பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு இயற்கையை எவ்வாறு அன்னையா தெவமா போற்றிவருகிறது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுக்கள் கொடுக்க முடியும். இருப்பினும் இங்கே நாம் அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தில் உள்ள சில பாடல்களை மட்டும் பார்க்கலாம். அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘ஆழி பெரிது’ என்ற நூலில் இருந்து இவை வழங்கப்படுகிறது. (பூமி சூக்தப்பாடல்களை மொழிபெயர்த்திருப்பவர் ஜடாயு அவர்கள். அவர்களுக்கு நம் நன்றிகள்.)
பூமி தியானம்
புனிதம், தவம், தெவீக ஆற்றல், வேள்வி இவையே பூமியைத் தாங்குகின்றன. கடந்தவைகளுக்கும் வருபவைகளுக்கும் அரசியான அவள் நமக்காக, வாழும் உலகமாப் பரந்திடுக. உச்சிகளும், சரிவுகளும் மனிதர்களைப் பிணைக்கும் பல சமவெளிகளும் கொண்ட பூமி பல்வேறு சக்திகள் பொருந்திய மூலிகைகளைத் தாங்கும் பூமி நமக்காகப் பரந்து வளம் பொருந்தியதாகுக. நன்னீர் நிலைகளும் ஓடும் ஆறுகளும் பெருங்கடலும் கொண்டது இப்பூமி! இதிலிருந்தே எழுந்தன உணவும் அனைத்து மானுட குழுக்களும்! இதிலேயே வாழ்கின்றன சுவாசிப்பன முதல் நகர்வன வரை என அனைத்து உயிர்களும்! இப்புவி நமக்கு நீர் அருந்த முதன்மை அளிக்கட்டும்.”
இங்கு ஓர் உன்னதமான வேத சிந்தனை வெளிப்படுகிறது. அனைத்து உயிர்களும் நீரில் தோன்றின. அவ்வாறே அனைத்துமனிதர்களும் அவர்களின் உணவுகளும் நீரிலேயே நிலை பெறுகின்றன. நீர் எப்படி உணவாகிறது? நீரே உணவாகிறது என்பது பாரத சிந்தனை நெடுக உள்ள ஒன்று. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளதாக்கி; துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவா நிற்பதூஉம் மழை. இது பரிமேலழகர் உரை.புறநானூற்றில் ஒரு பாடல் உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே” எனக் கூறுகிறது.
இன்றைக்கு சூழலியலில் உள்ளுறை நீர் (ஞுட்ஞஞுஞீஞீஞுஞீ தீச்ணாஞுணூ) என்கிற கோட்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இன்றைக்கு பதார்த்தத்தின் விலையுடனும் அதன் உள்ளுறை நீரும் கணக்கிடப் படவேண்டும் என்கின்றனர் சூழலியல் வல்லுனர்கள். இந்தக் கோணத்தில் நோக்கும் போது இந்த தொன்மையான பிரார்த்தனை திருக்குறளைப் போலவே ஒரு புதிய பரிமாணம்பெறுகிறது.
ஆதியில் அவள் ஆழ்கடலின் நீருள் இருந்தாள். மெயுணர்ந்த ரிஷிகள் தம் அற்புத சக்திகளால் அவளை நாடினர். அமுதமயமான அழிவற்ற சத்தியத்தால் மூடப்பட்டு அவள் இதயம் அப்பால் உள்ள ஆகாயவெளியில் இருந்தது. அந்த பூமி நமக்கு உன்னதமான தேசத்தையும், அதில் ஒளியையும், வலிமையும் அளித்திடுக. பூமி தா; நான் புவியின் மகன். தந்தை வடிவான வானம் நம்மை நிறைத்திடுக. பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனதுஇதயத்தையும், மர்ம ஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக. ஆண்களிலும், பெண்களிலும் உள்ள உனது நறுமணம் எதுவோ இளைஞனின் ஒளியும், கம்பீரமும் எதுவோ வீரர்களிலும், புரவிகளிலும் உள்ளது எதுவோ வனமிருகங்களிலும், யானைகளிலும் உள்ளது எதுவோ கன்னிப் பெண்ணின் இளமை ஒளி எதுவோ ஓ பூமி, இவற்றுடன் எம்மை ஒன்றுகூட்டுவா.