மிக எளிமையான ஒரு வாழ்க்கையை நடத்தி வரும் பா.ஜ.க-வின் பிரதாப் சந்திரா சரங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி, மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்று தேசம் முழுக்க இன்றைய முக்கிய செய்தியாக இருக்கிறார். அவரி எளிமையினால் பா.ஜ.க-விற்கு கிடைக்கும் நற்பெயரை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர் தரப்பினர் அவர் குறித்து அவதூறுகளை நித்தமும் பரப்பி வருகின்றனர். இந்த அவதூறுகளில் புகலிடத்திற்கு சென்று சற்று பார்ப்போம்.
1999-ஆம் ஆண்டு பிரதாப் சந்திரா சரங்கி ஒடிசா மாநில பஜ்ரங்தள் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அப்போது ஒடிசாவில் ஆதிவாசிகள் வாழும் மலைப் பகுதிகளில் மதமாற்றம் செய்து வந்த கிறிஸ்தவ மத பிரச்சாகர் கிரஹான்ஸ் ஸ்டைன்ஸ் படுகொலையின் போது இவரும் ஒரு சதிகாரராக அன்றைய ஒரிசா காங்கிரசால் முத்திரை குத்தப்பட்டார்.
அப்பகுதியில் மதமாற்றத்துக்கு எதிரான போராளியான தாரா சிங், மதபோதகர் கிரஹான்ஸ் ஸ்டைன்ஸ் படுகொலைக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டார். உண்மையில் அவர் பஜ்ரங் தள் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாதவர், என்றாலும் கூட பிரதாப் சந்திரா சரங்கி மீதும் அந்த கொலை திட்டத்தில் பங்கிருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இன்றைக்கு பிரதாப் சந்திரா சரங்கி பெயர் இந்தியா முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அவர் மோடி அமைச்சரவை பதவி பிரமாணம் ஏற்க எழுந்து நடந்து வந்த போது கைதட்டி ஆரவாரம் செய்தனர். இன்றைக்கு சமூக ஊடகங்களில் அவர் வாழும் எளிய பிரம்மச்சரிய வாழ்க்கை முறை குறித்த பகிரல்கள்தான் அதிகம். நாகரீகங்களின் உச்சத்தில் இருக்கும் இந்த கலியுகத்தில் இப்படியும் ஒரு மனிதன் வாழ்கின்றானா என பிரம்மிக்காதவர்கள் இல்லை.
இன்று எம்.பி-யாகி, அமைச்சராகி பிரசித்தம் பெற்ற இந்த சாதாரண மனிதர் ஒரு வாரம் முன்புவரை ஒரிசா மலைப்பகுதியான பாலாசூர் பகுதியில் உள்ள நில்கிரியில் அப்பகுதி மக்களால் நானா ( பெரியண்ணா ) என்று அன்புடன் அழைக்கப்படும் மனிதராகவே வலம் வந்தார். அவருடைய பேச்சு மிகவும் சிக்கனமானது. அந்த சிக்கன பேச்சிலும் ஓடிஸா மக்களாலும், அனைராலும் மிகவும் நேசிக்கப்பட்ட கோபபந்து தேசா குறித்து நினைவு கூர்ந்தார். அவர் ஒரு சப்தம் இல்லாத அரசியல்வாதியாக இருந்தாலும் அவருடைய புகழ் மெல்ல மெல்ல பரவியது. தன்னைப்பற்றி அவர் மிக குறைவாக பேசுவார் என்றாலும் அவரது தன்னலமற்ற சேவைதான் அவருடைய புகழுக்கு காரணமானது. ஆரவாரத்துடன் காட்சியளிக்கும் மற்ற அரசியல்வாதிகளைக் கண்டு மக்கள் விலகியிருந்த நேரத்தில் இவருடைய எளிமையும், நேர்மையும் மக்களை அவருடன் ஒன்றச் செய்தன.
ஒரு முறை பேட்டியில் அவரிடம் தாங்கள் திருமணம் ஆகாதவரா அல்லது பிரம்மச்சாரியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் “திருமணமாகாதவன்; ஆனால் பிரம்மச்சாரி அல்ல” என்பது. அந்த கேள்வி பலரை நெருடல் படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் சாந்தமாகவே பதிலை கையாண்டார். அதன் அர்த்தம் பிரம்மச்சரியம் என்பது தமது கொள்கையல்ல என்றாலும் பொது வாழ்க்கைக்காகவே தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பதாகும்.
