சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு ஆகியும் வீடு வசதியும், ரேஷன்கார்டு, சாதி சான்றிதழ் கூட வாங்கமுடியாத, படிப்பறிவில்லாத ஆனால் அசாத்திய நேர்மையும் தனிமனித ஒழுக்கமும் சமூக கட்டுப்பாடும் கூர்மையான அறிவும் நிகரற்ற துணிச்சலும் கொண்ட இளைஞர்களும் பெண்களும் நிறைந்த ஊர் சென்னையில் இருந்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் 76 கி.மீட்டரில் வலதுப்புறம் வேடந்தாங்கல் செல்லும் சாலையில் 5வது கி.மீட்டரில் முல்லை நகர் என்று அழைக்கபடும் கழைக்கூத்து நகர். சிறு வயது முதலே (3 வயது) சாகஸங்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த இளம் மலைக்குறவர்கள், கழைக் கூத்தாடிகள். 35 குடும்பங்கள் கொண்ட மலை ஓரமாக வானம்பார்த்த வீடுகள் கொண்ட மிகவும் பின் தங்கிய, வறுமையின் கஷ்டம் வெளிக்காட்டிக் கொள்ளாத, போலீசார் உள்ளே வராத, போலீசாரிடம் எந்த புகாருக்கும் செல்லாத நீதிமன்றத்துக்கு வழக்குகள் செல்லாத எந்த பிரச்சினையாக இருந்தாலும் தன் ஊர் பஞ்சாயத்தில் தீர்த்துக் கொள்கின்ற சக்திவாய்ந்த சமுதாயமாக திகழ்கிறது முல்லை நகர்.
இவர்களுடைய குலதெய்வம் கொம்பு அதாவது தண்டா. கொம்பையே கம்பத்தடி மாரியம்மனாக வழிபடுகிறார்கள். ஆடி மாதம் முடிந்தவுடன் ஆவணி மாதத்தில் திருமண சடங்குகள் முடித்து நல்ல காரியங்கள் முடித்து வண்டியை கட்டிக்கொண்டு ஊர் ஊராக கிளம்பி விடுகிறார்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த ஊர் அன்பர்கள் மீது பரிவுகொண்டு மதுராந்தகம் லோகராஜும் அவர் நடத்திவரும் 3,000 மாணவர்கள் பயிலும் விவேகானந்தா வித்யாலயா பள்ளியினரும் இந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளனர். உணவு, கோயில், கல்வி ஆகிய 3 விஷயங்களை மையமாக வைத்து சேவை துவக்கினார்கள். கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது பள்ளி மாணவர்களிடம் பெறும் அரிசி இந்த மக்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வி அறிவே பெறாத அந்த கிராமத்தில், அனைவரும் படிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு, கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஊக்கப்படுத்தி பிள்ளைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மாணவியர்கள் அனைவருக்கும் கல்விக்கான உதவி வழங்கப்பட்டு வருகிறது.
குலதெய்வமான, தொழிலுக்கு ஆதாரமான, ஸ்ரீ கம்பத்தடி மாரியம்மனுக்கு பள்ளியின் சார்பாக வழிபாடு மண்டபம் கட்டித் தரப்பட்டுள்ளது. ரூ.5லட்சம் மதிப்புள்ள இந்த மண்டபத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆகஸ்டு 12 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதியம் சமபந்தி போஜனம் நடைபெற்றது.
சாகச நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. மலைக்குறவர்களிடம் மண்டபத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சுவாமி ப்ரம்ம யோகானந்தா, விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு, ஆர்.எஸ்.எஸ்ஸின் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் இராம. ஏழுமலை, கிராமத் தலைவர் சீதாலட்சுமி முருகேசன், துணைத் தலைவர் ஸ்ரீதர், விவேகானந்தா பள்ளியின் உரிமையாளர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான லோகராஜ், அவர் துணைவியார் மங்கையர்க்கரசி லோகராஜ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சங்க பரிவார் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் மலைக்குறவர்கள், கழைக்கூத்தாடி கிராம பொறுப்பாளர் முருகேசன், கணேசன் பூசாரி ஆகியோர் தன் இனத்தின் தன்மையையும், வரலாற்றையும் எடுத்து கூறினார்கள். லோகராஜ் வரவேற்புறையில் கிராம ஏற்பு திட்டத்தை விரிவாக எடுத்துரைத்தார்.
