காங்கிரஸ் கட்சிக்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை பிரசுரிக்கும் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் (ஏஜோல்) திருப்பித் தரவேண்டிய 90 கோடி ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்று கூறிவிடும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சோனியா காந்தியின் குடும்ப நண்பர்களான சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவியல் நடவடிக்கைகள் தான் என்று நிரூபணம் செவதே ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு.
கடனைத் திருப்பித் தரத்தேவையில்லை என்று கூறும் இவர்கள் அதற்கு கைமாறாக என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஏ.ஜே.எல். என்ற அந்த நிறுவனத்தையே மற்றொரு நிறுவனமான யங் இண்டியன் (Young Indian)என்ற நிறுவனத்திற்கு விற்று விடுமாறு கூறுகிறார்கள். அவர்கள் கூறியபடியே அந்த நிறுவனமும் தனது அனைத்துப் பங்குகளையும் யங் இண்டியன் என்று அழைக்கப்படும் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கமுடியும் என்று கேட்கிறீர்களா? இங்கு தான் உள்ளது ஊழல். 90 கோடி ருபா கடனைத் திருப்பித் தரமுடியாத நிலையில் உள்ள ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு சோந்தமாக, புது டெல்லி, போபால், இந்தூர், லக்னோ என இந்தியாவின் முக்கிய நகரங்களில் சுமார் 5,000 கோடி ரூபா மதிப்பிலான அசையா சோத்துக்கள் உள்ளன.
இந்தப் பங்கு பரிமாற்றத்தின் மூலம், யங் இண்டியன் என்ற நிறுவனத்திற்கு அத்தனை அசையா சோத்துக்களும் இலவசமாக கிடைத்துவிடுகிறது. அதற்கு பிரதி உபகாரமாக அந்நிறுவனம் ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு தரும் தொகை வகை 50 லட்சம் ருபா மட்டுமே.
இப்பொழுது தான் ஊழலின் உச்சக் கட்டத்திற்கு வரவிருக்கின்றோம். நான் ஏற்கனவே சோன்ன ஆறு நபர்களும், ஏ.ஜே.எல். நிறுவனத்திலும் இயக்குனர்களாக இருக்கின்றனர். அதே சமயம் யங் இண்டியன் நிறுவனத்திலும் அவர்களே இயக்குனர்களாக இருக்கின்றனர். அதாவது, தாங்கள் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் பணத்தை எடுத்து தாங்கள் இயக்குனர்களாக இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, அந்நிறுவனத்திற்கு சோந்தமான சுமார் 5,000 கோடி அசையா சோத்துக்களை தாங்களே இயக்குனர்களாக இருக்கும் மூன்றாவது நிறுவனத்தில் கொண்டு வந்து சேர்த்து, அதன் மூலம் அனைத்து சோத்துக்களுக்கும் அவர்களே உரிமையாளர்களாகி விடுகின்றனர்.
ஊழல் நடைபெற்றது 2010 நவம்பரில். அது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது 2012 அக்டோபரில். டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தது 2013 ஜனவரியில். வழக்கு சுமார் 18 மாதங்கள் நடைபெற்ற வாதங்களுக்கு பின்னர் நீதிமன்றம் 2014 ஜூன் 26 அன்று, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அவர்களது கூட்டாளிகளை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்க உத்தரவிட்டது.
அந்த சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து சுமார் 17 மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில், கடுமையான விவாதங்களை கண்ட அந்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் தாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லை என்று விடுவித்துக்கொண்ட சம்பவமும் நடைபெற்றது. இறுதியாக, நீதிபதி சுனில் கவுர் டிசம்பர் 4ஆம் தேதி விவாதத்தை முடித்து, பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்று ஒத்திவைத்தார்.
நீதிபதி சுனில் கவுர், ‘கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு செல்லும் என்றும், குற்றம் சாட்டப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்‘ என்றும் 2015 டிசம்பர் 7 அன்று உத்தரவிட்டார்.
டெல்லி உயர்நீதி மன்றத்தில் தங்களது வழக்கு தள்ளுபடி செயப்பட்ட நிலையில், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டிசம்பர் 19 அன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அவர்களது கூட்டாளிகள் நேரில் ஆஜராக இருக்கின்றார்கள். அன்று அவர்கள் வீடு திரும்புவார்களா? அல்லது சிறை செல்லுவார்களா? இதற்கான பதில் நீதிபதியின் கையில்தான் உள்ளது.