யோகியான அவர் அடிக்கடி தனிமையில் தியானம் மேற்கொள்கிறார். அவரது பிரச்சார வாகனமே ஒரு சாதாரண சைக்கிள்தான் என்றாலும் பகட்டில்லாத அவரது பிரச்சாரம் மக்களை கவர்ந்தது. அவருடைய உடைமைகள் அனைத்தையும் ஒரே ஒரு சூட்கேசில் அடைத்து விடலாம். ஆனால் அவர் இரண்டு கோடீஸ்வரர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
“இந்தியாவில், சில நேரங்களில் சிக்கன நடவடிக்கைகளை நாம் அதிகப்படுத்துகிறோம். ஆனால் பிரதாப் சாரங்கி வரையறுக்கப்படாத சிக்கனத்தில் ஒருவராக திகழ்கிறார். அவர் டில்லிக்கு வரும் பொழுதும் அவரிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் தனது சமநிலையை இழக்காமல் அவர் அவராகவே அதே தோற்றம், அதே உடை அவர் அவராகவே இருந்தார். எந்த பாசாங்குத்தனத்தையும் அவரிடம் காணமுடியவில்லை” என்று ஒரு பத்திரிகை பிரதாப் சாரங்கியை குறித்து கூறுகிறது.
பிரதாப் சரங்கி தேசத்தின் கவனத்தை கைப்பற்றி ஒரு வார காலம் கடந்து விட்டது. அவர் ஒன்றும் அதிகார தாகம் எடுத்து அலைந்தவர் இல்லை. ஆனால் அதிகாரம் அவரை தேடி வந்துள்ளது. அவரை நாடே கொண்டாடும் இந்த நேரத்தில் இப்போது எதிரிகள் அவரைப் பற்றிய அவதூறு விழாவை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
அவதூறு கற்பிக்கும் ட்விட்டர்
ட்விட்டரில் ஒருவர் “ ஒடிசாவில் உள்ள மனோகர்பூரில் மத பிரச்சாரகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொலை தொடர்பான ஒரு “பயங்கரவாதி” பிரதாப் சரங்கி என்றும், அந்த காலக் கட்டத்தில் அந்த பகுதியின் பஜ்ரங் தள் பொறுப்பாளராக இவர் இருந்த போது இவருடைய மாஸ்டர் பிளான் படிதான் அந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்றும், குற்றவாளியான இவர் பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து விட்டு, கெட்டிக்காரத்தனமாக எல்லாவற்றையும் மறைத்து வருவதாகவும்” கூறியுள்ளார். இதன் உண்மையை நாம் காண வேண்டியது அவசியமாகிறது. அதனால் மீண்டும் நம் முந்தைய சம்பவங்களுக்குள் செல்ல வேண்டியுள்ளது.
உண்மைகள்
1999-ஆம் ஆண்டில், ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான மனோகர்பூரில் ஆஸ்திரேலிய மிஷனரியை சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு இளம் மகன்கள் தீமோத்தி மற்றும் பிலிப் ஆகியோர் ‘ஜங்கிள் கேம்ப்’ எனும் கிறிஸ்தவ அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஒரு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பாரிபாடாவிலிருந்து கியோஞ்சார் வரும் போது அந்த வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்த போதே தீ வைத்து கொல்லப்பட்டனர். ‘ஜங்கிள் கேம்ப்’ எனப்படும் இந்த அமைப்பு பழங்குடிகள் வாழும் பகுதிகளில் இந்துக்களை அதிரடியாக கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் ஒரு அமைப்பாகும். இது குறித்து 2003-ஆம் ஆண்டு DP வாத்வா தலைமையில் CB விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணை முடிவில் தாராசிங் உட்பட 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டம் 1999 காலக்கட்டத்தில் மதமாற்றம் செய்யும் நபர்களின் சொர்க்க பூமியாக காணப்பட்டது. கட்டாய மத மாற்றம் அதிகம் செய்யப்பட்டதால் கியோஞ்சர், மயூர்பஞ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல்களும், பதற்றமும் அதிகமாக இருந்தது. மத சுதந்திரம் தொடர்பான சட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் அறிந்திருக்கவில்லை. காட்டுப்பகுதிகளில் நடக்கும் ஜங்கிள் கேம்ப் மத மாற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
போலீஸ் துறையின் தோல்வி
மாநில அரசும் கட்டாய மதமாற்றம் குறித்த புகாரினை அலட்சியம் செய்த காரணத்தால் அந்த பகுதிகளில் மேலும் பதட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏனெனில் பொதுவாக ஆதிவாசிகள் தங்களுக்கு என்று வெகு காலமாக கடைபிடித்துவரும் ஆதி இந்து கலாச்சாரம் கெடுவதைக் கண்டு அவர்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இந்த ஆத்திரமே அவர்கள் கிறிஸ்தவர்கள் மேல் பகை கொள்ள காரணமாக இருந்தது. அரசும் ஆதிவாசிகளுக்கு எதிராக அவிழ்த்து விடப்படும் கலாச்சார சீரழிவுகள் குறித்து கவலைப்படவில்லை. இந்த கொந்தளிப்பான நிலையில்தான் பஜ்ரங்தள் போன்ற இந்து இயக்கங்கள் அங்கு வலுவாக கால் ஊன்ற வழி வகுத்தன. பஜ்ராங் தள் அமைப்பு அங்கு பசு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. மற்றும் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக களம் அமைத்தது.
