ஹரிஹர புத்திரன் ஐயப்பன் நல்லிணக்கம் தரும் நாயகன்!

 

ஜாதி, பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமுதாய சமத்துவத்தைக் கொண்டுவரும்  முயற்சி ஐயப்ப பக்தியின் மூலம் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது. மாலை அணிவதன் மூலம் ஒவ்வொருத்தரும் தற்காலிக துறவறம் மேற்கொள்கின்றனர். லௌகீக விஷயங்களில் இருந்து மனதை விலக்கி ஆன்மீக விஷயத்தில் செலுத்த முயற்சி மேற்கொள்கின்றனர்.  ஆகவே அவர்கள் தனக்குள் மறைந்திருக்கும் இறைவனைத் தேடும் உன்னதப் பணியை துவக்குகின்றனர். அதனால் மாலை அணிந்தவர்கள் அனைவரும் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து ஐயப்பன்மார்களாக, சுவாமிமார்களாக அழைக்கப்படுகின்றனர்.

விரதத்தில் கண்டிப்பு:

சுவாமி ஐயப்பன் விரதங்களில் சமரசம் செதுகொள்பவரல்ல. பக்தர்களின் நலன்களைப் பூர்த்தி செவதில் வள்ளலான ஐயப்பன் விரதங்கள் விஷயங்களில் கடுமையானவர். தன்னைக் காண வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத அனுஷ்டானங்களைப் பற்றி ஐயப்ப சுவாமி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். ஐயப்பமார்களின் புலன்களை அடக்கி மன சுத்தியை மேம்படுத்தவும் ஒருமுகப்படுத்தவும் அதன்மூலம் இறைநாட்டத்தை அதிகப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விரதங்களில் எவ்வித மாற்றங்களும் செய யாருக்கும் உரிமையில்லை. மாலை அணிந்தபின் நமது எண்ணம், சிந்தனை, வாக்கு, செயல் புனிதமானதாக இருக்க வேண்டும். நமது ஆசைகளை 40, 50 நாட்களுக்கு கட்டுப்படுத்துவதன் மூலம் சுவாமிகளுக்கு மட்டுமின்றி அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக நாட்டம்  ஏற்படுகிறது. விரதங்களை எந்தவிதமான சமரசமும் இன்றி கடுமையாக கடைப்பிடிக்கும் சுவாமிகளுக்கு மட்டுமே 18 படிகள் ஏறும் உரிமை உண்டு.

சபரிமலைக்குச் செல்ல 48 நாட்கள் விரதம் இருக்கவேண்டும். பொதுவாக மனம், உடல் தூமைப்பட்டு எண்ணங்கள் மேம்பட 48 நாட்கள் விரதங்கள் தேவைப்படுகிறது. ஆகவே விரத நாட்களின் எண்ணிக்கை எக்காரணத்தாலும் குறைக்கப்படக் கூடாது. விரத நாட்களில் எத்தகைய போதைப் பொருளையும் ஐயப்பமார் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

தற்காலிக துறவு:

மாலை அணிவதன் மூலம் ஐயப்பமார்கள் தற்காலிக துறவறம் மேற்கொள்கின்றனர். துறவிகளுக்கு பிறப்பு, இறப்பு, சுகம், துக்கம் அனைத்தும் சமமே. ஆகவே மிக நெருங்கிய உறவினர்கள் இறந்து நாம் இறுதிக்கடன்கள் செயவேண்டும் என்கின்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே விரதத்தை முடித்துக்கொண்டு மாலையை கழற்றவேண்டும். மற்றபடி ஐயப்பமார்களுக்கு எவ்விதத் தீட்டும் கிடையாது. அதுபோலவே நமது குடும்பத்திலோ, உறவினர்களோ இறந்துவிட்டால் குல வழக்கப்படி செயவேண்டிய இறுதிக்கடன்கள் செதுமுடித்தபின் அவரவர் விருப்பத்தின்படி எந்தவொரு கோயிலுக்கும் செல்லலாம். ஆகவே ஒரு ஆண்டுக்காலத்திற்கு மாலை அணியக்கூடாது என்பது தவறான கூற்று.  மூன்றுமுறை தொடர்ந்து செல்லவேண்டும் போன்றவை கட்டாயமில்லை. நமது பொருளாதார,  குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்ப எப்போதெல்லாம் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்லமுடியுமோ, அப்போதெல்லாம் செல்லவேண்டும்.

மாலை அணியாமல், குறைந்த விரதத்துடன் மாற்றுப் பாதையில் ஐயப்பனை தரிசிக்கச் செல்லலாம் என்று எந்த ஒரு சுவாமி சோன்னாலும், குருசாமியே சோன்னாலும் தயவு செது ஏற்றுக்கொள்ளாதீர்கள். சபரிமலை யாத்திரையின் நம்பிக்கைகளையும் புனிதத்தன்மையையும் முழுமையாக உணர வேண்டுமெனில் பெருவழியில் செல்லவேண்டும். உடல்நல குறைவினாலோ, கடுமையான நேர நெருக்கடியினாலோ மட்டுமே பம்பை வழி செல்லவேண்டுமே தவிர, அனைத்து ஐயப்பமார்களும் பெருவழியில் செல்வதற்கு முயற்சி செல்லவேண்டும்.

காவி அறிமுகம்:

கேரள மாநிலத்தில் விரதம் இருப்பவர்கள் பொதுவாகக் கருப்பு நிற வேஷ்டியை அணிகிறார்கள். கருப்பு நிறம் வேள்வித் தீயின் பிரசாதமான திருநீற்றைக் குறிக்கிறது. அடர்ந்த காடுகளில் எனது குழுவை சார்ந்தவர்களை தூரத்திலிருந்தே அடையாளம் காண்பதற்காக 1956ம் ஆண்டிலிருந்து நான் காவி நிறத்தை அறிமுகப்படுத்தினேன். காவி நமக்கு மிகவும் புனிதமானது. வேள்வித் தீயை குறிக்கிறது. கடுமையான ஆன்மிக பயிற்சி என்னும் நெருப்பின் மூலம் தன்னை சுத்தப்படுத்தி மேன்மையான புது வாழ்க்கைக்கு செல்ல விரதம் மேற்கொண்டுள்ளதை கருப்பு, காவி உடைகள் தரிப்பதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோம்.

குருசாமிகள்  தங்களது குழுவில் எல்லா ஜாதியினரும் இனத்தவரும் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்களிடையே ஏழை, பணக்கார பேதம் பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். யாத்திரையின் போதுள்ள வேலைகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஒரு ஐயப்பனுக்கு உதவி செவதற்காகவே இன்னொரு ஐயப்பனை மாலை அணிவித்து கூட்டிவருவது என்பதை அனுமதிக்கக் கூடாது.