‘லிஞ்சிங்’ சம்பவங்கள் இந்தியா முழுதும் நடப்பதாக பிரதமருக்கு கடிதம் எழுதி நீலிக் கண்ணீர் வடிக்கும் ‘அறிவு ஜீவி’க் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் வகையில் விஜயதசமிப் பேருரையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்த கும்பல் கொலை (லிஞ்சிங்) பழக்கம் அன்னிய நாடுகளில் நடப்பது, பாரதத்தின் சுபாவத்திற்கே இது விரோதம் என்று தெளிவுபடுத்தினார். ஆமாம், ‘லிஞ்சிங்’ வரலாறு என்ன? இதோ சுருக்கமாக:
ஒரு கும்பல் குற்றவாளி என கருதப்படுபவரை அடித்து கொல்லும் செயலுக்கு ‘லிஞ்சிங்’ என்று பெயர். அமெரிக்கப் புரட்சியின் போது, விசுவாசிகளை தண்டிப்பதற்காக அமைக்கப்பட்ட ‘கட்டப்பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கிய வர்ஜினியா தோட்டக்காரான சார்லஸ் லிஞ்ச் என்பவனின் பெயரால் உருவானது இது. அமெரிக்காவில் கிறிஸ்தவர்களால் 1890-ல் கருப்பினத்தவர்களுக்கு எதிராக தொடங்கப் பட்டது அடித்துக் கொல்லும் செயல். 1882 முதல் 1968 வரை அமெரிக்காவில் 4,743 ‘லிஞ்சிங்’ சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பெருவாரியான கருப்பினத்தவர்கள் பலியாகியுள்ளார்கள். 1871- அக்டேபர் மாதம் 24 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்த சீனர்கள் மீது வெள்ளையர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல் மிகப்பெரிய ‘லிஞ்சிங்’ அக்கிரமம். கிறிஸ்தவ நாடான அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, இஸ்லாமிய, நாடுகளிலும் பரவியது இந்த ‘லிஞ்சிங்’.
அக்டோபர் 2000ல், ஓட்டுனர்களாக பணி யாற்றிய இரண்டு இஸ்ரேலியர்கள் தவறாக ரமல்லாவிற்குள் நுழைந்ததால், ஒரு பாலஸ்தீனிய கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரையும் காபூல் நதியில் வீசினார்கள். 2015 மார்ச் 19ந் தேதி ஆப்கானிஸ்தான் காபூலில், ஒரு பெண் உள்ளூர் முல்லா முன் குரானை எரித்தற்காக, தாலிபான் கும்பல் ஒன்று அந்த பெண்ணை தாக்கி கொன்றது. இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம் நாடுகளில் ஏராளமாக நடந்துள்ளன. பாகிஸ்தானில் பையூர் பஹூதுன்வாலா பகுதியில் உள்ள மார்டன் பல்கலைகழகத்தில் இஸ்லாத்தை பற்றி தவறாக பேசியதாக மார்ஷன் கான் என்ற மாணவரை ஒரு கும்பல் தாக்கிக் கொன்றது.
1891 ஆம் ஆண்டில், அமெரிக்க காவல்துறைத் தலைவரைக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லூசியானாவின் புதிய ஆர்லியன்ஸில் பதினொரு இத்தாலிய குடியேறிகளை ஒரு கும்பல் அடித்து கொன்றது, அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய லிஞ்சிங். கருப்பு இனத்தவர் களுக்கு உரிய உரிமை கிடைக்கும் வரை கும்பல் கொலை அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றது.
2013 ஜூன் 23 அன்று கிரேட்டர் கெய்ரோவில், ஷியா பிரிவைச் சார்ந்த நான்கு முஸ்லிம்கள் வன்முறையை தூண்டும் விதமாக ஷியா பிரிவினர் சிறுபான்மையினர் மத்தியில் பேசியதாக கூறிய காரணத்திற்காக, சன்னி முஸ்லிம் கும்பல், அவர்களை தாக்கிக் கொன்றது. பாகிஸ்தானில் சிந்து பகுதியில் மதம்மாற மறுத்த ஹிந்துக்களை கும்பலாக தாக்கி கொன்ற சம்பவங்களும் உண்டு.
எனவே ‘லிஞ்சிங்’ என்பது இந்திய கலாச்சாரம் கிடையாது. இது மேலைநாடுகளின் கலாச்சாரத்தில் உருவானது.