சூரிஜி செய்த தவம் பலித்தது அங்கிங்கெனாதபடி எங்கும் சங்கம்

சூரிஜி தோற்றத்தில் கஜராஜன், கர்ஜனையில் வனராஜன், தர்ம பரிபாலனத்தில் தர்மராஜன். ஹிந்து விரோதமும் ஹிந்தி விரோதமும் தலைதூக்கிய வேளையிலே திராவிட மாயையால் திராவிட சிந்தனைகள் உச்சம்கண்ட வேளையிலே ஹிந்து தேசியத்தை நிலைநாட்டும் வேலையில் நாற்பத்தைந்தாண்டுகள் தமிழகத்தில் பவனி வந்து  எண்ணற்ற ஊழியர்கள் உருவாக துணை நின்றார்.

தமிழகம் உடைக்க முடியா கரும்பாறை”, (Hard nut to crack), திராவிட மண்ணில் ஆரிய விதை முளைக்காது”, அங்கொன்றும் இங்கொன்றுமா ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது”, என்றெல்லாம் இருந்த தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஆர்.எஸ்.எஸ்.” என்ற நிலை உருவாக நல்வழி காட்டினார் சூரிஜி.

அவசரநிலை நீங்கியபின் ‘துக்ளக்’ பேட்டியிலே சங்கக் கருத்துக்களை அவர் அள்ளித் தெளித்தபோது ‘சங்கத்தில் நான் சேர்வேன்’, என பலர் சங்கத்தைத் தொடர்புகொண்டனர். சுவாமி சித்பவானந்தர் முதல் நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டி வரை – பல ஆன்றோரும் சான்றோரும் சங்கக் கருத்தில் திளைக்க சூரிஜி காரணமா இருந்தார். உணவருந்த அமருகையில் என்னப்பா, டிரைவரை சாப்பிடக் கூப்பிடீங்கோ?” எனக் கேட்கும் அவர் சோல்லில் சமநோக்கை யாம் கண்டோம்.

கணவன் – மனைவி ஓவெடுக்கும் தனியறையில் இவரை தங்கவைத்தால், இல்லேப்பா, தம்பதியர் அறையில் அன்னியர் தங்குவது முறையல்ல” என்று சோல்லி மெயின் ஹாலில் ஓவெடுப்பேன் என்றிடும்போது நிறைய இங்கிதம் நிறைந்தவர் சூரிஜி என்று நாமுணர்ந்தோம்.

சங்க அமர்வு (பைட்டக்) என்றால் தங்களுக்குள் யார் யார் பேசிடினும், உங்க பேச்சை முடியுங்கோ, அப்புறம் நான் பேசுவேன்” என சோல்லடி கொடுக்கும்போது இவர் கண்டிப்பு பேர்வழி என எச்சரிக்கையாகி விடுவோம்.

சோற்பொழிவு முடிந்தவுடன்,  நான் சோன்ன விஷயங்கள் கேட்டவர்களுக்கு (audience)  பொருத்தமா இருந்தது தானே?” எனக் கேட்கும்போது அவரின் விநயப் பண்பால் மெசிலிர்த்து போவிடுவோம்.

எனக்குத் தமிழில் அவ்ளவா பேச வராது.  தப்பு இருந்தா மன்னிச்சுக்கோங்கோ”, என்று ஆரம்பித்து மழலையும் இனிமையும் கலந்த சோக்குத்தமிழில் பேச்சைத் தொடரும்போது, அவரது பேச்சை ரசித்தவர்கள் ஏராளம்!

சேவிகா சமிதி பெண்களிடம் உரையாற்றத் தொடங்கும் முன்பு மொழியே தெரியாத பிஞ்சு குழந்தைகளின் உடல்மொழியை (Body Language) புரிந்துகொள்ளும் திறன்படைத்த தாமார்கள், எனது கொச்சைத் தமிழை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்”, என்ற நயமான அவரது சோல்லைக் கேட்டுத் தாமார்கள் வளைகரங்களால் கரவொலி எழுப்பிய காட்சி இன்னும் கண்முன் பசுமையா நிற்கிறது.

ஒரு முறை இரவு தூங்க சூரிஜிக்கும் விபாக் பிரச்சாரக் பத்மநாபனுக்கும் (பத்துஜி) என் மனைவி தனித்தனியே மெத்தை ஏற்பாடு செதபோது, தனது மெத்தையை சுருட்டிவைத்துவிட்டு, வெறும் பாயில் படுக்க முயன்ற பத்துஜியிடம் ஜி மெத்தையில் படுத்துக்கொள்ளுங்கள்”, என என் மனைவி வற்புறுத்தியபோது இல்லேம்மா, நான் பிரச்சாரக். மெத்தையில் படுக்கக்கூடாது’ என பத்துஜி கூற, சட்டென சூரிஜி கூறினார்’: ஏம்பா, நானும் பிரச்சாரக்தானே!  ஒரு விஷயத்தைப் புரிந்துகோங்கோ. ஒரு பிரச்சாரக் எளிமையில் மோகம் கொள்ளக் கூடாது. மெத்தை, கட்டாந்தரை இரண்டையும் விருப்பு வெறுப்பின்றி பார்க்க வேண்டும். அ/இ அறையாகிடினும், கட்டுத்தறியடியே ஆகிடினும் ஒரே பார்வையில் பைட்டக் நடத்தப் பழகத் தெரிஞ்சுக்கோணும்.”

