திருப்பதி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெங்கடேச பெருமாளும் லட்டு பிரசாதமும் தான். இறைவழிபாட்டுக்காக மக்கள் கூடும் இடங்களில் முதலிடம் வகிப்பது திருப்பதி தான். மிக அதிக வருமானம் வரக்கூடிய கோவிலும் திருப்பதியே. பக்தர்கள் தங்களது திறமைகளை ஆண்டவன் முன்னிலையில் பக்தி பூர்வமாக வெளிப்படுத்தும் விதமாகவும் அவற்றை பெருமாளுக்கே சமர்ப்பிக்கும் விதமாகவும் ஆடல், பாடல், பஜனை, சேவை என பலவிதங்களில் கலைத் தவம் செய்கிறார்கள். வருடம் முழுவதும் திருப்பதி கோயிலில் திருவிழாதான் என்றாலும், புரட்டாசி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கக்கூடிய பிரம்மோற்சவம் தான் திருப்பதியின் பிரதானம். இந்த பிரம்மோற்சவத்தின் சிறப்பையும், பக்தர்களின் அர்ப்பணிப்பையும் காண்போம்…
பாரத தேசத்தில் எண்ணற்ற கோயில் விழாக்கள் நடந்தாலும், திருப்பதியில் நடைபெறுகிற பிரம்மோற்சவம், மற்ற விழாக்களில் இருந்து தனிச்சிறப்பு வாந்ததாக கருதப்படுகிறது. தேசம் முழுவதிலும் இருந்து, தங்கள் சோந்த செலவில், திருப்பதிக்கு வந்து, தங்களது திறமைகளை பாடல்களாகவும் பஜனைகளாகவும் நடனங்களாகவும் சேவைகளாகவும் செயக்கூடிய ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்களை இந்த பிரம்மோற்சவத்தில் காண முடியும்.
கருட கொடியேற்றம்
பிரம்மோற்சவத்தின் துவக்க நிகழ்ச்சி கொடியேற்றம். திருவேங்கடமுடையானின் வாகனமாகிய கருடனின் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடியை முதல்நாள் ஊர்வலமாக நான்கு மாட வீதிகளில் கொண்டுவந்து, கொடியேற்றத்தன்று கோவிலின் பலிபீடத்திற்கு முன்புள்ள தங்கக் கொடிமரத்தில் வேதமந்திர கோஷம் முழங்கிட, கருடக் கொடியை ஏற்றுவர். முன்னதாக விழாவை முன்னின்று நடத்தக்கூடிய பிரம்ம தேவனை ஒரு சிறு தேரில் வைத்து, திருமலையில் வசிக்கக்கூடிய இளவயது பாலர்கள், தேரோட்டம் நடத்துவார்கள். விழா ஏற்பாடுகளை பிரம்மன் ஆவு செயும் பாவனையில், இந்த தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றம் துவங்கி பத்து நாட்களும், கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில், தினந்தோறும் பல்வேறு வாகனங்களில், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக மலையப்ப சுவாமி எனப்படும் பிரதான உற்சவர் வலம் வருவார். இந்த வாகன பவனி காலையிலும் மாலையிலும் நடைபெறும்.
கலைஞர்களின் பங்களிப்பு
பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களிலும் வாகன பவனியின் போது, சுவாமிக்கு முன்பாக, தேசம் முழுவதிலும் இருந்து வரக்கூடிய கலைஞர்கள் தங்கள் திறமைகளை காண்பித்து கூடியிருக்கும் பக்தர்களின் கண்களுக்கு விருந்து படைப்பார்கள். பள்ளிக்குழந்தைகள் முதற்கொண்டு வயதான பெரியவர்கள் வரை இறைவனுக்கு செயும் சேவை என்கிற மனோபாவத்தில் மிக நேர்த்தியாக தங்கள் கலைத்திறமையை அரங்கேற்றுகிறார்கள். சிறுவயதிலேயே கலைத்திறமையும், அந்த திறமைகளை லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அரங்கேற்றுகிற வாப்பும் மிக எளிதாக கிடைத்து விடுகிறது. அந்த பெற்றோர்களும் திருப்பதி ஏழுமலையானின் கோயிலில் தங்கள் குழந்தைகள் ஆடி, பாடுவது தங்கள் கிடைத்துள்ள மிகப்பெரிய கருதி, உற்சாகம் அளித்து, அனுப்பி வைக்கிறார்கள். இந்த குழந்தைகளுக்கு தேவஸ்தானம் சார்பில் மூலவர் தரிசனம் செதிட வாய்ப்பு உண்டு. லட்டு பிரசாதமும் வழங்கப்படுகிறது.
