விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், அவர்களது தாயகத்துக்கு திரும்பிச் செல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பொய்த்துவிட்டது. அகதிகள் புனர்வாழ்வு நடவடிக்கையில் தமிழக அரசு, சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதர் அலுவலகம், சென்னையில் உள்ள யூ.என்.எச்.சி.ஆர் (அகதிகள் மறுவாழ்வுக்கான ஐ.நா. துணைத் தூதர் அலுவலகம்) ஆகியவை ஈடுபட்டுள்ளன. ஆனால் தாயகத்துக்கு அகதிகள் திரும்பிச் செல்வது நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. யூ.என்.எச்.சி.ஆர் புள்ளிவிவரப்படி 7,353 அகதிகள் மட்டுமே இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர். தமிழ் நாடு முழுவதும் உள்ள 106 முகாம்களில் 64,800 அகதிகள் தங்கியுள்ளனர். இவர்கள் தவிர முகாம்களுக்கு வெளியே 35,000 முதல் 40,000 அகதிகள் உள்ளனர்.
அகதிகள் திரும்பிச் செல்வது ஏன் துரிதமாக நனவாகவில்லை? இதற்கு பல காரணங்கள் உள்ளன. அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை இலங்கை அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு உடனே திருப்பியனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அழுத்தம் கொடுத்தது. ஆனால் இந்த அழுத்தம் சொற்ப காலம் மட்டுமே நீடித்தது.
அகதிகள் நலனுக்காக இயங்கி வரும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகளுடன் நான் கலந்துரையாடியபோது ஒரு விஷயம் தெளிவாக புலனாகியது. திரும்பிச் சென்றவர்கள் இலங்கையில் நிலக்கிழார்களாக உள்ளவர்கள். நிலத்தில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் நிலம் ஏதும் அற்ற கூலித் தொழிலாளர்கள். அவர்கள் இலங்கைக்குச் சென்றால் ஏதேனும் வேலை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அகதிகள் தொடர்பாக தேசிய சட்டத்தை இந்திய அரசு இயற்ற இதுவே தகுந்த தருணம். இக்கொள்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வரவேற்கத்தக்க மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஊடகங்களில் வெளியானவற்றைப் பார்க்கும்பொழுது பாரபட்சம் காரணமாக பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பங்களாதேஷ் ஹிந்துக்கள் கடும் பாதிப்புக்கு இலக்காகியுள்ள பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்துக்களுக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த சீக்கியர்களுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. மலையகத் தமிழர்கள் இலங்கையில் உள்ள மற்றத் தமிழர்களிலிருந்து மாறுபட்டவர்கள். ஏனெனில் இவர்களின் பூர்வீகம் இந்தியாதான். இலங்கை தமிழர்கள், ஆண்டுதோறும் நடைபெறும் பிரவாசி பாரதிய தின மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் மலையகத் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ் ஈழம் தனி நாடாக உதயம் ஆக வேண்டும் என்று மலையகத் தமிழர்கள் ஒருபோதும் கோரிக்கை விடுத்ததில்லை. எனினும் கூட சிங்களர்களின் கொடூர நடவடிக்கைகளுக்கு மலையகத் தமிழர்களும் ஆட்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் மலையகத் தமிழர்கள் கடும் எதிர்கொண்டார்கள். 1977ல் நடைபெற்ற கலவரத்திற்குப் பிறகு மலையகத் தமிழர்கள் இலங்கையின் வட புலத்துக்கு பெயர்ந்து சென்றனர். சிங்கள சிங்கங்களுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு கடும் அவதிக்கு உள்ளானவர்கள் இந்த மலையக தமிழர்களே. இலங்கையிலிருந்து முதல் கட்டமாக வந்த அகதிகளில் இலங்கைத் தமிழர்கள் மட்டும் அல்லாமல் மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள். இதைத் தொடர்ந்து இலங்கை தென்புல தமிழர்களும் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். தங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு வெறும் கையோடு அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அன்னை பாரதம் நம்மை கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கைத்தான் இதற்கு காரணம். மலையகத் தமிழர்கள், இங்குள்ள தமிழர்களோடு ஒருங்கிணைந்துவிட்டனர். அவர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் இடையே திருமண பந்தங்களும் நடந்துள்ளன. திருச்சி அருகே உள்ள கோட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த மலையக தமிழ் அகதிகளோடு கலந்துரையாடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்களுக்கு இலங்கையில் எந்த பிடிமானமும் இல்லை. நாங்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகிறோம் என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து அகதி முகாம்கள் மூடப்பட்டன. ஆனால் இங்குள்ள அகதிகள் கோட்டப்பட்டு முகாமை விட்டு வெளியேவர முடியாது என்று மறுத்துவிட்டனர். மண்டபம் முகாமில் இதுதான் நடந்தது. எனவே இந்த முகாம்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டன. தமிழ் அகதிகளின் குழந்தைகள் இம்மாநிலத்திலேயே கல்வி கற்றனர். பலர் பட்டதாரிகளாகவும், சில முதுநிலை பட்டதாரிகளாகவும் கல்வியை முடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் இனிமேல் இலங்கைக்கு திரும்பிச் செல்லமாட்டம் என்பதில் இவர்கள் அனைவரும் பிடிவாதமாக உள்ளனர்.
இந்திய அரசியல் சாசன குடிமை உரிமை விதிகளின்படி, இந்திய குடியுரிமை பெற மலையகத் தமிழர்கள் தகுதியானவர்களே. இது தொடர்பாக இந்திய அரசு தாமதிக்கமால் முடிவெடுக்க வேண்டும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க மத்திய அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளது. எனவே மலையகத் தமிழ் அகதிகளின் குடியுரிமை கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சமீபத்தில் அரசியல், பொதுக் கொள்கைக்கான ‘ த ஹிந்து’ மையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டால் இங்குள்ள இலங்கை தமிழ் அகதிகள் அவர்களது தாயகத்துக்கு மீண்டும் திரும்பிச் செல்வார்கள், ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இங்கேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமையை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இதை எவ்வளவு சீக்கிரம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமோ அவ்வளவு சீக்கிரம் நடைமுறைப்படுத்துவது விரும்பத்தக்கது என்று குறிப்பிட்டார். இதை அரசு கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுப்பது சாலச் சிறந்தது.
(கட்டுரையாளர் தெற்கு – தென்கிழக்கு ஆசிய ஆய்வியல் மையத்தின்
நிறுவன இயக்குனர்)