1993 ஆகஸ்டு 8ல் சென்னை சங்க கார்யாலயம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. பிரமாண்டமான கட்டிடம் நொறுங்கிய காட்சியைக் கண்டு சூரிஜி விம்மி அழுதார். பரவாயில்லை ஜி,  மீண்டும் புது கார்யாலயத்தை நிர்மாணம் செதுகொள்ளலாம்”, என்று கார்யகர்த்தர்கள் ஆறுதல் சோன்னபோது, கண்களில் கங்கை வழிந்தோட அவர் சோன்னார்: பாருங்கோ, கட்டிடத்தைக் கட்டிவிடலாம். ஆனால் பலியான என் பதினோரு கண்மணி கார்யகர்த்தர்களின் உயிரை மீட்க முடியுமா?”  எனக் கதறலோடு கேட்டபோது, அவரது கரிசனம் நிறைந்த பூ நெஞ்சம் எங்களைக் கவர்ந்தது.

வயது நிறைந்த மூத்தோர்கள், இளையவர்களுக்கு வாப்பளித்து பொறுப்புகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதில் முந்தைய சர்சங்கசாலக் பாளாசாகேப் தேவரஸ் போன்று சூரிஜியும் உதாரணமானார்.

பொறுப்பு இல்லாத நிலையிலும், உடல் ஒத்துழைக்காத போதிலும் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளுக்காகப் பயணித்தே வந்தார். சக்கர நாற்காலி, வாக்கர் உதவியோடு பல இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தார். உயர்ந்த கருத்துக்களையும், முதிர்ந்த அனுபவங்களையும் புத்தகமாக எழுத்தில் வடித்தார்.

நவீன விஞ்ஞான உலகில் சங்கத்தின் அடிப்படை பத்ததியை சிலர் மறந்தபோது back to the basics என்று வலியுறுத்தும் இவரது பாங்கு மெச்சத் தக்கதாகும்.

சிந்தாமல் சிதறாமல் அவர் சாப்பிடும் அழகு மூத்த வயதிலும் தினம் தினம் முகச் சவரம் செவது, பார்ப்பதற்கு நேர்த்தியான பளிச் என்று தூய ஆடை அணிவது, சாதுக்களைப் பார்க்கும்போது சாஷ்டாங்க நமஸ்காரம் செவது, சகஜமாக உரையாடும்போது ஆத்மார்த்தமான நட்பு பாராட்டுவது, தவற்றை தனிமையிலே திருத்துவது, நல்லவற்றை நாலு பேர் முன் பாராட்டுவது – இப்படி அவரிடம் எத்தனை எத்தனை அற்புத குணங்கள்!

சூரிஜி பூத உடல் சாமராஜ்பேட் ஹரிச்சந்திரா மயானத்தில் தகனமானது. எனினும் அவரது வாக்கும், வாழ்க்கையும் நமக்கு என்றென்றும் ஊக்க ஊற்றாகவே இருக்கும்!

(கட்டுரையாளர் ஆர்.எஸ்.எஸ்ஸின்

வட தமிழ்நாடு மாநில துணைத் தலைவர்)

 

நமது சூரிஜி பற்றி சம்பவங்கள்

எழுதி அனுப்புங்கள்

மரர் சூர்யநாராயண ராவ் அவர்களுடன் நன்கு பழகியவர்களும் அவரது வழிகாட்டல் பெற்றவர்களும் சங்கப்பணிக்கு பயன்படும் பல அனுபவங்கள் பெற்றிருப்பார்கள். அவற்றை எடுத்தெழுதி எனக்கு அனுப்ப வேண்டுகிறேன். மேலும் தங்களிடமுள்ள சூரிஜி முக்கிய பிரமுகர்களுடன் உள்ள  புகைப்படங்களையும் (தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாக) அனுப்பி வைக்கவும். விரைவில் அவரது வாழ்வையும் பணியையும் விவரிக்கும் ஒரு புத்தகமாகத் தொகுக்க இருக்கிறோம்.

நா. சடகோபன்

வட தமிழக பிரச்சார் பிரமுக்

 அனுப்ப வேண்டிய முகவரி:

விஜயபாரதம், (முதல் தளம்),

‘சேவா’, 79, டாக்டர் அழகப்பா சாலை,

புரசைவாக்கம், சென்னை – 600 084. 

Email: suriji2016@gmail.com