பொங்கலோ பொங்கல்!

ற்வீஙர்த்ஈ சர்ஹீஜஈ ப்ர்த்ஈ ர்த்ஹீ!

பழையன கழிதல் ‘போகி’

மார்கழி மாத கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. போகி என்பதற்கு ‘பழையன கழிதல்’ என்று பெயர். எனவே வீட்டில் தேவையில்லாத, பயன்பாடற்ற பழைய பொருட்களை குவித்து எரித்து வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். கிராமங்களில் இன்றும் இந்தப் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகரங்களில் எதையாவது கொளுத்த வேண்டும் என நினைத்து பழைய டயர்களைப் போட்டு கொளுத்துகிறார்கள். எனவே, மாசு இல்லாத போகியை கொண்டாடுங்கள் என அதிகாரிகள் அறிக்கை விட வேண்டியதாயிற்று. வீடு மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் சுட்டுப் பொசுக்கி விட வேண்டும் என்ற தத்துவமும் இதில் அடங்கியுள்ளது.

மகர சங்கராந்தி

பொங்கல் திருநாளை வட பாரதத்தில் ‘மகர சங்கராந்தி விழா’ என கொண்டாடுகிறார்கள். மகர சங்கராந்தி அன்று தான் சூரியன் தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு, வட திசை பயணத்தைத் துவக்குகிறான். சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் ‘மகர சங்கராந்தி’ என அழைக்கின்றார். சூரியனை மையமாக வைத்து பகல் – இரவு என்று நாளைக் கணக்கிடுகிறோம். அதே போன்று சந்திரனை மையமாக வைத்து சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் என்று மாதத்தைக் கணக்கிடுகிறோம். அதே போன்று தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று ஆண்டைக் கணக்கிடுகிறோம். மகர சங்கராந்தி அன்று உத்தராயணம் தொடங்குகிறது. இந்த நாளில் உயிர் பிரிந்தால் நல்லது என இந்த நாளை எதிர்நோக்கி பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் உயிர் தரித்திருந்தார். இந்த நன்னாளில் பாரத நாட்டின் பல பகுதிகளில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடுவது விசேஷமானது.

pongal

தைப்பொங்கல்

ந்த விழா சூரிய பகவானை வழிபடும் நன்னாளாகும். சூரிய வழிபாடு பாரத நாடு முழுவதும் காலங் காலமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனையே முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் ‘சௌரம்’ பிரிவினர் என

அழைக்கப்பட்டனர். ஒரிஸ்ஸாவில் ‘கோனார்க்’ எனும் ஊரில் பிரசித்தி பெற்ற சூரியனின் திருக்கோயில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சூரிய நாயனார் கோயில் என்ற ஊரில் சூரியனுக்கான மகத்தான ஆலயம் உள்ளது. சென்னைக்கு அருகில் ஞாயிறு என்ற ஊரிலும் கோயில் உண்டு.

மாட்டுப் பொங்கல்

வருடைய வீட்டில் ‘கோமாதா’ இருக்கிறாளோ அந்த வீடுகளில் ‘கோ பூஜை’ செய்வது மரபு. வயலுக்கு எருவையும், உழுவதற்கு எருதையும் அளித்து பொங்கலுக்குத் தேவையான பாலையும் அளித்து, மனிதனுக்கு தாய்க்குத் தாயாக இருந்து வரும் ‘கோமாதா’வை இன்று விசேஷமாக பூஜிக்கவேண்டும்.

மாட்டுக் கொட்டிலை சுத்தமாகக் கழுவி கோலமிட்டு – பசுக்களை குளிப்பாட்டி மஞ்சளும், குங்குமமும் இட்டு – பூமாலை அணிவித்து பூஜா விதான நூலில் கூறப்பட்டுள்ளவாறு கோபூஜை செய்ய வேண்டும். காளைகளுக்கும் கழுத்துக்கு சலங்கை கட்டி, கொம்புக்கு வண்ணம் தீட்டி – நெட்டி மாலைகளை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வர். இந்த ஆவினத்திற்கென தயாரித்த விசேஷப் பொங்கலை இவற்றிற்கு அளித்து, மனிதன் தன் நன்றியை வெளிப்படுத்துவதால் இது ‘மாட்டுப் பொங்கல்’ எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தக் காளைகளோடு பொருதி வெற்றி பெற இளங்காளையர் பங்குகொள்ளும் ‘ஜல்லிக்கட்டு’ ‘மஞ்சுவிரட்டு’ போன்ற விளையாட்டுக்கள் விசேஷமாக நடைபெற்றுவந்தன. மதுரை ‘அலங்காநல்லூரில்’ இன்றும் ஜல்லிக்கட்டு பிரசித்தமான ஒன்றாகும்.

காணும் பொங்கல்

காணும் பொங்கல்’ எனும் பண்டிகை சென்னை போன்ற ஒரு சில ஊர்களில் நடைபெறுகிறது.

அன்று உற்றார் உறவினரை சந்திக்கச் செல்லுதல் – குடும்பத்தினர் அனைவரும் கலவை சாதங்கள் தயார் செய்து கொண்டு கடற்கரைக்குச் சென்று குதூகலிப்பது என்று இந்த நாள் அமைகிறது. அனைத்து ஊர்களிலும் இந்த நாள் இப்படி கொண்டாடப்படுவதில்லை. மூன்று நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுவதுதான் காலங்காலமான மரபாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் ஒரு சில ஊர்களில் மட்டும் ‘காணும் பொங்கல்’ இடம் பெற்றிருக்க வேண்டும். பொருள் உணர்ந்து இப்பொங்கல் விழாவை நாம் கொண்டாடி நமது பண்பாட்டைக் காப்போமாக!

 

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்

ஜனவரி 15, 2016 வெள்ளி அன்று காலை 8.40 முதல் 9.40 மணிக்குள்ளாக பொங்கல் பானையை வைக்கலாம்.

மாட்டுப்பொங்கல் நாளன்று கோபூஜை

ஜனவரி 16, 2016 சனிக்கிழமை அன்று காலை 10.40 மணிக்கு மேல் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உகந்தது.