வெண்பனிமலையில் வெற்றி வேலன் ஆலயம்

குன்றுதோறாடும் குமரன் என்றழைக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் மலைகளில் எல்லாம் முருகன் ஆலயம் அமைந்துள்ளது என்பதனை நாம் எல்லோரும் பெருமையுடன் நினைக்கிறோம்,- போற்றுகிறோம். ஆனால் இந்த பாரம்பரியம் பாரதத்தின் வட எல்லையான உத்தராகண்டிலும் பின்பற்றப்
படுவதை நாம் காண்கிறோம்.
ஜெய் கார்த்திக் ஸ்வாமி கோயில்
இங்கு மட்டும் அல்ல நம் நாட்டின் பல வட மாநிலங்
களிலும் முருகன் கார்த்திக்,- கார்த்திகேயா என்று அழைக்கப்
படுகிறார். இந்த ஜெய் கார்த்திக் ஸ்வாமி ஆலயம் உத்தராகாண்ட் மாநிலத்தில், ருத்ரபிரயாக் மாவட்
டத்தில் உள்ளது. மாவட்டத் தலைநகரில் இருந்து போக்ஹ்ரி என்ற ஊருக்கு செல்லும் பாதையில் 38 கி மீ தொலை
வில் உள்ள கனக் சவுரி என்ற கிராமத்தில் இருந்து 3 கி மீ செங்குத்தான மலை ஏறிச்
சென்றால் கார்த்திகேயனைத் தரிசனம் செய்யலாம்.
எழில் மிகு பிரதேசம்
இந்த ஆலயம் கர்வால் இமயமலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 3,048 மீட்டர் (சுமார் 10,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு புறம் உயர்ந்த பனி படர்ந்த மலைச் சிகரங்கள், மறுபுறம் ஆழ்ந்த பள்ளத்தாக்குகள், பெரும் அருவிகளும், அமைதி
யாக கசிந்தோடும் சிற்றாறு
களும், பாதையெங்கும் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள், ரீங்
காரமிடும் வண்டுகள், ராகம் பாடும் பறவைகள் என்று செங்குத்தான உயர்ந்த பாதை
யில் பயணம் என்றாலும் மெதுவாக நிதானமாக களைப்
புத் தெரியாமல் இறைவன் திருநாமங்களை உச்சரித்தபடி யாத்திரை மேற்கொள்ளலாம்.
தல புராணம்
கயிலையில் ஒரு நாள் அண்ணன் விநாயகனுக்கும் தம்பி குமரனுக்கும் வழிபாட்
டில் முன்னுரிமை யாருக்கு என்று விவாதம். பஞ்சாயத்துக்கு பெற்றோர்களான பரமசிவன்- பார்வதியிடம் போனார்கள். ‘யார் உலகை முதலில் சுற்றி வருகிறீர்களோ அவருக்குத் தான் முதல் மரியாதை’ என்று ஈசன் திருவிளையாடலைத் துவக்கி வைத்தார். குமரன் மயிலேறி விருட்டென கிளம்ப விநாயகன் அம்மை அப்பனை சுற்றி வந்து முன்னுரிமை பெற்றார். (என்ன, நாம் அறிந்த மாம்பழம் – – பழனி மலை தல புராணம் நினைவுக்கு வருகிறதா?) அடுத்து வருகிறது ஒரு திருப்பம். கயிலைக்கு ஆவலுடன் திரும்பிய முருகன் வருத்தமுற்று நேரே இந்த தலத்துக்கு வந்த முருகன் தவமி
யற்றி தன் தசையினை அன்னை பார்வதிக்கு ஹோம குண்டத்தில் தானம் அளித்து விட்டு எலும்பினை சிவ பெரு
மானுக்கு காணிக்கையாக்கி அருவமாய் நீக்கமற பிரபஞ்சம் எங்கும் கலந்தார் என்பது இந்த ஊர் தல வரலாறாய்ச் சொல்லப் படுகிறது. முருகன் – கார்த்திகேயன் தவக் கோலத்தில் நின்ற பாறையே இன்று மூலஸ்
தானம்- கர்ப்பகிருகம். வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் ஆறு திருமுகங்களும் எலும்பு வடிவமைப்பும் வெள்ளி கவச
மாக சாற்றப்பட்டிருக்கின்றன.
ஸ்காந்த புராணத்தில் குறிப்
பிடப்படும் கிரௌஞ்ச பர்வதம் (மலை) இந்தப் பகுதிதான் என்று நம்பப்படுகிறது.
கார்த்திகேயனும் கந்தனும் ஒருவரே
கார்த்திக் ஸ்வாமியும் கந்தசாமியும் ஒருவரே என்பதில் பின்னாளில் யாருக்கும் ஐயம் வந்துவிடக்கூடாது என்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நக்கீரப்பெருமான் நிறுவிவிட்டுப் போயிருக்
கிறார். கார்த்திகேயன் என்ற பெயர் ஏன் வந்தது? கார்த்திகை நட்சத்திர பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டதால் தானே? இதனை புலவர் திருமுரு
காற்றுப்படையில் எப்படி குறிப்பிடுகிறார் பாருங்கள்:
” நெடும்பெருஞ் சிமையத்து நீலப்
பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ”
( பகுதி 6 -பழமுதிர்சோலை- வரிகள் 253-–255)
பொருள் :
சிவபெருமானின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒரு
வரான] தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் ‘சரவணம்’ எனப்படும் தர்ப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்
டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு முகங்
களை உடைய பெருமானே !
வாசகர்களே, எதிர் வரும் ஸ்கந்த சஷ்டி நாட்களில் இந்த புண்ணிய தலத்துக்கு வலை
தளத்தில் வலம் வரலாம். வரும் கோடைக் காலத்தில் யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் பெற
வும் இளைப்பார்க்கொள்ளவும் என்று இரட்டைப் பயன் பெறலாமே!! 

One thought on “வெண்பனிமலையில் வெற்றி வேலன் ஆலயம்

  1. அந்த சுக சவத்துக்கு இது புரிந்தால் நலம்.

Comments are closed.