கொலைகாரர்களின் கூடாரமா இனி கொடைக்கானல்?

மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா என்னும் 45 வயது பெண்மணிக்கும் தான்சானியாவில் பிறந்து பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று கோவாவில் வசிக்கும் டெஸ்மாண்ட் கொட்டிங்கா என்னும் 54 வயது வெளிநாட்டு பிரஜைக்கும் கடந்த வாரம் கொடைக்கானலில் திருமணம் நடைபெற்றது! இது ஒரு செய்தி! இதையெல்லாம் கட்டுரையாக எழுதுகிறீர்களே என்கிற கண்டிப்பு உங்கள் முகத்தில் தெரிவதை என்னால் பார்க்க முடிகிறது!

ஒரு திருமணம் ஒரு குடும்பத்தின் செய்தியாக மட்டுமே இருக்க முடியும்! அது எப்படி ஒரு நாட்டுக்கு செய்தியாக இருக்க முடியும்? என்ற வினாவும் எழுகிறது! 1990களில் ஜெயலலிதா சசிகலா நடத்திய வரலாறு காணாத ஆடம்பரத் திருமணம், சஹாரா நிறுவன தலைவர் சுபத்ரா ராய் நடத்திய 10 நாள் திருமணங்கள் தான் நாட்டிற்கு செய்தி! மிக எளிமையாக நடந்த இரோம் சர்மிளா திருமணமும் நாட்டிற்கு செய்திதான். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு!

இங்கு ஏதோ” நடக்கப்போகிறது? இது புயல் வருவதற்கான முஸ்தீபின் ஒரு பகுதி! பூகம்பத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இதையெல்லாம் இங்கு காணமுடிகிறது!

யார் இந்த இரோம் சர்மிளா? மணிப்பூரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழுக்களின் அட்டகாசம் இவற்றை ஒடுக்க ஆயுதப்படை சிறப்பு சட்டம் 1958ல் போடப்பட்டது! இது பயங்கரவாதிகளை, விசாரணையின்றி கைதுசெய்ய ராணுவத்திற்கு அனுமதி தந்தது. இதில் சில முறைகேடுகளும் நடந்தது! இதை எதிர்த்து பல குழுக்கள் போராட்டம் நடத்தின. அதில் ஒருவர்தான் இரோம் சர்மிளா. 2000ம் ஆண்டு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த 10 பேரை ராணுவம் சுட்டதாக சொல்லி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் துவங்கினார் சர்மிளா! இதற்கு நாடு முழுவதிலுமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சர்மிளாவுக்கு ஆதரவு பெருகியது! ஆனால் வந்த அத்தனை ஆதரவும், இடதுசாரிகள், நக்சலைட் தீவிரவாத குழுக்கள், பிரிவினைவாத, மதவாத அமைப்புகளிடமிருந்துதான்.

இதில் இந்தியாவிற்கு எதிரான சர்வதேச சதிச் செயல்கள் புரியும் வெளிநாட்டு குழுக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருந்த இந்திய விரோதிகளும் அடங்குவர்!

மணிப்பூர் முதல்வராக ஆசைப்பட்ட சர்மிளா, தேர்தலில் நின்று பெற்ற வாக்குகள் வெறும் 90 தான்! இனி தேர்தலிலேயே நிற்கமாட்டேன் என விரக்தியை வெளியிட்ட இவர் தமிழ்நாட்டில் சங்கமமாக காரணமென்ன?

இவரது திருமணத்திற்கு வரவேற்பளித்து, இடம் தந்து கையெழுத்துப் போட்டவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டால் இவரது கொடைக்கானல் வருகையின் நோக்கம் புரிந்து விடும்!

நக்சலைட் அமைப்பின் ஒரு பிரிவான CPI (ML) பிரிவை சேர்ந்த திவ்யா பாரதி என்பவர். இவர்தான் மணமகளின் தோழி என பெருமையோடு இரோம் சர்மிளா தெரிவித்தார். இத்தோழியோடு துணையாக வந்தவர்கள் மதுரை ஜில்லா CPI (ML) செயலாளர் மதிவாணன், PUCL என்னும் நக்சலைட் ஆதரவு குழும மாநில செயலாளர் மதுரைக் கல்லூரி பேராசிரியர் முரளி! இவர்களுக்கு சர்மிளாவிடம் என்ன வேலை?

