வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது
குறிப்பாக ஐந்து நீதிபதிகளும் மக்கள் மனத்தையும் சட்ட வரம்புகளையும் மத நல்லிணக்கத்தையும்
கருத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளனர் என இந்து முன்னணி கருதுகிறது.
இந்த தருணத்தில் இந்த ஒரு நல்ல தீர்ப்புக்காக பல ஆயிரம் பேர் தங்கள் உயிரை பலி தந்து
உள்ளனர். அவர்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவது மிக.அவசியம்.
அதே சமயத்தில் பொதுமக்களும், அனைத்து அரசியல்வாதிகளும், அமைப்புகளும் தேசிய
ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஐந்து நீதிபதிகளும் வழங்கிய இந்த மகத்தான தீர்ப்பை சிலர் வேண்டுமென்றே திரித்து கூறுவது
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
இவ்வாறு கருத்து கூறுபவர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல மக்களும் இத்தகைய விஷமிகள் புறந்தள்ள வேண்டும் என இந்துமுன்னணி
கேட்டுக்கொள்கிறது.
தேசியப் பணியில்
இராம.கோபாலன்.