1999-ஆம் ஆண்டில் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு இளம் மகன்கள் தீமோத்தி, பிலிப் ஆகியோர் கொலை செய்யப்பட்டபோது பிரதாப் சரங்கி பஜ்ராங் தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பது உண்மைதான். பிரதாப் சரங்கியும் அவருடன் இருந்தவர்களும் மதமாற்றத்தை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் என்பதும் உண்மைதான்.
இந்த மதமாற்றத்தை தடுப்பதற்காகவே கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு போட்டியாக சாரங்கி மலைவாழ் மக்களுக்கு கல்வி வசதியை அளிக்க பல சேவைகளை செய்து வந்தார். வாத்வா கமிஷன் கொலை தொடர்பான விசாரணையை தொடங்கிய போது சாரங்கி முக்கிய சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.
ஹிந்துத்வா நம்பிக்கையாளர் என்பதால் அவதூறு
பிரதாப் சாரங்கி ஒரு சிறந்த ஹிந்துத்வா நம்பிக்கையாளர். தனது மதம் காக்கப்பட வேண்டும், எல்லாவற்றையும் விட தம் மக்களின் கலாச்சாரம் யாராலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனத்துடன் போராடினார். இதனாலேயே அவர் மத மாற்றக் கும்பலின் கண்களுக்கு எதிரியாக தெரிந்தார். அப்போதைய அரசும் மதம் மாற்றும் கும்பலின் பேச்சை கேட்டதன் விளைவு சாரங்கியை விசாரணை கமிஷன் சந்தேகித்தது. ஆனால் விசாரணை முடிவில் கொலை சம்பவத்துக்கு காரணம் ரபீந்திர குமார் என்கிற தாரா சிங் தான் என்றும் அவர் மீது நிறைய வழக்குகள் இருப்பதும், தன்னிச்சையாகவே அவர் மத மாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் செய்தவர் என்றும், பல முறை அவரால் கலவரங்கள் ஏற்பட்டிருப்பதும் விசாரணை கமிஷனுக்கு தெரிய வந்தது. மேலும் தாரா சிங்குக்கும் பஜ்ராங் தள் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும், தாரா சிங் தனியாகவே இந்த கொலையை செய்துள்ளார் எனவும் வாத்வா கமிஷன் தெளிவாக தனது தீர்ப்பில் கூறிவிட்டது.
எனவே தாரா சிங் பஜ்ராங் தள் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பது நமக்கு புரிகிறது. அதே சமயம் போலீஸ் ஆவணங்களிலும், புலன் விசாரணை குறிப்புகளிலும் தாரா சிங் பஜ்ராங் தள் மாவட்ட பா.ஜ.க-வுடன் தொடர்புள்ளவராக கருதப்படும் நிலைக்கு எழுதப்பட்டார்.
இந்த ஆவணங்களைக் கொண்டு சர்ச்சுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிரதாப் சாரங்கி பஜ்ராங் தள் ஒருங்கிணைப்பாளர் என ஆவணங்கள் கூறினாலும், தாரா சிங் பஜ்ராங் தள் அமைப்பில் உறுப்பினர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆச்சரியப்படத்தக்க வகையில், மாநில அரசாங்கமோ அல்லது தேவாலயங்களின் தேசியக் குழுவோ அந்த சமயத்தில் சாரங்கி என்ன சொன்னார் என்பதையோ அல்லது அல்லது அவர் விசாரணை கமிஷனால் எந்த மாதிரியான கேள்விகளை எதிர்கொண்டார் என்பது குறித்தோ எந்த முரணான ஆதாரத்தையும் அப்போது வழங்கவில்லை.
