ஹிந்து வாக்கு சக்திக்கு அரசியல்வாதிகள் தலைவணங்குவார்கள்

ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் ஹிந்து வாக்கு வங்கி இல்லாததே. இது குறித்து இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலனுடன் ஒரு சந்திப்பு.

வங்கி புரிகிறது; வாக்கு புரிகிறது. ஹிந்து வாக்கு வங்கி என்றால் என்ன?

வங்கியில் சிறுகச் சிறுக பணத்தை சேமித்தால்தானே, தேவைப்படும்போது பயன்படுத்த முடியும். ஹிந்துக்கள் இழந்த உரிமைகளை, ஏற்படும் ஆபத்துகளை எடுத்துச் சொல்லி, குக்கிராமங்கள் முதல், நகர வார்டுகள் வரை கமிட்டிகள் அமைக்க வேண்டும். பாரதம் இழந்த நிலப்பகுதி, பயங்கரவாதத்திற்கு பலியான ஹிந்து சகோதரர்கள், அந்நிய மதங்களால் ஏமாற்றப்பட்ட குடும்பங்கள், கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் சூழல் முதலியவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். நமது ஒருமித்தக் குரலுக்கு, நமது வாக்கு பலத்திற்கு அரசியல்வாதிகள் தலைவணங்கியே ஆக வேண்டும். அதற்காக தொடர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்.

வேட்பாளர்களுக்கு ramagobalக்கள் நிபந்தனை விதித்தால் வகுப்புவாதமா?

இல்லையே! ஹிந்துக்களின் கோரிக்கை எப்படி வகுப்புவாதம் ஆகும்? எல்லோருமே கோரிக்கை வைக்கிறார்களே…! கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தான் மதரீதியாக கோரிக்கை வைத்து வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். ஷியா, சன்னி என்றும் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்ட் என்று பிரிவுகள் இருந்தாலும் கிறிஸ்தவ, முஸ்லிம் என்கின்றபோது ஒற்றுமையாக மசூதிகளில், சர்ச்சுகளில் தீர்மானிக்கப்பட்டவைகளை அரசிடம், அரசியல்வாதிகளிடம் நிபந்தனை விதிக்கிறார்கள். ஏன்… சிறையில் உள்ள பயங்கரவாதிகளை விடுவிப்போம் என்று சொல்லும் கட்சிக்கே எங்கள் ஓட்டு” என்கிறார்களே!

ஹிந்து வாக்கு வங்கி தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

பல ஆண்டுகளுக்கு முன்பே கன்யாகுமரி மாவட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ள இம்மாவட்டத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் பொன்னார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே!

சமீபத்தில் கேரள உள்ளாட்சி கிடைத்துள்ள வெற்றிக்கு காரணம் ஹிந்து வாக்கு வங்கிதான். முஸ்லிம் பெரும்பான்மை வாணியம்பாடியில் எம்ஜிஆர் ஹிந்து ஒருவரை நிறுத்தி வெற்றிப் பெறச் செய்தாரே!

ஹிந்து முன்னணி சொன்னாலும் ஜாதி பேதங்களை மீறி, கட்சி வேறுபாடுகளை நீக்கி, ஹிந்து என்ற முறையில் வாக்காளர்கள் சிந்தித்து செயல்படுவார்களா?

நாம் நிறுத்தும் வேட்பாளர் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக, சொந்த லாபம் கருதாதவராக இருக்க வேண்டும்.

கீதையில் பகவான் கிருஷ்ணன் உரைத்தது போல, பலனை எதிர்பாராமல் நாம் பணி செய்துவந்தால், மிகப்பெரிய பலன் பின்னர் கிடைக்கும்.

மக்கள் தொடர்பு என்பது ஒரு ஆர்ட். அது ஒரு சயின்ஸ். மேன் டூ மேன் (Man to Man) என்கின்ற வகையில் தொடர்பு இருக்க வேண்டும். நாம் பொருட்கள் வாங்கும் கடைக்காரர், ஆட்டோ டிரைவர், எதிர்வீட்டில் வசிப்பவர் என அனைவரிடமும் நமது தொடர்பு எப்போதும் இருக்க வேண்டும்.

ஹிந்து முன்னணியின் வீச்சு அதிகம். எப்படிப்பட்ட வேட்பாளர் தேவை என்பதை சுட்டிக்காட்டுவோம். அதே சமயம், இந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லமாட்டோம். நாம் தொடர்ந்து ஹிந்து ஒற்றுமைப் பணி செய்து வரவேண்டும். தேசம் பாதுகாக்கப்படும்.