சென்ற முறை “பாக்.கிற்கு பதிலடி தரப்பட்டிருக்கும்” என நான் குத்துமதிப்பாக எழுதியதற்கு உண்மையான பதிலடியை குத்துமதிப்பாக அல்லாமல், குறிவைத்து, சரியான இலக்கை “பாலாகோட்”டில் ௩௦௦ ஜெய்ஷ் எ முகம்மது பயங்கரவாதிகளுக்கு ஒரே இடத்தில் சமாதி கட்டிய மோடிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!
இது ஒவ்வொரு இந்தியனின் உள்ளக் குமுறலுக்கும் கிடைத்த ஆறுதல், தேசத்தின் மரியாதைக்கு கிடைத்த வெற்றி! இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும்போது சில சரித்திர நிகழ்வுகளை நினைவுகூர்ந்துதான் ஆகவேண்டும்!
இதற்குமுன் நம்மை ஆண்ட நமது பிரதமர்கள் பாகிஸ்தானோடு போரிடவில்லையா? அதில் வெற்றி காணவில்லையா? திடீரென மோடிக்கு அதுவும் போரே தொடுக்காமல், அதிகாலை ௩.௩௦ மணிக்கு ஒரு இலக்கை மட்டும் குறிவைத்து தாக்கி ௩௦௦ பேரை அழித்துவிட்டால் அது மாபெரும் சிறப்பா எனக் கேட்பது புரிகிறது. இது சிறப்புதான். எந்த வகையில் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா-?
1962ல் சீனா நம்மீது படையெடுத்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, “இந்தி சீனி பாய் பாய்” என சீன ராணுவத்தை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று 1000 சதுர கி.மீ. நம் இந்தியப் பகுதியை சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். கேட்டதற்கு அது புல் பூண்டு விளையாத பகுதி என பதிலளித்தார். ஆனால் ௧௯௬௬ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, பாகிஸ்தானின் ராவல்பிண்டி வரை நம் படைகளைச் செலுத்தி வெற்றி பெறும் நேரத்தில் “தாஷ்கண்ட் ஒப்பந்தம்” போர் நிறுத்தம் என வென்ற பகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு வர வேண்டியதாகி விட்டது.
௧௯௭௧ல் வங்க தேச யுத்தத்தில் ௯௦,௦௦௦ பாகிஸ்தான் ராணுவ வீரர்களைச் சரணடையச் செய்து கிழக்கு பாகிஸ்தானை, வங்க தேசமாக நாம் பிரித்துக் கொடுத்தோம். பிரதமர் இந்திராவை நாடே புகழ்ந்தது. ஆனால் ௯௦,௦௦௦ வீரர்களுக்குப் பிரதி உபகாரமாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தால், இன்று இந்தப் பிரச்சனைகளே இருந்திருக்காது.
முதன்முதலாக இந்திய நிலப்பகுதி ஆக்ரமிக்கப்பட்டு அதை மீட்டதோடு மட்டுமல்ல, பாகிஸ்
தானுக்குள் புகுந்து அவர்களை ஓட ஓட விரட்டிய போர் வல்லவன் வாஜ்பாய் காலத்தில் ௧௯௯௯ல் நடந்த கார்கில் யுத்தம்தான். அது மாபெரும் யுத்தம். ஏராளமான உயிரிழப்பு. இறுதி வெற்றி நமதாயினும் அதற்கு கொடுத்த விலை அதிகம்!
ஆனால், ௧௨ ‘மிராஜ் ௨௦௦௦’ விமானத்தைப் பயன்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் ௧௦௦௦ கிலோ குண்டுபோட்டு ஜெய்ஷ் எ முகம்மது பயங்கரவாதிகள் முகாமையே காலி செய்த பெருமை நரேந்திர மோடிக்கு உரித்தானது.
இரட்டை கோபுரத்தின் மீது லஷ்கர் இ தொய்பா விமானத் தாக்குதல் நடத்தி பல ஆண்டுகளுக்குப் பின்பே பாகிஸ்தானில் ஒளிந்திருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது.
காஷ்மீர் புல்வாமாவில் ௪௪ சிஆர்பிஎப் படைவீரர்கள் பலிதானம் ஆன ௧௨ம் நாள் ஈமக்கிரியை முடித்து அவர்களுக்காக அலகாபாத் கும்பமேளாவில் மூழ்கி எழுந்து, ஆரத்தி காட்டிவிட்டு ௧௩ம் நாள் அதிகாலையில் அத்தனை பயங்கரவாதிகளையும் எமனிடம் அனுப்பிய பெருமை மோடியின் சாணக்கியத்துவத்திற்குச் சான்று!
