கர்நாடகா உடுப்பியில் 1969ல் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடு நடந்தது. ஹிந்து மதத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தலைவர் களும் வந்திருந்தனர். அந்த மாநாட்டில் ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை” என்ற கருத்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேறியது. இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியதில் ஸ்ரீ குருஜியின் பங்கு மகத்தானது.
பிரயாகையில் 1966ல் கும்பமேளா நடைபெற்றது. ஹிந்து மதத்தை விட்டு யாராவது ஒருவர் முஸ்லிம் அல்லது கிறிஸ்தவராகி விட்டால் அவர் திரும்பவும் ஹிந்து மதத்தில் சேர முடியாது என்ற நிலை அப்போது இருந்தது. இதனை மாற்றி மதம் மாறியவர்கள் அனைவரையும் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பலாம் என்ற கருத்து எல்லா சமயாச்சாரியார்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது.