உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக ஒரு சேமநிதி உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் Army Welfare Fund – Battle Casualties என்கிற பெயரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். எவ்வளவு செலுத்துவது என்பதையும் பொதுமக்களே தீர்மானிக்கலாம். இது முழுக்க முழுக்க பொதுமக்களின் தன்னார்வத்தை பொறுத்தது, கட்டாயம் இல்லை.
இதில் சேரும் நிதி ராணுவத்தில் தன் இன்னுயிர் தந்த புனிதர்களின் குடும்பத்தார்க்கு, நேரடியாக வழங்கப்படும். இந்த புனிதத்திட்டத்தில் தாங்களும் பங்கேற்று, பண உதவி செய்ய விரும்புவோர், கீழ்க்காணும் வங்கியின் கணக்குக்கு தங்களின் பங்கைச் செலுத்துங்கள்.
பணத்தை ARMY WELFARE FUND BATTLE CASUALTIES என்கிற பெயரில் இணையதளம் மூலமாகவோ, சிண்டிகேட் வங்கி கிளைகளின் மூலமாகவோ செலுத்தலாம்.
வங்கி விவரம்
வங்கி : சிண்டிகேட் வங்கி / Syndicate Bank
கிளை : தெற்கு விரிவு , புது தில்லி (South Extension, New Delhi)
கணக்கு எண் / Account No. 90552010165915
வங்கி குறியீட்டு எண் / IFSC : SYNB0009055