இது மட்டுமல்ல சர்மிளா திருமணத்திற்கு சார்பதிவாளரிடம் சென்று பத்திரம் சமர்ப்பித்தவர் சாகுல் ஹமீது என்னும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பில் தீவிரமாக உள்ள வழக்கறிஞர்! சர்மிளா கொடைக்கானலில் வசிக்கக் கூடாது என்று மகேந்திரன் என்பவரும் இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது! அவர்கள் சொன்ன காரணம் சர்மிளாவின் வருகை மலைவாழ் மக்களிடையே பெரும் அமைதியின்மையை உருவாக்கும்! மதமாற்றத்தை ஊக்குவிக்கும்” என்பதாகும்.

இதில் மலைவாழ் மக்கள் சார்பாக சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து பழனி மலை புலையர்” போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகள் அறிக்கை கொடுத்துள்ளதுதான் நம் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது! கொடைக்கானல் பழங்குடியினருக்கும் சர்மிளாவுக்கும் என்ன தொடர்பு? எப்படி வந்தது? எப்போது வந்தது?

சர்மிளாவின் திருமணத்திற்கும், கொடைக்கானல் குடியேற்றத்திற்கும் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன! ஏற்கனவே சர்மிளாவோடு இருப்பவர்கள் இடதுசாரி நக்சல் இயக்கத்தை இது என்ன ‘காம்பினேஷன்’ என்பதை ஒரு சிறிய சரித்திர ‘பிளாஷ் பேக்’ பார்த்தால் புரிந்துவிடும்!

இஸ்லாமிய ஜிகாதி அமைப்பை சேர்ந்த மன்ஜீத் என்பவன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவில் 12 ஆண்டுகள் அதன் உளவுப்பிரிவு தலைவனாக செயல்பட்டவன். இவனது வேலை ஆர்.எஸ்.எஸ்ஸைச் தொடர்வதும், முழு தகவலை தெரிந்து கொண்டு தீர்த்துக் கட்டுவதும்தான்!

இவனது லிஸ்டில் கேரளாவை சேர்ந்த மூன்று பெரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஹிந்து ஆதரவு கருத்து தெரிவித்த இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் இஸ்லாத்துக்கு எதிராக கருத்து சொல்லும் சிலர் என இருந்தனர். இவன் கொடைக்கானலில் இருந்த யூதர்கள் சிலரை கொல்லத் திட்டமிட்டு புறப்பட்டதும் இடையில் கார் விபத்தில் சிக்கியதால் திட்டம் கைவிடப்பட்டதும் திடுக்கிடும் செய்தியாகும்! இவனை கைது செய்து விசாரணையில் கண்டுபிடித்த தேசிய புலனாய்வு அமைப்பே (NIA) இந்த உண்மையை வெளியிட்டது!

இப்படிப்பட்ட ‘அப்பாவிகள், ஆதரவாளர்கள் தான்’ இரோம் சர்மிளாவின் கொடைக்கானல் குடியேற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபகாலம் வரை கொடைக்கானல் மலைப் பகுதி வில்பட்டி மற்றும் தேனி நிலக்கோட்டை பகுதிகளில் நக்சலைட் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

2008-10ம் ஆண்டுகளில் 400 கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், இதன் மூளையாக செயல்பட்ட நவீன், இன்றைக்கு சிறையில் உள்ள கேரளாவை சேர்ந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டதும் கொடைக்கானல் தேசியத்தை கொலை செய்யும் ‘கொலை’க்கானலாக ஆக மாறிவந்ததற்கான சான்றாகும்!

ஒரு பக்கம் ஜிகாதி பயங்கரவாதம், மறுபக்கம் நக்சலைட் தீவிரவாதம், என்ற இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும் கொடைக்கானலுக்கு மீண்டும் ஒரு தேசவிரோத இறக்குமதி தான் இரோம் சர்மிளா!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் மூலமாக, மலைவாழ் மக்களிடையே, முன்னேற்றம், விழிப்புணர்வுகள் பணிகள் நடத்தப்பட்டாலும், இன்றும் இவர்களையே உள்ளே அனுமதிக்காத பல பகுதிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. என்பதும் இதற்கு காரணம், மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கமும் அவர்களோடு கூடி வேலை செய்யும் இஸ்லாமிய, நக்சலைட் அமைப்புகள்! கண்காணித்துவரும் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கும் தெரியும்!

