நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதே நேரம் பாஜக மாபெரும் வளர்ச்சியை எட்டியது. அது18 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இதை மம்தா சற்றும் எதிர்பாக்கவில்லை.
அதோடு நில்லாமல் பாஜகவின் ஆதரவு, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் மக்கள் மத்தியில் மம்தாவிற்கு எதிர்பு அதிகரித்து வருகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் போட்டு அவருக்கு எதிர்ப்பை காட்டி வருகின்றனர். “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் போடுபவரை தொடர்ந்து கைது செய்து பார்த்தார். அப்படியிருந்தும் “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் தொடர்கிறது.
இதற்கிடையே, ட்விட்டரிலும் மம்தாவின் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்து பதிவிடும் பகுதியில் “ஜெய் ஸ்ரீராம்” என்று பதிவிட்டு வருகின்றனர். இப்படி பதிவிடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களை கைது செய்யவும் முடியாமல் மம்தா ஆத்திரத்தின் எல்லைக்கே போய்விட்டார்.
இது ஒருபுறம் இருக்க, மம்தாவிற்கு “ஜெய் ஸ்ரீராம்” எழுதிய போஸ்ட் கார்டு அனுப்புவதும், அவரது இ-மெயில் முகவரிக்கு “ஜெய் ஸ்ரீராம்” அனுப்புவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் மம்தா புலம்பி வருகிறார்.
இதுதவிர, மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவுவதும் நடந்துவருகிறது. இதனால் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், திடீர் திடீரென பாஜக அலுவலகங்களாக மாறிவிடுகின்றன. இதை மம்தாவால் ஜீரணிக முடியவில்லை.
இவையெல்லாம், 2021 – இல் நடைபெற உள்ள சட்டபை தேர்தலில் மம்தாவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதையே காட்டுகின்றன. இதனால் மம்தா மீண்டும் பாஜகவின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பல்வேறு அடக்கு முறைகளை கட்டவிழ்து விட்டார். இப்போது மீண்டும் மம்தா தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகிறார். மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவினரின் வெற்றி ஊர்வலங்களுக்கு தடை போட்டுள்ளார். பாஜகவினர் நடத்தும் விழாக்களுக்கும் தடைவிதித்துள்ளார்.
அப்போது ஆட்டம் போட்டார். பாராளுமன்ற தேர்தலில் அவர் நினைத்துப்பார்க்காத சரிவை சந்தித்தார். இப்போதும் ஆட்டம் போடுகிறார். சட்டசபை தேர்தலில் வீட்டுக்கு போகப்போகிறார்.
ஆண்டவன் சோதனையோ அல்லது யார் கொடுத்த போதனையோ, மம்தா அழிவின் விழிம்பில் நின்று ஆடுகிறார்.
மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்வதற்கான பொறுப்பை, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.
கொல்கத்தாவில் சுமார் 2 மணிநேரம் நடைப்பெற்ற மம்தா – கிஷோ சந்திப்பின்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றியது.
தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டம் கூட்டமாக பாஜக பக்கம் தலை காட்டி வருகின்றனர். இந்நிலையில்தான், 2021 தேர்தலிலும் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிரசாந்த் கிஷோர் விளம்பர நிறுவனத்துடன் மம்தா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
2015-ஆம் ஆண்டு, நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பிரச்சாரத் திட்டங்களை வகுத்துத் தந்தது பிரசாந்த் கிஷோர் நிறுவனம்தான். அண்மையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களுடன் அபார வெற்றிபெற்றதற்கும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் வகுத்துத் தந்த திட்டங்களே காரணம் என்று கூறப்பட்டது. இந்த பின்னணியிலேயே, மம்தா பானர்ஜியும் மேற்குவங்கத்தின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.