நம் பாரத நாடு மிகத் தொன்மையான நாடு. தத்துவத்திலும் சிந்தனையிலும் வளமான கருத்துக்கள் வழங்கிய பெருமைக்குரிய தேசம் நம் பாரதம். இந்தப் பிரபஞ்சத்தில் வசிக்கின்ற அனைத்து உயிர்களும், ஏன் இந்த பிரபஞ்சமே கூட, ஒரே வேரிலிருந்துதான் தோன்றியது என்னும் சிந்தனை தான் பாரதத்தின் கோட்பாடு. ஒரே ஆதிசக்தியிலிருந்துதான் அனைத்தும் பிறந்தன என்னும் கருத்து எத்துணை சத்தியமானது, எத்துணை மேன்மையானது! இந்தக் கருத்து நம் நாட்டின் பண்டைய ரிஷி முனிவர்கள் நமக்கு அளித்த மிகப் பெரும் பொக்கிஷம். அவர்கள் அனைவருமே இந்த உயர்ந்த சிந்தனையை வெறும் வாய் வார்த்தையாக சோல்லாமல், தங்களின் நேரடியான அனுபவத்திலிருந்து உணர்ந்து கூறியிருக்கிறார்கள்.
“எப்போது நாம் நம் முன்னோர்கள் வகுத்த இந்த மேன்மையான உண்மையிலிருந்து தடம் புரண்டு தவறான பாதையில் செல்ல ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்துதான் நம் சமுதாயம் சீர்கேடான நிலைக்கு தள்ளப்பட்டது. நம் தேசத்தில், சாதீய அமைப்புகள் தோன்றி, தீண்டாமை என்னும் கொடிய நோய் நம்மைப் பீடிக்க ஆரம்பித்தது.
” தேசம் பலம் பெறுவது சமுதாயத்திலிருந்து. சமுதாயம் பலம் பெறுவது ஒற்றுமையால், நல்லிணக்கம் காணும் எண்ணத்தால், நடத்தையால். ஆத்மவத் சர்வ பூதேஷு”; (அனைத்து உயிர்களும் ஒன்றே); அத்வேஷ்டா சர்வ பூதானாம்”. (எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை) என்னும் முனிவன் வாக்கில் பணித்துள்ளபடி உயர்ந்தவர் யார்- கீழானவர் யார் என்னும் பாகுபாடு இல்லாமல் ஸமரஸதா எண்ணம் ஊரில் பரவ வேண்டும். ஒரு தீபத்திலிருந்து அனைத்து விளக்குகளும் ஏற்றப்படுவது போல.
இந்த உன்னதக் கருத்தை ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்வில் தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும், ஊருக்குள்ளும் (in day to day personal, family and societal life) கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் சமுதாயத்திலிருந்து சாதிப் பாகுபாடு, தீண்டாமை, பரஸ்பர அவநம்பிக்கை ஆகியவற்றை துடைத்தொழிக்கும். இது அகில பாரத பிரதிநிதி சபையின் கருத்து. அப்போதுதான், மீண்டும் பாரதம் எவராலும் வெல்ல முடியாத, ஒரு மேன்மையான நிலைக்கு வந்து, மீண்டும் ஒரு சக்தி மிகுந்த தேசமாக மாற முடியும்.
“தொன்றுதொட்டு நம் நாட்டில் ஆன்றோர் பலர், சமுதாய சீர்திருத்த மேதைகள் பலர் தேசம் லட்சிய நிலை அடைந்து வாழ ராஜபாட்டை காட்டியிருக்கிறார்கள். இடம், காலம், சூழல் இவற்றுக்குப் பொருந்தும் வகையில் தனிநபர், சமுதாய நடத்தை எப்படி மற்றம் பெற வேண்டும் என்று விவரித்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வும் வாக்கும் என்றென்றைக்கும் தேசத்திற்கு ஊக்கம் தரும்.
“எனவே சாதுக்களும் அறிஞர்களும் சமுதாய ஆர்வலர்களும் இவற்றையெல்லாம் சமுதாயத்திற்கு எடுத்துச் சோல்லி விளங்க வைக்குமாறு அகில பாரதிய பிரதிநிதி சபா வேண்டுகிறது. பொதுமக்களும் ஸ்வயம்சேவகர்களும் சமரஸதா என்னும் இந்த உணர்வை வாழ்வில் கடைபிடிக்குமாறு பிரதிநிதி சபா கேட்டுக் கொள்கிறது”.