கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பாலியல் ரீதியாக பெண்கள் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு இது போன்ற சம்பவங்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்தான் முன்னோடி என திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசியுள்ளார். அவரது பேச்சு அருவருக்கத்தக்கது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கேரளத்தில் ஜோசப் என்ற ஒரு கல்லூரி பேராசிரியர் தேர்வில் நபிநாயகம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். இந்த கேள்வி எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சொல்லி முஸ்லிம்கள் கண்டன குரல் எழுப்பினார்கள். அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். கல்லூரி நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியது. இவ்வளவுக்குப் பிறகும் அவர் சர்ச்சில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தபோது ஜிகாதி வெறியர்கள் அவரது கையை வெட்டினார்கள். இப்படியெல்லாம் ஹிந்துக்கள் கொதித்தெழ மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் வீரமணி இவ்வாறு பேசியுள்ளார்.
யாராவது ஒருவர் இதுபோன்று இயேசுநாதர் பற்றியோ, நபிநாயகம் பற்றியோ பேசியிருந்தால் என்ன கதியாகியிருக்கும்?
ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள்.. என்னதான் அவர்கள் மதத்தைக் கிண்டலும், கேலியும் செய்தாலும் அதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
இத்தகைய செயல்கள் தொடருமானால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹிந்து விரோதி எவருக்கும் ஹிந்துக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை வந்தால் மட்டுமே இவர்களுக்கு பயம் வரும்.
திமுக கூட்டணித் தலைவர் ஸ்டாலின் இதுபற்றி தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். நயன்தாராவைப் பற்றி பேசியதற்காக ராதா ரவியை கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலின், ஹிந்து தெய்வத்தை கொச்சைப் படுத்திய வீரமணியின் பேச்சைக் கண்டிப்பாரா? அவரது பிரச்சாரம்தன் கட்சி வேட்பாளர்களுக்கு வேண்டாம் என்று அறிவிப்பாரா?