வழக்கறிஞர்களுக்கான புதிய விதிமுறை சட்டம் பற்றி?; பரதன் பதில்கள்

‘தத்வ மஸி’  என்பதன்  பொருள்  என்ன?

– சி. பிரேம்குமார், திருவான்மியூர்

இது சாந்தோக்ய உபநிடதத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வாக்கியம். இதன் பொருள் நீ அதுவாகவே (கடவுளாகவே) இருக்கிறாய்” என்பதாகும். மனிதன் தன்னைத் தெய்வமாக உணரவேண்டும் என்பது இதன் பொருள். அதனால்தான் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவரையும் சாமி என்றே அழைக்கின்றனர்.

 

குங்குமம்  எந்த  விரலால்  இடவேண்டும்?

– த. பாஸ்கர், அரியலூர்

வலதுகை மோதிர விரலால் இட்டுக்கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரலைத் தவிர்ப்பது நல்லது.

 

ரொட்டி (பிரட்) சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற சமீபத்திய தகவல்கள் உண்மைதானா?

– தா. விஜயகுமார், மணச்சை

LAYER

பொதுவாக மைதாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி, புரோட்டா, பேக்கரி அயிட்டங்கள் அனைத்துமே உடலுக்குக் கேடானது. சமீபத்திய அறிவியல், சுற்றுச்சூழல் மைய ஆய்வில் ரொட்டிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

 

குமரி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி பெற்றது ஏன்?

– ஸ்டெல்லா பீட்டர், ஈத்தாமொழி

தேர்தல் முடிவு வந்தவுடனேயே வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத் தலைவர்களைப் பார்த்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள். முதல் நன்றியின் காரணம் புரிகிறதா?

 

தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா  ரம்ஜான் நோன்புக்காக 4,600 மெட்ரிக் டன்  அரிசியை  மசூதிகளுக்கு  வழங்கியுள்ளது  பற்றி?

– வித்யா மோகன், திருவாரூர்

தாராளமாக வழங்கட்டும். அதேபோன்று நம்ம மாரியம்மன் பண்டிகைத் திருவிழாவிற்கும் கொடுத்தால் நல்லது.

 

காங்கிரஸ்  இல்லாத  பாரதம்  என்ற  பாஜகவின்  கோஷம்  பற்றி?

– விடியல் ராமன், திருப்பூர்

நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ் வேண்டும். காங்கிரசும் எதிர்க்கட்சியாக இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு நல்லது. காங்கிரஸ் பலவீனப்பட்டால் மமதா, மாயாவதி, லல்லு, நிதீஷ் போன்ற மாநில கட்சிகள் பலமாகும். இது நாட்டிற்கு  நல்லதல்ல.

 

– பாரதி சாமித்துரை, மயிலாப்பூர்

நீதிமன்ற வளாகத்திற்குள்ளே அரசியல் போராட்டங்களை நடத்துவது, நீதிபதிகளை எதிர்த்து முழக்கமிடுவது, முற்றுகையிடுவது போன்ற அநாகரிகங்களை தடுக்க இந்தச் சட்டம் தேவையானதுதான். வழக்கறிஞர்கள் ஒன்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏற்கனவே மதுரை வழக்கறிஞர்கள் நாங்கள் ஹெல்மெட் அணியமாட்டோம் என்று எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியது மறக்க முடியாது. சட்டத்தை மதிப்பதில் மற்றவர்களுக்கு வழக்கறிஞர்கள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.