தாஷ்கென்ட் ஃபைல்ஸ் (TASHKENT FILES)- படம்; வயிறு பற்றி எரிகிறது. சுதந்திர பாரத நாட்டின் பிரதம மந்திரி தன் நாட்டை காக்க போரில் (௧௯௬௫) இறங்குகிறார். எதிரியை அடித்து துவைத்தாயிற்று. அமெரிக்கா தன் வல்லமையை காட்ட உலகெங்கும் சமாதானம் பேசுவதும், கட்ட பஞ்சாயத்து செய்வதுமாக தன் ஆளுமையை காட்டிக்கொண்டிருந்த நேரம். USSRஉம் தாங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்கு முனைந்து சமாதானம் பேசுகிறோம் என்று பாகிஸ்தானையும், பாரதத்தையும் அழைத்தது. விஷயம் அப்பட்டம். இது இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர். சமாதானம் பேச அழைக்க நீங்கள் யார், அவர்களை மொத்தமாக தீர்த்துவிட்டு வருகிறோம். போருக்கு அழைத்தது அவர்கள். நீங்கள் அவர்களிடம்தான் பேசவேண்டும் என்று சொல்லியிருக்கலாம் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். சொல்லவில்லை. நம்பி தாஷ்கண்ட் சென்றார். ஆறு நாட்கள் கடுமையான பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடைசியில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தான சில மணித்துளிகளில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வருகிறது.
பாகிஸ்தானுக்கு அவர் இறந்ததாக வேண்டிய கட்டாயம். நேரடியாகவோ, சூது செய்தோ கொன்று திருப்தி அடையலாம். இதுவரை அவருக்கு பணிவிடை செய்யாத ஜான் மொஹம்மத் பணிக்கு அமர்த்தப்படுகிறான். அவன் பின்னர் கைதாகிறான். ஆனால், விடுதலையும் ஆகிறான். பின்னர் உடனே, விபத்தில் இறக்கிறான்.
இந்திரா காந்திக்கு இந்த மரணத்தால் லாபம். சோவியத் யூனியன் பிரேத பரிசோதனை செய்கிறோம் என்று கேட்டுக்கொண்டதை மறுக்கிறார்கள். பாரதம் வந்தும் நடக்கவில்லை. சாஸ்திரி உடம்பில் பல வெட்டு காயங்கள். ரத்தம் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. விஷம் இருந்ததா என்று கண்டறிவதை தடுக்க உள்ளே இருந்த உறுப்புகள் எடுக்கப்பட்டனவா, அதனால்தான் இத்தனை வெட்டுக்களா என்று தெரியவில்லை. சாஸ்திரி குடும்பம் கேட்டுக்கொண்டும் பிரேத பரிசோதனை நடக்க அனுமதி தரவில்லை இந்திரா காந்தி. சோவியத் யூனியனைச் சந்தேகிப்பது போல ஆகிவிடும் என்று மறுத்துவிட்டார்.
அனைவரும் பார்க்கவேண்டிய படம் TASHKENT FILES.