தேசத்தின் முதன்மை தொழிற் சங்க கூட்டமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) பல்வேறு நிறுவனங்களிலும் நடந்த தேர்தல்களில் வென்று விரிவான தொழிலாளர் ஆதரவு பெற்று வருகிறது.
* பாதுகாப்புத் துறையில் ஆவடியிலுள்ள எம்.ஈ.எஸ். நிறுவனத்தில் இருவர் தளவாட கிடங்கு நிறுவனத்தில் ஒருவர், திருச்சியில் தளவாட தொழிற்சாலையில் ஒருவர் என ஒர்க் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தவிர கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவடி ஈ.எம்.எஸ்.ல் 9 பேரும் தளவாட கிடங்கில் இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நீலகிரியிலுள்ள அரவங்காடு கார்டிக்ட் நிறுவனத்தில் ஒர்க் கமிட்டிக்கு 4 பேரும் கூட்டுறவு சங்கத்திற்கு ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
* திருச்சி பெல் (BHEL) தொழிற்சாலையில் நடந்த சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் பி.எம்.எஸ். வெற்றி பெற்றது. சேம நலநிதி (PF) குழுத் தேர்தலிலும் BMS இடத்தைப் பெற்றது. CITU, AITUC பிராந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் தோல்வியைத் தழுவின.
* தொழிற் போட்டியில் சீன நிறுவனம் பெல் நிறுவனத்திறெதிராக வழக்குத் தொடர்ந்தபோது பி.எம்.எஸ்.ஸும் நீதி மன்றத்தை அணுகியது. இரு நிறுவனங்களுக்கிடையிலான வழக்கானதால் பி.எம்.எஸ். வாதாட நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் பி.எம்.எஸ். பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இறுதியில் பெல் நிறுவனம் வழக்கில் வெற்றி பெற்றது. ஏனைய சங்கங்கள் இவ்விஷயத்தில் செயலற்று இருந்தன.
தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிட தொழிற்சங்கங்களின் இரட்டை வேடத்தை பி.எம்.எஸ். அம்பலப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 17ஐ தேசிய தொழிலாளர் தினமாக அறிவித்து விடுமுறை அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. இதன் விளைவாக மோடிஜி தலைமையிலான மத்திய அரசு, விஸ்வகர்ம ஜெயந்தியை (செப். 17) தேசிய தொழிலாளர் தினமாக அறிவித்து தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகரத்தை வழங்குவோம் என அறிவித்திருக்கிறது. அதை பி.எம்.எஸ். வரவேற்கிறது.
இவ்வாறு நம் நாட்டின் மகத்தான பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் மேன்மையை தொழிலாளர்கள் மத்தியில் பாரதிய மஸ்தூர் சங்கம் பிரச்சாரம் செய்கிறது. ஜாதி, இனம், மதம், மொழி, ஏனைய நடைமுறைப் பழக்கங்கள் ஆகியவற்றால் வேறுபாடுகள் இருப்பினும் நாம் அனைவரும் ஓரன்னையின் மக்கள், இந்த ஒரே நாடு என்கிற செய்தியையும் விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தன்று பொதுக் கூடடங்கள் மூலமாகவும் இதர வழிகளிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. திராவிடம் பரப்புவோரும் பொது உடமை பேசுவோரும் தொழிலாளர் துறையில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். பிரிவினைவாதத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பில்லை. உலகம் முழுவதும் தோற்றுப்போன கம்யூனிஸத்தைப் பற்றி தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் எள்ளி நகையாடுகின்றனர். கம்யூனிஸம் மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்றாக பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) முன்வைக்கிற ‘ஏகாத்ம மானவ தர்சனம்’ வரவேற்பைப் பெறுகிறது.
(தென்பாரத அமைப்புச் செயலாளர், பாரதிய மஸ்தூர் சங்கம்)