முன்னர் கூறியபடி, பஜ்ரங்தளில் உறுப்பினராக தாரா சிங்கை குறிப்பிடுவதற்கு எந்த ஆதார ஆவணங்களும் இல்லை, குறிப்பாக பஜ்ரங் தள் தலைவர்கள் மற்றும் சாரங்கி ஆகியோர் சம்மந்தப்பட்ட ஆதாரம் எதுவும் முற்றிலும் இல்லை .
ஆனால் இவ்வளவு உண்மைகள் இருந்தும் பிரதாப் சாரங்கி குற்றவாளி இல்லை என்பது உறுதியாகி இருந்தும் தேசிய விமர்சகர்களும், சர்வதேச ஊடகங்களும் ஏன் அவர் மீது களங்கங்களை கற்பிக்கின்றன? வேறு சிலர் அவர் ஒரு பயங்கரவாதி எனவும் கூச்சமில்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். ஒடிசாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்யும் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்தார் என்பதற்காகவே அவரை கிறிஸ்தவ மெஷினரிகளும், அவர்களுக்கு ஆதரவான கூலிப்படைகளும் குற்றவாளி என்று கூறுவதா?
காங்கிரசின் மோசமான செயல்பாடுகள்
இந்த படுகொலை சம்பவத்தில் மிக குறைவான அளவிலேயே சாட்சியங்க்ளும், விசாரணையும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு காரணம் அப்போது ஒரிசாவில் காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரசின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்ட போலீசார் திறமையுடன் இந்த விசாரணையில் செயல்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ரலியா சோரன் மற்றும் முர்மு ஆகியோருடைய பெயர்கள் கண்களால் பார்த்த சாட்சிகள் என குறிப்பிட்டிருந்த போதிலும் அவர்கள் என்ன கூறினார்கள் என்பதற்கான பதிவுகளை தகவல் அறிக்கையில் காண முடியவில்லை. இது குறித்து அவர்கள் ஒருமித்து கூறுகையில் இந்த தகவல் அறிக்கையில் தங்கள் பெயர்கள் எப்படி வந்தது என எங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர். அந்த அளவுக்கு போலீஸ் விசாரணை படு மோசமாக இருந்துள்ளது. மாநில அரசின் கவனக் குறைவும் விசாரணையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
RSS தான் முதல் இலக்கு
உண்மையில் இந்த முதல் தகவல் அறிக்கையில் முதலில் குறிப்பிடப்பட்ட 51 பேர், பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். சம்பவத்திற்குப் பிறகு இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வாத்வா கமிஷன் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: “ஆரம்பத்தில் மாநில அரசின் காவல்துறையின் செயல்திறன் சரியாக இருந்தது. ஆனால் அதன்பிறகு குற்றமே செய்யாத 51 குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ததன் மூலம் இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக வேலை செய்யவில்லை என்பதை காட்டுவதாக உள்ளது “ என கவலையுடன் கூறியுள்ளது.
பஜ்ராங் தள் மற்றும் சங் பரிவார் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டப்படும் முயற்சிகள் செய்யப்பட்டு, அதற்கான சாட்சியங்கள் இல்லாததால் வாத்வா கமிஷனால் தள்ளுபடி செய்யப்பட்டன. “மாநில போலீஸ் குற்றமற்றவர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, மேலும் வேகமான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இந்த விவகாரத்தில் தவறிவிட்டதாகவும், தாங்கள் செய்த தவறுகளை மறைக்க கவனத்தை திசை திருப்ப ஒரு தவறான பாடத்தை போலீஸ் வழங்கியுள்ளதாக விசாரணை கமிஷன் மேலும் குற்றம் சாட்டிள்ளது. அதாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்த விவகாரத்தில் இழுத்துவிடவே அங்குள்ள காங்கிரஸ் அரசு முயன்றுள்ளது என்பதை மறைமுகமாக கமிஷன் கூறியுள்ளது.