வெறும் அறிக்கைகளை பெற்றுக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், இவைகளை தடுக்கின்ற உத்திகளை மாநில அரசும் செய்ய வேண்டும்!

ஏற்கனவே ஒருவார காலம் வந்து தங்கி கேரளாவின் அட்டப்பாடியை நோட்டம் விட்ட சர்மிளா, இப்போது கொடைக்கானல் தான் சரியான தேர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார்!

அடுக்கு மாடி கட்டிடம் தீவிபத்தில் நாசமான பின்பு ‘பாதுகாப்பு அம்சங்கள்’ எதுவும் இல்லை! கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது என தீர்ப்பு தருவதும், பள்ளி வாகனத்தை சரியாக பராமரிக்காததால் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் பலியான பின்பு, வாகனத்தில் உள்ள குறையை கண்டுபிடித்து சரிசெய்வதும் நமக்கு வழக்கமாகிவிட்டது!

கொடைக்கானலில் இரோம் சர்மிளா வரவினால் தேசவிரோத சக்திகள் குதூகலமடைந்திருக்கின்றன! இதனால் தமிழ்நாட்டின் அமைதி கெட்டு, உயிர்பலிகள் ஆனபிறகு அரசு முழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் நாம் அரசை எச்சரிக்கிறோம்!

வருமுன் காப்பதே நல்லது. கொலைகாரர்களின் கூடாரமாக கொடைக்கானலை மாற்றுவதற்கு முன், கொடையை காப்பாற்றுங்கள். தமிழகத்தை காப்பாற்றுங்கள்.

 

****************

கொடைக்கானலில் அக்டோபரானால் இஸ்ரேல் யூதர்கள் 500 பேர் வரை வந்து போவார்கள். அவர்களைத் தாக்க ஐ.எஸ் ஏவிய ஆள் தற்செயலாகப் பிடிபட்டான். இதையடுத்து NIA, மாவட்ட காவல் துறையை உஷார்படுத்தியுள்ளது.

****************

சர்மிளாவை திருமணம் செய்துகொண்ட டெஸ்மாண்ட், தான்சானியாவில் பிறந்து, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள கோவா வாசி என்பதைத் தவிர வேறு விவரம் தெரியவில்லை. மர்ம மனிதர்தான்.

****************

‘சர்மிளாவை காப்போம்’ இயக்கத்தின் நிறுவனர் ரவிநிதேஷ். இவர் காஷ்மீர் கல்லெறி வீரர்கள் பெல்லெட் தோட்டாக்களால் பாதிக்கபடுகிறார்களே என்று ‘ஆக்ஸ்போர்டு மனித உரிமைகள் மைய’ இணைய தளத்தில் பிலாக்கணம் வைத்து உலகின் கவனத்தை ஈர்க்க முயன்ற ‘படைப்பாளி’!

****************

சர்மிளாவின் திருமணத்திற்கு சார் பதிவாளரிடம் சென்று பத்திரம் சமர்ப்பித்தவர் சாகுல் ஹமீது என்ற ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பில் தீவிரமாக உள்ள வழக்கறிஞர்!

****************

நக்ஸலைட்டான திவ்யா பாரதி தான் (‘கக்கூஸ்’ குறும்பட ‘புகழ்’) சர்மிளாவின் மணப்பெண் தோஷி!

****************

மகேந்திரன் உள்ளிட்ட கொடைக்கானல் வாசிகள் சர்மிளாவை வெளியேற்றும்படி சார்பதிவாளரிடம் கொடுத்த மனு முற்றிலும் நியாயமானது என்பது மெல்லமெல்ல அம்பலமாகிவருகிறது.

****************

நான் அமைதியாக வழவே கொடைக்கானல் வந்தேன்” என்று சொல்லும் சர்மிளா, பழங்குடி மக்களுக்காக போராடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார்.