பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சென்னை மக்களுக்கு மீட்பு-நிவாரணம்-மறுவாழ்வு அளிக்கும் அரும்பணியில் ஈடுபட்டு, மக்கள் மனதைக் கவர்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவாபாரதி டிசம்பர் 16 அன்று விழா எடுத்து (1971ல் பாகிஸ்தானை மண்டியிடச் செய்து அந்த தேசத்தைத் துண்டாடி வங்கதேசம் மலரச் செய்த பாரத ராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக) விஜய் திவஸ் கொண்டாடும் மரபை நிலைநாட்டியது.
ஸ்ரீராம் நிதி நிறுவன செயல் இயக்குனர் சுபஸ்ரீ ஸ்ரீராம் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநிலத் தலைவர் துரைசங்கர், பொதுச் செயலாளர் ராஜேஷ் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். தமிழகத்தில் மழை வெள்ள மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்ட பாரத ராணுவ வீரர்களையும் அதிகாரிகளையும் பாராட்டும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் அகிலபாரத சேவா பிரமுக் ஸ்ரீ சூரியநாராயண ராவ், ராணுவத்தினரின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்த கர்னல் ஏ. ராஜா பிள்ளை (ஜெனரல் ஸ்டாப் அதிகாரி), கர்னல் டி. பிரதீப் குமார் (ஓய்வு) ஆகியோருக்கு நினைவுப் பரிசளித்து கௌரவித்தார்.
வெள்ளத்திலிருந்து 19,500 பேரை நாங்கள் பத்திரமாக மீட்டோம். எங்களுடைய பணியைக் காட்டிலும் சென்னை மக்கள் ஒற்றுமை உணர்வுடன் சேவையாற்றியது பாராட்டுக்குரியது.” என்றார் பாராட்டுப் பெற்ற ராணுவ அதிகாரி லெப். கர்னல் ராஜா. ஓய்வு பெற்ற கர்னல் பிரதீப் குமார் பேசும்போது, சென்னையின் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் மேற்கொண்ட முயற்சிதான் சென்னை நகரம் விரைவில் இயல்புநிலை அடைவதற்கு முக்கிய காரணம். இந்தியனாகவும் ராணுவ வீரனாகவும் பெருமைக்கொண்ட நான் தற்போது சென்னைவாசி என்பதிலும் பெருமை கொள்கிறேன்” என்றார்.
சேவாபாரதி பணிகள்
* ஒரு மாதமாக பணிக்களத்தில் 5,500 தொண்டர்கள்.
* வெள்ளத்திலிருந்து 1,350 பொதுமக்கள் மீட்பு.
* 21 லட்சம் உணவுப் பொட்டலங்கள்.
* 63,000 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய குடும்ப ‘கிட்’கள்.
* 100 டாக்டர்களின் மருத்துவ உதவி. 23,000 பயனாளிகள்.
கவுன்சலிங் மூலம் ஆறுதல் தரும் பணி தொடர்கிறது.