப்புகளின் செயல் மையமான கொலராடோவில் நடத்திய சோதனையின் போது வெடிமருந்து, வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், ஆட்சேபகரமான பிரசுரங்கள், ராணுவ ரகசியங்கள் அடங்கிய கோப்புகள் கண்டு பிடிக்கப்பட்ட போதும், அமெரிக்க அரசு முஸ்லிம் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அமெரிக்க அரசின் உளவு பிரிவான எப்.பி.ஐ.யின் தர்பாரில் –தண்டூடிட்ண் ணிஞூ அட்ஞுணூடிஞிச் (–ˆஅ) என்ற அமைப்பு அவர்களின் கைப்பாவை; முஸ்லிம்ஸ் ஆப் அமெரிக்காவின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் ஒரு எப்.பி.ஐ. அதிகாரி.
ஐ.நா. சபையின் செயல்பாடு
பயங்கரவாத நடவடிக்கைகள் நிகழும்போது அதற்கு கண்டனர் தீர்மானம் இயற்றுவது ஒன்று தான் ஐ.நா.சபையின் பயங்கரவாத எதிர்ப்பு செயல். 1972லிருந்து ஐ.நா.சபை பயங்கரவாத செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றுகிறது. பல நேரங்களில் ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகள் கூட்டாக பயங்கரவாத்த்தை எதிர்க்க வேண்டும் என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்கிறது. பயங்கரவாத செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடக்குகின்றன என்பதே. 2013ல் ஐ.நா.சபை இயற்றிய தீர்மானத்தில், பல்வேறு தேதிகளில் இயற்றிய தீர்மானத்தை கோடிட்டு பயங்கரவாத செயல்களை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டவுடன் தீர்மானம் முடிவுக்கு வந்தது.
நவம்பர் 13ம் தேதி பாரீஸில் குண்டு வெடிப்பு நடத்தியவர்களில் முக்கியமானவன் அப்துல் ஹமீது அபாவூத் என்பவன். இவன் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்தவன், மொராக்கோவை பூர்வீகமாகக் கொண்டவன். பெல்ஜியம் நாட்டு காவல் துறை அதிகாரிகளை படுகொலை செய திட்டம் தீட்டியவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், அப்துல் ஹமீதை தவிர மற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். பாரீஸ் நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலை தொடர்ந்து, பிரான்ஸ் அரசு 150 இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக இஸ்லாமிய மதவாதிகளை குறி வைத்து நடத்திய சோதனையில் ஏராளமான கலஷ்னிகோவ் ரக துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஆடைகள், கைத் துப்பாக்கிகள், இன்னும் பல்வேறு விதமான ஆயுதங்கள் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன.
சோதனையை விட உடனடியாக சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். முகாம்கள் மீது விமானப் படை தாக்குதல்கள் நடத்தி, பிரான்ஸில் மூன்று மாத நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல ஐரோப்பிய நாடுகளில் மசூதிகள் தாக்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்தன. குறிப்பாக கனடா நாட்டில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. போர்லாண்ட் ரிஸ்வான் மசூதியின் முன் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்தன, ஆர்பாட்டகாரர்கள் கையில் வைத்திருந்த பாதாகைகளில் எழுதிய வாசகம் கணூணிதஞீ ணாணி ஞஞு ச்ண டிணஞூடிஞீஞுடூ, ஐண்டூச்ட் டிண் ச் ஃஐஉ என்பதாகும். பிரான்ஸ் நாட்டில் உள்ள பல பகுதிகளில் மசூதியின் மீதும், காபாப் உணவகத்தின் மீதும், இஸ்லாமியர்களை நாட்டை விட்டு துரத்துங்கள் என்ற கோஷத்துடனும் தாக்குதல் நடந்தன. நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி நாளிதழ்களும் மற்ற ஊடகங்களும் விருப்பு வெறுப்பு இன்றி செய்தி வெளியிட்டன. ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகாலமாக இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கு ஆட்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்தபோதும் கூட, இந்திய ஊடகங்கள் வெளியிடும் செதிகள் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளப்படுத்துவது கூட கிடையாது!
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.
இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் மீது இந்திய அரசு தடை விதித்த பின்னர், இந்த அமைப்பில் இருந்தவர்கள் நாட்டை விட்டு கள்ளத்தனமாக வெளியேறி, பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். மீது பற்று பாசம் கொண்டவர்கள், இந்த பயிற்சி முகாம்களில் உள்ள சிலரை கொண்டு இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்ற செதி தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே மும்பை மாநகரை சார்ந்த ஆரிப் மஜீத் என்பவன் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைமையிடத்தில் பல்வேறு நாடுகளை சார்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட போது, கலந்து கொண்டவன். இவன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவே தெரிகிறது. 2014ம் வருடம் ஜூலை மாதம் ஐ.எஸ் அமைப்பில் தன்னை காலிப் என அறிவித்துக் கொண்ட அபுபக்கர் பாக்தாதி தனது முதல் உரையில் மூன்று இடங்களில் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளான். ஒன்று, உலகில் இஸ்லாமியர்களுக்குரிய உரிமையை கொடுக்க மறுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்றார். இரண்டாவது, நீண்ட காலமாக காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்கள் கொடுமைப் படுத்தப்படுவதாகவும் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டார். மூன்றாவதாக கலீபாவின் ஆட்சி இந்தியாவிலும் மலர வேண்டும் என குறிப்பிட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ் நபர்கள் பல சந்தர்பங்களில் தங்களின் நோக்கங்களை தெளிவாக அறிவித்துள்ளார்கள். இறுதி போர் நடத்துவதற்கு முன் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்க வேண்டும் என்பது முக்கியமானதாக கருதுகிறார்கள். இதற்காகவே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் எல்லைப் பகுதிகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் குராஸன் (ஓடணிணூச்ண்ச்ண) என்ற தனி மாகாணத்தை 2015 ஜனவரியில் அறிவித்தார்கள். .
இனிமேலும் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை என்பதற்கு பதில் உரிய கடுமையான தாக்குதல் நடவடிக்கையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவும் உள்ளுர் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக சட்ட திருத்தமுமே தேவை என்பது தான் பாரீஸ் குண்டு வெடிப்பு உணர்த்தும் முக்கியமான பாடம்.