குங்குமத்திற்குப் பதில் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்வது சரியா?
– சு. கமலா, ஒசூர்
மஞ்சள் குங்குமம்தான் சிறந்தது. மஞ்சள் ஒரு கிரிமிநாசினி. சரி… பரவாயில்லை… ஸ்டிக்கராவது வைக்கிறார்களே என்று திருப்தி அடைய வேண்டியதுதான். நல்லவேளை விபூதிக்கு இன்னும் ஸ்டிக்கர் ஆரம்பிக்கவில்லை
* நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே?
– தி. தருண், திருச்சி
தம்பி… கஷ்டப்பட்டு படிப்பதை விட்டுவிட்டு இஷ்டப்பட்டு படியுங்கள். வெற்றி நிச்சயம்.
கொஞ்சம்கூட சுயநலமில்லாமல் பிறருக்கு உதவுகிறவர்கள் பற்றி?
– கரு. நாச்சியப்பன், பொன்னமராவதி
கங்கை நீர் சிறந்தது… அதனினும் சிறந்தது இறைவனின் அபிஷேக நீர்… அதனினும் சிறந்தது ஏழைகளுக்காக உழைக்கும் ஒரு உத்தமனுடைய முகத்தில் துளிர்க்கும் வியர்வை நீர்” – சொன்னவர் கிருபானந்தவாரியார்.
மலச்சிக்கல் தீர என்ன வழி?
– வித்யாஸ்ரீ, ஊட்டி
யாராவது ஒரு 10 பேர்களிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். விதவிதமான தீர்வுகள் கிடைக்கும். பரதனாரின் ஆலோசனை… இரவில் திரிபலா சாப்பிடுங்கள்… அல்லது கடுக்காய் பொடி வெண்ணீரில் கலந்து குடியுங்கள். சிலருக்கு 2 வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.
* ரஜினியும் கமலும் சேர்ந்து கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதா?
– க. பார்த்தசாரதி, கோபிசெட்டிபாளையம்
இருவருமே வெவ்வேறு துருவங்கள்… வாய்ப்பே இல்லை. கமல் கட்சி துவக்க வாய்ப்பில்லை. ஜெ – கலைஞர் இல்லாத இடத்தை ரஜினி நிரப்ப வாய்ப்புகள் உள்ளன.
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என திராவிடர் கழகம் நடத்துவது பற்றி?
– ஆதி. இளஞ்செழியன், கரூர்
பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமல்லாமல் செட்டியார், ஆசாரி, சௌராஷ்டிரர் என பல சமூகத்தவர்கள் அணிகிறார்கள். முஸ்லிம், கிறிஸ்தவம் பற்றி வாய்திறக்க வக்கற்றவர்கள், ஹிந்து பழக்கவழக்கங்களை மட்டும் கேலி செய்வது அயோக்கியத்தனம்.
இந்தியா – சீனா போர் மூளுமா?
– ரா. கதிரேசன், உடுமலைப்பேட்டை
அவ்வளவு சுலபத்தில் போர் வராது. சீனாவிற்கு இந்தியா பெரிய பொருளாதார சந்தை. போர் மூளுமேயானால் சீனாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் செல்லும். அப்படியே போர் வந்தாலும் அது இரண்டு நாடுகளுக்கான போர் என்பது மாறி இரண்டு அணிகளுக்கான போராக மாறும். இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் என ஒரு பெரிய அணி உருவாகலாம்.