நகரத்தில் சாமானியன் பார்க்கிறான் – தடுக்கி விழுந்தால் ஆஸ்பத்திரி, கிளினிக், டிஸ்பென்சரி. அது சரி, நம் குக்கிராமத்தில் அவசரமாக டாக்டரைப் பார்க்க பத்து கிலோமீட்டர் பயணம் தேவைப்படுகிறது. என்ன இது என்று திகைக்கிறான். அவனது திகைப்பு தீர குரல் கொடுக்கிறது ஆர்.எஸ்.ஸின் அகில பாரத செயற்குழு தீர்மானம்.
எல்லோருக்கும் சுகாதாரமான நோயற்ற வாழ்க்கை அமைய வேண்டும். இதற்காக மக்கள் சுத்தம், சுகாதாரமான வாழ்க்கை முறை நடத்தவும் சாமான்யர்களும் மருத்துவ வசதி பெறவும் வழி வகை செய்வது மிகமிக அவசியம். சுகாதாரமாக வாழ்க்கை நடத்தத் தவறியதால் இன்று மக்கள் பல நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள். அதே சமயம் மருத்துவச் செலவு கட்டுகடங்காமல் போய், மருத்துவ சேவையும் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இதனால் எண்ணற்ற குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளன. சம்பாதிப்பவரின் மருத்துவச் செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திணறும் ஏராளமான குடும்பங்களைக் காண முடிகிறது. அகில பாரதிய பிரதிநிதி சபா இந்த நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
ஆரோக்கிய வாழ்விற்கு ஊட்டம் தரும் உணவு முக்கியம். வாழ்க்கைமுறை நல்லபடியாக அமைவதும் முக்கியம். அதுபோலவே நல்லெண்ணம், ஆன்மிகம்,யோகா, தினசரி உடற்பயிற்சி, சுத்தம், ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் உண்டு. குழந்தைகளுக்கு உரியநேரத்தில் தடுப்பூசி போடுவது அவசியம். ஊர் எல்லாவித போதைகளிலிருந்தும் விடுபட வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் உள்பட விவரமானவர்கள் அனைவரும் இதற்கான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதில் முனைய வேண்டும் என்பது பிரதிநிதி சபாவின் கருத்து.
மருத்துவ சேவைகள் எல்லாம் பெரிய நகரங்களிலேயே குவிந்து விடுவதால், தொலைதூர ஊர்களிலும் கிராமப் புறத்திலும் மருத்துவ வசதி கிடைப்பது அரிதாகி வருகிறது. மருத்துவ வசதியும், டாக்டர்களும் பற்றாக் குறையாகியுள்ள நிலையில் சிகிச்சைக்கும், மருத்துவமனையில் சேர்வதற்கும், நீண்ட வரிசைகள், காத்திருப்பு எல்லாம் சேர்ந்துகொள்ள, ஏராளமானவர்களுக்கு சிகிச்சையே கிடைப்பதில்லை. மருத்துவ வசதி கிட்டாமல் போவதற்கும், சிகிச்சை தரம் தாழ்ந்ததற்கும், மருத்துவத்தின் மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போனதற்கும், மருத்துவ படிப்பிற்கான செலவு அதிகரித்து வருவது மிக முக்கிய காரணம்.
நாட்டில் பெண்கள், குழந்தைகள், உட்பட அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி சுலபமாக கிடைக்க வேண்டும். இது நடைபெற வேண்டுமானால் நாடெங்கும், குறிப்பாக பழங்குடி மக்கள் குடியிருப்புகளுக்கும் கிராமங்களுக்கும், நல்லபடியாக இயங்கும் எல்லா மருத்துவ முறைகளும் கொண்டுசேர்க்கப்பட வேண்டும். தொடர் மருத்துவ சேவைகளுக்காகவும் நிபுணர் ஆலோசனைக்காகவும் தகவல் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தவேண்டும்.
தர்ம சிந்தனையோடும் பொதுநல நோக்கோடும், பல்வேறு சமய சமூக அமைப்புகள் நாட்டின் பல இடங்களில் மருத்துவமனைகளை நடத்தி பொதுமக்களுக்கு அக்கறையோடு மிகநல்ல சிகிச்சை அளிக்கின்றன. . இந்த அரும்பணியை பிரதிநிதி சபா பாராட்டுகிறது. பின்பற்றத் தக்க இந்தப் பணியை அரசு ஊக்குவித்து வளர்க்க வேண்டும் தொழில் நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் அறக்கட்டளைகளும் இதில் தோள்கொடுக்கவேண்டும் என்பது பிரதிநிதி சபாவின் வேண்டுகோள். மருத்துவ உதவிப் பணியில் அரசும் மக்களும் கூட்டாக பங்கேற்பதும் இதில் கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுவதும் அவசியம்.
மத்திய அரசு, 3,000 ஆதார மருந்து (ஜெனரிக்) மையங்கள் உருவாக்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதும் பல மாநில அரசுகள் சில வருடங்களாக இலவசமாக மருந்து வழங்கிவருவதும் வரவேற்கத்தக்க செயல்கள்.
ஆதார (ஜெனரிக்) மருந்துகள் பரப்புவதும் மருந்து விலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதும் காப்புரிமையை மனிதாபிமான ரீதியில் அமல்செவதும் மருந்துகள் சாமானியர்கள் கைக்குக் கிடைக்கச் செய உதவும்.
மருந்துகள் தரம் வாந்தவைகளாக இருப்பதை உறுதி செய, அவை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆவகங்களில் சோதனை செயப்படவேண்டும். யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல வித மருந்துகளை, சோதனை செவதை சீர்செவதும் முக்கியம்.
எல்லா மக்களும் தா சே உடல்நலம் பேணி, சத்தற்ற உணவிலிருந்து விடுபட்டு போதைக்கு அடிமைப்படுவதிலிருந்து விலகி நோயற்ற நல்வாழ்வு வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, ஸ்வயம்சேவகர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும், தன்னார்வ நிறுவனங்களையும், அரசையும் அகில பாரதிய பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது.
எல்லா மருத்துவ சேவைகளும் சாமானியரையும் சென்றடைய உரிய கட்டுமானம், கொள்கைகள், நடைமுறைகள் இவற்றை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்துவதுடன் தேவையான நிதியும் ஒதுக்கவேண்டும். இதற்காக எல்லா மருத்துவமுறைகளுக்கும் சீரான விரிவாக்கம், ஒழுங்குபடுத்தல், பயிற்சி, ஆவு ஆகியவை செம்மைபடுத்தப்படவேண்டும். சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் வெளிப்படையாக செயல்படுத்தப்பட வேண்டும்.