கருடசேவை
பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக, ஐந்தாம் நாள் இரவு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனிவரும் கருடசேவை நடக்கிறது. இந்த நாளில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் திருமலையில் கூடுகிறார்கள்.
மக்கள் சேவை மாதவனுக்கே!
பிரம்மோற்சவத்தின் பத்து நாட்கள் மட்டுமல்லாது வருடம் முழுவதுமே திருவேங்கடமுடையானின் மீது பற்று கொண்ட பக்தர்கள் திருப்பதி திருமலைக்கு வந்து, திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சேவை செகிறார்கள். இது வேறு எந்த கோயிலிலும் காணப்படாத, வியப்பளிக்கும் நிகழ்வாகும். ஒருவாரம் திருமலையில் தங்கி பணியாற்ற விருப்பம் உள்ள, குறைந்த பட்சம் பத்து பேர் கொண்ட குழுவாக, இருப்பவர்கள் தங்கள் ஆதார் நகல், புகைப்படம் ஆகியவற்றை, திருமலையில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி, தேதிகளை உறுதி செது கொண்ட பிறகு, தங்கள் சோந்த செலவில் திருமலைக்கு வந்து அடையாள அட்டைகள் பெற்றுக்கொண்ட பிறகு, தாங்கள் விரும்பிய பணிகளில் சேவை செயலாம். நிறைவு நாளன்று இலவசமாக மூலவரை சென்று தரிசிக்க முடியுடும். லட்டு உண்டு. உண்டியலில் லட்சலட்சமா பணத்தை கொட்டுபவர்கள் இருக்கலாம். ஆனால் சேவையின் மூலம் இறைவனின் அருளை பெறலாம் என்பது, இந்த சேவார்த்திகளின் மூலம் நாம் அறிந்த கொள்ள முடிகிறது. இந்த சேவைக்கு ‘ஸ்ரீவாரி சேவை’ என்று பெயரிட்டுள்ளனர்.
பிரம்மோற்சவ நிறைவு!
பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள், அதாவது புரட்டாசி திருவோணத்தன்று, சக்கரத்தாழ்வார் சிலைக்கு, ஸ்வாமி புஷ்கரணி என்று அழைக்கப்படும் திருமலை கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில், தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
மிகப்பெரிய உற்சவமாகிய பிரம்மோற்சவத்தில், நம்முடைய பங்களிப்பும் ஏதேனும் ஒருவிதத்தில் இருந்திட, நம்மால் ஆன சேவைகளை, திருவேங்கடமுடையானுக்கு செதிட முன்வருவோம். டூ
லட்டு பிரசாதம்
திருமலை திருப்பதியில், தினந் தோறும் லட்சக்கணக்கில் தயாராகும் லட்டு, ஸ்ரீவேங்கடாசலபதியின் பரிபூரண பிரசாதம்! பலராலும் விரும்பப்படும் பிரசாதம். அதில் இருப்பவை சர்க்கரையும், முந்திரியும், திராட்சையும் மட்டுமல்ல; பெருமாளின் அனுக்ரஹமும்கூட. நீங்கள் ஆசைப்பட்டால் மட்டும் அது, உங்கள் கைக்கு வந்து விடாது. அந்தப் பிரசாதம் உங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைத்தால், நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். அதுதான் பெருமாளின் மகிமை.