மகாபாரதம் சொல்லப்படாத உண்மைகள்

இத்தனையும் விளக்கமாக கூறியதிலிருந்து, குரு, யுதிஷ்டிரனிடம் சபதம் போன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் துணியவில்லை என நாம் தவறாக நினைக்க கூடாது. அப்படி நினைப்பது அந்த உயர்ந்த மனிதனிடம் காட்டுகின்ற அவமரியாதை ஆகி விடும். விரும்பப்படாத அந்த செய்தியை ஒவ்வொரு முறையும் கேள்வியுற்றபொழுது அந்த தந்தையின் மனதில் ஏற்பட்ட மாறுதல்களை பாருங்கள்: யுத்தம் துவங்குவதற்கு முன் தர்மபுத்திரரை பார்த்து துரோணர் கூறிய ‘இயலாமை – செயல்பட முடியாத மனப்பான்மை’ அவரை ஆட்டிப் படைத்திருக்கின்றது. முதல் தடவை பீமன் அந்த செய்தியை கூறியதை கேட்டதும் அவருடைய மனது தளர்ந்து விட்டது. மனம் நீரில் கொட்டிய மணலை போன்று கீழ் நோக்கி பயணித்தது. அதை ‘மனஸா ஸன்னகாத்ர: அபூத் யதா ஸைகதம் அம்பஸி’ என வியாசர் எழுதியிருக்கின்றார். ஆனால், செயலற்ற தன்மையிலிருந்து நொடிப்பொழுதில் அவர் விடுபட்டு செயல்பட துவங்குகின்றார். இரண்டாவது முனிவர்கள் கூட்டம் நேரில் வந்து எச்சரித்து கண்டித்தபொழுது அவர், – ‘ரணே ஸ: விமனா அபவத்’ – போர்க்களத்தில் நிலை தடுமாறி மனதை விட்டார். மூன்றாவதாக, யுதிஷ்டிரன் அந்த செய்தியை உறுதிப்படுத்தி கூறியதும், அவருடைய அறிவு மங்கி விட்டது. மனம் குழம்பி முன் போன்று யுத்தம் செய்யும் திராணியை இழந்தார் அதை, – ‘விசேதா: பரமேத்விக்ந: யோத்தும் ந அசக்னுவத் யதா பூர்வம்’ – என வியாசர் குறிப்பிடுகின்றார். நான்காவதாக, இதயத்தை வெட்டிப் பிளப்பதைப் போன்ற பீமனின் சொற்களை கேட்டதும், பாண்டவர்களுக்கு சுபம் உண்டாகட்டும், நான் ஆயுதத்தை கைவிடுகின்றேன் – ‘பாண்டவேபிய: சிவம் வோஸ்த்து சஸ்திரம்அபியூத்ஸ்ருஜாமி அஹம் தட் – என்று கூறி நாம் முன்பு கண்டதைப்போன்று மரணத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
எல்லாவற்றையும் எடுத்துச் சேர்த்து வைத்து எடைபோட்டு பார்க்கும்போது, யுத்தம் துவங்குவதற்கு முன் சீடனிடம் கூறிய இயலாமை – செயல்படமுடியாத ஒரு தன்மை -அந்த தன்மை ஆச்சாரியாருக்கு ஒவ்வொரு முறையும் \அனுபவப்பட்டதாக காண முடியும். அப்பொழுதே அவர் ஆயுதம் கீழே வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த நிலையில் மனதில் குடியிருக்கின்ற வேறு ஏதோ ஒரு உணர்வு, அச்செயலை செய்ய முடியாதபடி அவரை தடுத்து நிறுத்துகின்றது. உறுதிமொழியை மீறிவிட்ட செயல் என அவசரமாக நாம் துரோணருக்கு எதிராக தீர்ப்பு வழங்க கூடாது. அப்படி நாம் முடிவு செய்தோம் எனில் அது அரைகுறையான ஒரு முடிவாக அமைந்து விடும். ஆகவே துரோணர் அப்படி நடந்துகொண்டதற்கு ஏதுவான உண்மைக் காரணத்தை நாம் கண்டு பிடித்தாக வேண்டும். அறிவாற்றல் மிகுந்த, நிலைகுலையாத, நிலை
யான தன்மை கொண்ட, எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஒரு மனிதனை, பகவத் கீதையில் ‘ஸ்தித ப்ரஜ்ஞன்’ என்ற ஒரே வார்த்தையில் குறிப்பிடுகின்றது. அப்படிப்பட்ட ஸ்தித ப்ரஜ்ஞன் ஆக இல்லாத ஒருவருடைய பயணம் கீழ் நோக்கி செல்வதாக அமையும் என கீதையின் நாயகன் நம்மை எச்சரிக்கின்றார்.