விஜயபாரதம் ஆசிரியர் வீரபாகு மதமாற்றத்தை தடுக்கும், தாய்மதத்தை நேசிக்க வைக்கும், அறிய நிகழ்ச்சி இது. இவ்வூரார் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். கல்வி திட்டங்களை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் லோகராஜ் நிறைவேற்றி வருகிறார்.இங்கு இருக்கும் அனைவரும் தாய்மதத்தில் இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற மதமாற்றிகள் வருவார்கள் என்றதும் தாய் மதத்தை நேசிப்போம் என்று மக்கள் வீரமுழக்கமிட்டார்கள். ஓம்காளி, ஜெய்காளி என்று கோஷமிட்டு தன் உரையை முடித்தார். சுவாமி ப்ரம்ம யோகானந்தா விவேகானந்தா வித்யாலயா பள்ளி வழங்கும் வழிபாடு மண்டபத்தை கிராமத்தாரிடம் ஒப்படைத்து, அந்த கிராமத்தில் முதல் முறையாக கல்லூரி படிப்பை தொட்ட மாணவியை வாழ்த்தி ஆசியுரை ஆற்றினார். மலைக்குறவர் கழைக் கூத்தாடிகள் இனம் மிகவும் பாரம்பரியமும், பெருமையும், பழமையும் வாய்ந்தது. உங்களுடைய முன்னோர் முருகப்பெருமான். முருகனையே மருமகனாகக் கொண்ட இனம் உங்களுடையது. வீர சிவாஜியின் வம்சாவளி நீங்கள். நாடோடிகளாக பிச்சாண்டிகளாக இருப்பதால் உங்கள் சொந்தக்காரர் பிச்சாண்டியான சிவபெருமான் வழிவந்த உயர்ந்த குலம் நீங்கள். ஆகவே நாம் அனைவரும் சமம்” என்றார். வீடு வீடாக சென்று விளக்கு தட்டு, விநாயகர் விக்கிரகம், கொடுத்து ஆசிவழங்கி பிரசாதம் அளித்து சாகசங்கள் செய்த வாலிபர்களை பாராட்டினார்.
சக்தி வாய்ந்த ஒரு இனம், தன் சக்தியை இழந்து நிற்கும்போது, வேற்று மதத்தினர் மதமாற்ற முயற்சிக்கும் போது, சொந்த சகோதரர்கள், ஹிந்து சகோதரர்கள் வந்து இருந்து உணவு அருந்தி வழிபாடு செய்து பாரதமாதா கீ ஜே” கோஷமிட்டு ஊக்கமளித்திருக்கிறார்கள்.
தேச நலனில், சமுதாய நல்லிணக்கத்தில் நாட்டம் கொண்ட எவருக்கும் மனநிறைவு அளிக்கக்கூடிய கச்சிதமான, ஆரோக்கியமான நிகழ்ச்சி அது.
இவங்களுக்கும் தமிழ் கடவுளான எங்கள் முப்பாட்டன் முருகனுக்கும் என்ன தொடர்பு??
மராட்டிய நரிக்குறவர்கள் எப்படி தமிழர் ஆவார்கள், மராட்டிய நரிக்குறவர்கள் தான் முருகனுக்கு பொண்ணு கொடுத்தாங்களா??
அப்போ முருகனுக்கு பொண்ணு கொடுத்த தமிழ் குடியான குறிஞ்சிநிலக் குறவர்கள் யார்??
ஏன் இப்படி வரலாறு தெரியாம மராட்டிய நரிக்குறவனுக்கு தமிழர் சாயம் பூசுவது!
தமிழ் பூர்வக்குடியான குறிஞ்சிநிலக் குறவர்களை தான் மலைக்குறவன் என்று அழைப்பார்கள், மராட்டிய நரிக்குறவனை அல்ல!!
மராட்டிய நரிக்குறவன் வேறு, தமிழ் பூர்வக்குடியான குறிஞ்சிநிலக் மலைக்குறவர்கள் வேறு, இருவரையும் ஒன்றென கருத வேண்டாம்!!