கருப்பு பண ஒழிப்பு, டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரதமர் மோடியின் சாமானியனுக்கு பயன் அளிக்கக்கூடிய வளர்ச்சி திட்டங்களால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை ‘மெர்சல்’ திரைப்படத்தின் வாயிலாக வசனம் பேசி உண்மையில் கருப்பு பண, ஹவாலா கூட்டத்தின் தளபதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் அதன் இயக்குனர் அட்லீயும், நடிகர் விஜயும்.
* ‘சிங்கப்பூரில் 7 சதவீதம்தான் ஜி.எஸ்.டி. ஆனால், இங்க 28 சதவீதம் ஜி.எஸ்.டி’
* ‘எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்’, ‘என்ன புது ஐந்நூறு ரூபாயும் செல்லாதுன்னு சோல்லிட்டாங்களா?’
இவை எல்லாம் அந்த படத்தில் வரும் முக்கிய வசனங்கள்.
சிங்கப்பூரில் 7 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கலாம், அங்கு இலவசத்துக்கு அலைபவர்களோ, லஞ்சம் கொடுப்பவர்களோ, தேர்தலில் 500, 1000 ரூபாக்கு ஓட்டுப்போடும் அறிவிலிகளோ, கூத்தாடிகளின் உண்மை வேஷத்தை பகுத்தறியாமல் நிஜ தலைவர்களாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் ஏமாளி ரசிகனோ, கிடையாது. அங்கு அரசின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தினலோ, வரி ஏப்பு செதாலோ கடும் தண்டனை கட்டாயம் கிடைக்கும். கடமையை செயாமல் உரிமையை மட்டும் செயும் கூட்டமும் அங்கு கிடையாது. இதை எல்லாம் அந்த படத்தில் காட்டியிருக்கலாம்.
விஜ போன்ற நடிகர்கள் கோடி கோடியாக வாங்கும் சம்பளம் போதாது என்று மேலும் பல கோடிகளை அள்ளித்தரும் பட வினியோகத்துக்கான வெளிநாட்டு உரிமங்களையும் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள். இவ்வளவு தத்துவம் பேசும் இந்த தனி மனிதருக்கு தன்னை வளப்படுத்திக் கொள்ள எத்தனை கோடிகள் தேவைப்படுகிறது! ஆனால் ஒரு தேசம் தன் மக்களை வளப்படுத்த, ஏழைகளுக்கும் பாதுகாப்பான சுகாதாரம், மருத்துவம், கல்வி, வேலை வாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை கிடைக்கச் செய எத்தனை எத்தனை கோடிகள் தேவைப்படும் அதை வரிகள் மூலமாகதானே பெற முடியும்? ஜிஎஸ்டி போன்ற முறைப்படுத்தப்பட்ட வரிமுறைகளே இதற்கு நிரந்தர தீர்வும் கூட.
டிஜிட்டல் பணப் பரிமாற்றம், உயர் 1000, 500 ரூபா நோட்டு மதிப்பிழப்பு அறிவிப்பு போன்றவை திரைப்படத் துறையில் இருந்த ஹவாலாக்களை ஒழித்திருக்கிறதே? பேருக்கு சில லட்சங்களில் படம் எடுப்பது, அதற்கு பல கோடிகளில் கணக்கு காட்டுவது. இறுதியில் படத்தை வெளியிடாமல், வெளிநாடுகளில் இருந்து கோடிகளை மட்டும் வெள்ளையாக கொண்டு வரும் ஹவாலா முறை ஒழிக்கப் பட்டுள்ளதே? இதெல்லாம் நடிகர் விஜய்க்கு தெரியாதா என்ன? (கடைசியாக கிடைத்த தகவலின்படி மெர்சல் படத்தில் வரும் ஆட்சேபகரமான பகுதிகளை நீக்க திரைப்படத் தயாரிப்பு குழுவினர் சம்மதித்துள்ளார்கள்).