‘ஒரு விஷயத்தை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, மெதுவாக அதில் பற்றுதல் ஏற்ப்பட்டு விடுகின்றது. பற்றுதல்
களிலிருந்து ஆசை உருவாகும். ஆசையினால் கோபம் வரும். கோபம் நம்மை குழப்பத்திற்கு அழைத்து செல்லும்; குழப்பம் வந்துவிட்டால் ஞாபகசக்தி குறைந்து விடும். ஞாபகசக்தி குறைந்ததும் அறிவு மழுங்கி விடும். அறிவு மழுங்கினால் அழிவு வந்து விடும்’. இது கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்
பட்டுள்ளது. துரோணாச்சாரியார் தமது உறுதி
மொழியை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமத
மாயிற்று என்ற நமது வினாவிற்கு மேற்குறிப்
பிட்ட இந்த இரண்டு ஸ்லோகங்கள் விடை அளிக்கின்றது.
ஸ்தித ப்ரஜ்ஞனுக்கு இருக்க வேண்டிய மறப்போம் மன்னிப்போம் என்ற சாத்விக குணம் துரோணருக்கு இருந்ததில்லை. அடங்
காத பகையுடன் மறக்கமாட்டோம், மன்னிக்க
மாட்டோம், பழிக்கு பழி வாங்குவோம் என்ற ராஜஸ சிந்தனையுடன், உணர்ச்சிக்கு அடிமை
யாகி அவர் வாழ்ந்து வந்தார். அறிவை இழந்து, அழிவை நோக்கி கவிழ்ந்து விடுவ
தாக அவருடைய வரலாறு அமைந்து விட்டது. அவரைக் கொன்றுவிட்டதை தாங்கிக் கொள்ள சக்தியற்றவனாக இருந்த அர்ஜுனன் த்ருஷ்டத்யும்னனிடம் பெரும் விவாதத்தில் ஈடுபட்டான் . அப்பொழுது ஒரு கேள்வியை துருபத குமாரன் அர்ஜுனனை பார்த்து கேட்கின
்றார். அக்கேள்வி மிகவும் சிறப்புடையது மட்டுமின்றி துரோணரை படம் பிடித்து காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதோ அந்த கேள்வி: ‘பார்த்தா, பிராம்மணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய கர்மங்களை பற்றி அறிவில் சிறந்த பண்டிதர்களான மகரிஷிகள் கூறியுள்ளனர். யாகம் புரிதல், கல்வியை போதித்தல், தானம் செய்தல், இறைவழிபாடு, நல்ல சடங்குகளை செய்வித்தல், திருமணத்தை நடத்திக் கொடுத்தல், தட்சிணை பெற்றுக்கொள்ளுதல், அறிவைப் பெருக்கிக் கொள்ள வாசித்தல், படித்தல் போன்ற அந்த கர்மங்களில் எந்த கர்மத்தில் ஈடுபட்டிருந்தபொழுது நான் துரோணரை வதம் புரிந்தேன்? ‘இதே விஷயத்தை வேறு வார்த்தை
களால் பிராம்மண்யத்தை பற்றி யட்சன் கேட்ட கேள்விக்கு விடையாக யுதிஷ்டிரர் கூறுகின்றார். ‘நான்கு வேதங்களையும் கற்றறிந்தவனாயினும், பண்பாளனாக இல்லாமல் நன்னடத்தை கெட்ட
வனாக இருந்தால் அவன் கீழோனே. அக்னி
ஹோத்திரம் செய்துகொண்டிருக்கின்ற தொண்டு
ணர்வுடன் கூடியறத்தின் அடிப்படையில் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்பவனே பிராம்மணன்’.
