குறி, பயங்கரவாதிக்கு,
குழுக்களில் மக்கள்!
சில தினங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் ஜம்முவில் செதியாளர்களிடம் பேசியது போது, கிராமப் பாதுகாப்புக் குழுக்களை கலைக்குமாறு கேட்பது, பொருத்தமற்ற கோரிக்கை. மாநிலத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்ட கிராமப் பாதுகாப்புக் குழுவினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
ஜம்மு பகுதியில் குறிப்பாக பாரத – பாகிஸ்தான் எல்லை கிராமங்களில் மக்கள் படும் துன்பங்களிலிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட வைதான் கிராமப் பாதுகாப்பு குழுக்கள்.
கிராமப் பாதுகாப்பு குழுவை கலைக்கக் கோரி குரல் கொடுப்பவர்கள், ஒன்று, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை இழந்த தேசிய மாநாட்டு கட்சியினர், இரண்டாவது காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடும் பிரிவினைவாத அமைப்புகள்.
1994ம் வருடம் காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது கிராமப் பாதுகாப்பு குழு முதன் முதலில் அமைக்கப்பட்டது. கிராம மக்களை பாதுகாப்பதும் பயங்கரவாதிகளுக்கு உதவி புரியும் தேச விரோத சக்திகளை அடையாளம் காட்டுவதும், பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதக் குவியலை பாதுகாப்பு படையினருக்கு அடையாளம் காட்டுவதும் இவர்களின் முக்கியமான பணிகள்.
கிராமப் பாதுகாப்புக் குழுவினரின் செயல்பாட்டால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதிகளில் பயங்கரவாதிகளின் புதிய தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை, ஊடுருவலும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இவ்வாறு பயிற்சி பெற்ற கிராமப் பாதுகாப்பு குழுவினர் 2013ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சம்பா, கட்டுவா பகுதியில் உள்ள பின் நுல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுத குவியலை கண்டு பிடித்து, காவல் துறையினரிடம் தெரிவித்ததால், பெருமளவில் ஆயுதங்ள் கைப்பற்றப்பட்டன, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஐந்து ஒயர்லஸ் செட்கள், ஐ.ஈ.டி எனப்படும் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2015 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் அருகில் லஷ்கர் பயங்கரவாதியான முகமது நவீத் யூசுப் என்பவனை கிராமப் பாதுகாப்பு குழுவினர் கைது செது காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள். இந்த சம்பவத்தில் கிராமப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள்.
இந்தக் குழுவின் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, சிறுபான்மையினத்தவர் குறிப்பாக ஹிந்துக்கள் மட்டுமே இந்தக் குழுவில் இருப்பதால், வகுப்புக் கலவரங்கள் நடைபெறுகின்றன, எனவே இந்தக் குழுவை கலைக்க வேண்டும் என்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொயானது.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மாரா குலாலி என்ற இரு கிராமங்களிலும் முழுவதும் பெண்களே உள்ள கிராமப் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் அதிக அளவில் உள்ளவர்கள் இஸ்லாமியப் பெண்கள்.
கிராமப் பாதுகாப்புக் குழுவைத் தடை செய வேண்டும் என்று 2013 ஆகஸ்டில் மாதம் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நீதி மன்றத்தில், அரசு தாக்கல் செத அறிக்கையில், கிராமப் பாதுகாப்புக் குழு அமைத்த பின்னர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளன, அப்பாவி கிராம மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், ஊடுருவல் வெகுவாகக் குறைந்துள்ளது என குறிப்பிட்டதால், வழக்கு தள்ளுபடி செயப்பட்டது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக், கிராமப் பாதுகாப்பு குழுவினரால் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக உலக மனித உரிமை ஆணையத்தில் மனு கொடுத்தார். இந்நிலையில் மாநில காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தினேஷ் ரானா முஸ்லிம்கள் உள்ளிட்ட கிராம பாதுகாப்புக் குழுவினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றினார்கள். ஒருபோதும் அந்த அமைப்புக்கு வேட்டு வைப்பது கூடாது” என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆகவே பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் பிரிவினைவாத அமைப்புகள் மட்டுமே கிராமப் பாதுகாப்புக் குழுவிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். சிட்டிசிங்புராவில் அப்பாவி சீக்கியர்களை ராணுவ உடையில் தாக்குதல் நடத்தி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த லஷ்கர் அமைப்பிற்கு வக்காலத்து வாங்கும் பிரிவினைவாதிகள், தங்களின் நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் கிராமப் பாதுகாப்புக் குழுவை கலைக்க கோருவது எடுபடாது.