அதோடு பாதுகாப்புக்கான மந்திரி சபை கூட்டம், ராஜஸ்தான் சுருவில் தேர்தல் பிரச்சாரம், டெல்லி மெட்ரோ ரயில் பயணம் என ஓயாமல் ஓடிய மோடி என நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு, பாகிஸ்தானை, சும்மா சொல்லக்கூடாது, ஆடவைத்து விட்டது. உலக நாடுகள் எல்லாம் தனக்கு ஆதரவு அளிக்கும் என நினைத்த பாகிஸ்தானுக்கு மாபெரும் ஏமாற்றம். பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய அனைத்தும் இந்தியா பக்கமே. உலகப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல் நடத்தி விட்டதாகவே எழுதின.
கார்டியன் பத்திரிகை மட்டுமே இந்தியாவின் வீரதீர சாகசம் என்றது. இது இந்திய – சீன உறவிற்கான பலவீனத்தின் அடையாளம் என சீனா சொன்னது. இந்தியாவைக் கண்டிக்கவுமில்லை. பாகிஸ்தானை ஆதரிக்கவும் முடியவில்லை.
வாஷிங்டன் போஸ்ட், ABC News, CNN, Fox News போன்ற எதுவுமே இந்தியாவை குறை சொல்ல
வில்லை. இது இந்திய ராஜதந்திரத்தின் வெற்றி!
இஸ்ரேல் மட்டும் வெளிப்படையாக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. எந்த உதவியும் எந்தேரமும் கேட்கலாம் என அறிவித்தது.
பாகிஸ்தான் தனிமைப்படுத்தப் பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இது பாகிஸ்
தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சண்டையாக பாகிஸ்தான், உலகளவில் கொண்டு செல்ல எண்ணியது. ஆனால் அது நிறைவேறவில்லை. காரணம் மோடி வெகு சாதுர்யமாக பயங்கர
வாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினார். பொது மக்களுக்கும் பாதிப்பில்லை, பாக். ராணுவத்தையும் தொடவில்லை. எனவே இதைச் சண்டையாக பாகிஸ்தானால் காண்பிக்க முடியவில்லை. இந்த சாதுர்யத்தால் பாகிஸ்தான் ஆடிப்போனது அது அதன் தலைவர்கள் விட்ட அறிக்கைகளிலிருந்து தெரிந்தது.
பாக். பிரதமர் இம்ரான்கான், “நான் இந்தியாவுடன் போரை விரும்பவில்லை” என்றார். பாகிஸ்தானின் முக்கியமான பத்திரிகையான டான், “போர் என்பது பொழுதுபோக்கு அல்ல” என தலையங்கம் எழுதி, பாகிஸ் தானின் இயலாமையைச் சமாளித்தது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் அங்குள்ள பத்திரிகைகள் ஜியோ டிவி, துனியா நியூஸ், ஷமா டிவி, ெசய்திகளை எழுதியது. “பேசுவோம்; நமக்குள் சண்டை வேண்டாம்” என பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை அதிகாரிகள் கூறினர்.
ஆக, வரலாற்றில் முதல் முறையாக போர் வேண்டாம் என பாக். பிரதமர், ராணுவம், பத்திரி
கைகள் கூறின. ஏன் என நாம் பார்த்தாக வேண்டும்!
“பாலாகோட்” குண்டு வீச்சுக்குப் பிறகு பாக். இந்தியாவை நிச்சயம் தாக்கும் எனவும், போர் மூளும் எனவும், ஜிங்கூ நியூஸ் எனும் சீன ஏெஜன்சி மற்றும் நியூயார்க் டைம்ஸும் எழுதின. ஆனால் பாலாகோட் குண்டுவீச்சு முடிந்து இந்தக் கட்டுரை எழுதும் ௪வது நாள் வரை பாகிஸ்தான் பெரிய எதிர்வினை ஆற்றவில்லை. ஏன் என்று மீண்டும் கேட்கிறேன்.
வாஜ்பாய் இருந்த போதிருந்த அதே ராணுவம்தான். ராணுவ பலம் இருவர் பக்கமும் தினசரி ஒரே மாதிரிதான் பெருகி வருகிறது. ௧௯௯௯ல் போர் தொடுத்த பாகிஸ்தானால் இப்போது ஏன் போர் தொடுக்க முடியவில்லை?
ஒரே காரணம் வலிமையான தலைமை! வலிமையான பிரதமர். அது இப்போது உறுதி யானதல்லவா!