இனி, துரோணாச்சாரியார் ஒரு நாள் கூட பிரியாமல் வளர்த்து வந்த சொந்தம் மகன் அஸ்வத்தாமாவினை பார்த்தோமானால், தந்தையின் புதுப் பதிப்பாக அவர் திகழ்ந்தார். பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி கருச் சிதைவு செய்ய முனைந்த அவிவேகியாக அவர் வரலாற்றில் இடம் பிடித்தார். ஸ்ரீகிருஷ்ணரை வெல்லவேண்டுமெனில் அவருடைய சுதர்சன சக்கரத்தை எப்படியாவது தாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒரு முறை துவார
கைக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு ஸ்ரீகிருஷ்ண
ரிடம், ‘உங்கள் சுதர்சனத்தை எமக்கு கொடுப்பீர்
களா? பதிலுக்கு நான் எனது பிரம்ம சிரஸ்ஸு என்ற ஆயுதத்தை உங்களுக்கு வழங்குகின்றேன்’ என்றார். ‘பிரம்ம சிரசை நீயே வைத்துக்கொள், இதோ எமது வேல், கதை, வில், சக்கிரம் எல்லாமே இங்கேயே உள்ளது. உனக்கு எது தேவையோ அதை நீ தாராளமாக எடுத்துச் செல்லலாம்’ என ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார். பேராசையுடன் சக்கரதை எடுக்க முற்பட்ட அஸ்வத்தாமனால், அதை ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை. அவமானப்பட்டு வந்த வழி நோக்கி திரும்பி வந்தார். உபநயனம் செய்து பிரம்மோபதேசம் கிடைக்கப் பெற்ற பிராம்மண குமாரனுடைய கதை இது. துரோணர் வளர்த்த த்ரௌணியின் (துரோண புத்திரர்) கதை.
வியாசர் வரைந்து காட்டிய, அவர் கூறிய வார்த்தை
களின் அடிப்படையில், நாம் துரோணரைப் பற்றி இவ்வளவு சொல்லி விட்டோம். எனினும் இன்னும் ஒரு உண்மையையும் சொல்லியாக வேண்டும். அர்ஜுனனைப் போன்று துரோணாச்
சாரியாரும் பாரதத்தினுடைய மனங்களில் வலு
வான இடத்தை பிடித்துள்ள ஆளுமை. நவ பாரதத்தில் மிகத் திறமையான உடற்பயிற்சி ஆசிரியருக்கு அளிக்கின்ற விருது துரோணாச்சாரி
யாருடைய பெயரில் அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவினுடைய கடற்படையின் முக்கிய மையமாக விளங்குவது கொச்சியில், ‘ஐ.என்.எஸ். துரோணாச்சாரியா’ என்ற நிறுவனம். ஆனால், சற்று உன்னிப்பாக பாருங்கள், ஒரு சிறப்பை காண முடியும். தனுர்வேதத்தில் மிகவும் பெயர்பெற்று விளங்கிய ஆச்சாரியனுடைய செல்வாக்கு, வெறும் விளையாட்டு, ஆயுதம் மற்றும் உடற்பயிற்சி துறையினில் மட்டும் ஒதுங்கி விட்டது. அனைவரும் பொதுவாக துரோணரை உடல்ரீதியான வீர தீர பகுதிக்குள் பிரதிஷ்டை செய்கின்றார்கள். வியாசர், சாந்தீ
பனி, காஸ்யபர் போன்ற குருமகான்களின் பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளது. அதை போன்று குறிப்பிட்ட தக்க ஒரு கல்வி
நிறுவனம், துரோணருடைய பெயரில் எங்குமே இல்லை என்று தைரியமாக கூறலாம். ஒரு வேளை துரோணருடைய பெயரில் ராணுவ பல்
கலைக்கழகம் உருவாகலாம். எனினும் நாலந்தா, தட்சசீலம் போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாகும் என எதிர்பார்க்க முடியாது. சமுதாயத்
தினுடைய மனதில் துரோணர் வெறும் ஆயுதஜீவி
யாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். பரத்துவாஜ முனிவருடைய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகின்ற சாஸ்திர ஜீவியாக உலகம் துரோணரை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய புதிய கல்விமுறைகள் சென்றடையாத கிராமப்புறத்தில் வாழ்கின்ற, அங்கேயே, ராமாயணமும் பாரதமும் கேட்டு, அந்த கதைகள் மனதில் பதிந்துக்கொண்டுள்ள ஒரு கலைஞரிடம், ரகுகுல குருவாக திகழ்ந்த வசிஷ்டருடைய உருவத்தையும், குருகுல ஆச்சாரியராக திகழ்ந்த துரோணருடைய உருவத்தையும் வரையும் படி கேளுங்கள். அந்த ஓவியர் வசிஷ்டருடைய கரங்களில் ஒரு கமண்டலமும் தர்ம தண்டமும் கொடுப்பார். துரோணருடைய கரங்களில் ஒரு அம்பும் வில்லும் கொடுப்பார். அதனால் தான் நாம், துவாபர யுகத்தில் வாழ்ந்த துரோணர், கவிழ்ந்து விட்ட பிராம்மண்யத்தின் உத்தம உதாரணமாக திகழ்கின்றார் என ஆணித்தரமாக கூறுகின்றோம்.
தொடரும்…