இந்துத்வா மீது வெறுப்பு
இந்த காலகட்டத்தில், சங் பரிவாரத்தின் தலைவர்கள் மற்றும் பஜ்ரங் தளுக்கு எதிராக விதைகளை விதைக்க மாநில அரசு முயன்றது. அரசு கிறிஸ்தவ மெஷினரிகளை திருப்தி படுத்த எடுத்த நடவடிக்கைகள் தான் ஆரம்ப நடவடிக்கைகள். ஆனால் வாத்வா கமிஷனால் இந்த உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு சங்க பரிவாருக்கும், பஜ்ரங் தளுக்கும் இதில் தொடர்பில்லை என்று தெரிய வந்ததால் அவர்களை விடுவித்தது. ஆனால் இதை பொறுக்க முடியாத கிறிஸ்தவ மெஷினரிகள் விசாரணை கமிஷனின் அறிக்கையில் திருப்தி இல்லை, முழுமை இல்லாத விசாரணை என வெளிப்படையாகவே கூறின. உள்ளூர் போலீசாரும் சிங்கை உறுப்பினர் என கூற முடியாமல் அடுத்து பஜ்ரங் தள் ‘ஆதரவாளர்’ மற்றும் ‘அனுதாபி ‘ என்று குறிப்பிட்டுள்ளனர்.
பிரதாப் சாரங்கியை குற்றவாளியாக அறிவித்தற்கான சாட்சியங்கள் அவர்களால் அன்று உருவாக்கப்பட்டிருந்தால் இன்று எதிரிகளுக்கு ரொம்பவும் கொண்டாட்டமாக இருந்திருக்கும்.
ஆனால் அவர் குற்றவாளியே இல்லாவிட்டாலும் கூட இன்றும் அவர்களுக்கு அவரை குற்றவாளி என்று கூற வைப்பதில் சமூக ஊடகங்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் எதிரிகளுக்கு மதமாற்றத்துக்கு பெரும் சவாலாக இருந்த அவரை காயப்படுத்துவதற்கு இதை ஒரு சரியான நேரமாக கருதுகிறது. அதுவும் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றவராக ஊடகங்களிலும், குறிப்பாக சோஷியல் மீடியாக்களிலும் பேசப்படும் நிலையில் மனசாட்சிக்கு எதிராக சில அமைப்புகள் பின்னால் இருந்து விஷமப் பிரச்சாரங்களையும், அவதூறையும் பரப்பி வருகின்றன. இன்றும் அவர் அந்த அமைப்புகளின் மதமாற்ற முயற்சிகளுக்கு ஒரு தடையாகவே உள்ளார். இந்த நிலையில் அவருடைய எழுச்சி, புகழ் அவர்களுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் குற்றவாளி இல்லை என்று தெரிந்திருந்தும் மீண்டும் குற்றவாளி என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குற்றவாளிகள் உணருவார்கள்
தேசிய அளவில் அனைத்து தொலைகாட்சிகளிலும் அன்றைக்கு பிரதாப் சாரங்கியின் பேச்சாகத்தான் இருந்தது . இவர் நிச்சயம் டெல்லியில் அதிகார மையம் அமைந்துள்ள இடத்தில் நல்ல முறையில் தனது பணிகளையும், முன்னர் அவர் செய்து வந்த பணிகளை கூட சவால் மிக்கதாக திறம்பட செய்வார் என்றே அனைவருக்கும் அப்போது நம்பிக்கை ஏற்பட்டது.
இப்போது அவரை குற்றவாளி என்றும் பயங்கரவாதி என்றும் சமூக ஊடகங்கள் மூலம் பின்னால் இருந்து கூவும் கோழைகள் அது குறித்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. ஆனால் தீங்கில்லாத, பொய்கள் இல்லாத அவருக்காக ஒடிசாவில் அந்த நீலகிரி மலைவாழ் மக்கள் இப்போதும் காத்திருக்கிறார்கள். குற்றவாளி என்றும் பயங்கரவாதி என்றும் கூவும் சில மீடியாக்களின் மனசாட்சிக்கு தெரியும். எது உண்மை என்று. அவரும், தான் ஒரு தூய்மையான நெருப்பு என்பதை தனது செயல்கள் மூலம் இந்திய மக்களுக்கு நிரூபித்துக் காட்டுவார்.
இவர் மீது அவதூறு பரப்பி வரும் நபர் மற்றும் நபர்கள் மீது ஏன் அவதூறு வழக்கு போட்டு தண்டனை பெற வகைசெய்ய முடியாது?