தற்போது அபிநந்தன் பிடிபட்ட ௪ம் நாளிலே விடுதலை செய்யப்படுகிறார் என்றால் இது நமது ஆளுமைக்கு கிடைத்த வெற்றி!
“நாம் ஒன்றாக போராடுவோம்; ஒன்றாக வெல்வோம்.” இதுவே மோடியின் செய்தி! ஆனால் நம்மோடு சேர்ந்து ஒத்துழைக்க எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன. நாட்டுக்கெதிராக பல குரல்களில் பேசுகின்றன. இடதுசாரிகள், முஸ்லிம்கள் என இப்பட்டியல் இப்போது வெட்ட வெளிச்சமானது. இந்த மண்ணின் உப்பைத் தின்று நமது நாட்டிற்கு துரோகம் செய்யும் இவர்களை என்ன செய்யலாம்… சொல்லுங்கள்…
சொல்லைவிட செயலே பெரிது. “பாலாகோட்” பலிகள் சொன்ன செய்திதான், “போர் வேண்டாம்” என்ற ஒப்பாரியும், அபிநந்தன் விடுதலையுமாகும். எந்த காலத்தில் பாகிஸ்தானிடமிருந்து இப்படிப்பட்ட பதில்கள் வந்திருக்கின்றன-?
௨௦௦௪லிருந்து ௨௦௧௮ வரை எப்போது “பேச்சுவார்த்தை” என்று ஒன்று ஆரம்பித்தால் உடனேயே ஒரு “பயங்கரவாத தாக்குதல்” நடக்கும். நாம் பேச்சு வார்த்தையை நிறுத்து வோம். இதுவே தொடர்கதையாக இருந்தது. பாகிஸ்தானுடனான சமாதானப் பேச்சு வார்த்தை தினத்தந்தி சிந்துபாத் கதை போல முடிவும் தெரியாமல் முதலும் புரியாமல் தொடர்ந்தது.
இப்போதுதான் பாகிஸ்தானுக்கு புரிகிற மொழியில் நாம் பேசியிருக்கிறோம். அம்
மொழி தெரிந்தவர் மோடி மட்டும்தான் என்பது இப்போது உலகத்திற்கும் தெரிந்திருக்கிறது.
இதற்கிடையில் இன்னுமொரு அசிங்கம் எதிர்க்கட்சிகளால் அரங்கேற்றப்பட்டது. எல்லைப்பாதுகாப்பு, பயங்கரவாதம் ஒடுக்கப்படுதலில் நாடே மும்முரமாக ஈடுபட்டி ருக்கும்போது இதன் அரசியல் லாபம் மோடிக்குப் போய்விடுமோ என்கிற பயத்தில் உமர் அப்துல்லா முதல் உருப்படாத ஸ்டாலின் வரை உளறல் சத்தம் ஓங்கி ஒலித்தது!
அபிநந்தன் விடுதலைக்காக செயல்படாமல் மோடி கட்சியின் பூத் மீட்டிங் பேசுவதா? டேராடூனில் ஷுட்டிங்கில் இருக்கிறார் என்ற ஒப்பாரி ஊர் முழுவதும் கேட்டது.
அட முட்டாள்களா! அலறிப் புடைத்துக் கொண்டு பாகிஸ்தான், அபிநந்தனை விடுவிப்ப தற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுத் தானே பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி!
ராகுலுக்கு அரசு அதிகாரிகள் போல PL, SL, EL விடுமுறைகள் உண்டு. மோடி 24×7 வேலைக்காரர். உங்களைப் போல் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பவர் அல்ல அவர். அடுத்த மாதமல்ல, அடுத்த வருட வேலைத் திட்டத்தை இப்போதே முடிவு செய்து வைத்திருக்கிற RSS பிரச்சாரக் அல்லவா அவர்!
அபிநந்தனின் விடுதலையோடு பாகிஸ் தானின் அக்கப்போர் முடிந்துவிடுமா? பாலா கோட் தாக்குதலுக்கு நிச்சயமாக அது என்றுமே எதிர்வினை ஆற்றாதா?
பால் குடிக்காத பூனை, மீன் பிடிக்காத கொக்கு இருந்தாலும் இருக்கலாம். ஆனால் மனம் திருந்திய, சமாதானம் பேசும், பாகிஸ்தான் இருக்கவே முடியாது. அதை எப்படி எதிர் கொள்வது? எப்படி என்பதை மோடி செய்து காட்டி விட்டார்.