சமீப காலமாக முருகக்கடவுளை இறை நிலையிலிருந்து இறக்கி, முருகன் எம் முப்பாட்டன், தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்றெல்லாம் சைமனின் நாம் தமிழர் கூட்டம் கூறி வருவதை பார்க்கிறோம். இது ஏதோ அண்மைக்கால அரசியல் என்று பல ஹிந்துக்கள் ஒதுக்கி வருகிறோம். ஆனால் சற்றே பின்னோக்கி நடந்தால் நாம் காணும் சில சான்றுகள் இது கிறிஸ்தவ மிஷனரிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் வேலைகள் என்று காட்டுகின்றன.
இதுபோன்ற தவறான பரப்புரைகளை வெற்றுக் கதைகள் என்று புறந்தள்ளி வந்ததின் விளைவாக உண்மைக்கு புறம்பான வக்கிரங்கள் கிறிஸ்தவ மிஷனரிகளால் நிலைநிறுத்தப்பட்டு, இன்று அவற்றை சரிசெயப் போராடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் இப்போது நாம் விழித்துக்கொண்டு இந்த பிரச்சாரத்திற்கான சரியான எதிர்வினையை முன்னெடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளோம்.
பேட்ரிக் ஹாரிகன் என்ற கிறிஸ்தவ சிகாமணி www.muru-gan.org, www.pongi.org, www.katara-gama.org உட்பட 12 வலைத்தளங்களை நடத்தி வருகிறார். இவற்றில் ஆராச்சிக் கட்டுரைகள் என்ற பெயரில் ஹிந்துத்துவத்திற்கு எதிரான திரிபுவாதங்களும் ஆரிய-திராவிட பிரிவினைவாதங்களுமே நிறைந்துள்ளன. கமில் ஸ்வேலெபில் என்பவர் எழுதிய 1991ல் வெளியான “Tamil Traditions on Subrahmanya Murugan” என்ற புத்தகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழ் கலாச்சாரத்தை ஆரிய கலாச்சாரமாக கபளீகரம் செது விட்டதாக குற்றம் சாட்டுவதன் மூலம் ஆரிய திராவிட பிரிவினைக்கு சாமரம் வீசுகிறார். ஜான் சாமுவேல் என்பவர், “Institute of Asian studies” என்ற நிறுவனம் மூலம் முருகன், முருக வழிபாடு குறித்த மாநாடுகள் நடத்தி, முருகனும் ஹிந்துக் கடவுள் அல்ல, திராவிடத் தமிழ்க் கடவுள் என்று நிறுவ முயற்சி செது வந்திருக்கிறார். மு.தெவநாயகம் என்ற மிஷனரி மனிதர் எழுதிய ‘திருவள்ளுவர் கிறிஸ்தவரா‘ என்ற நூல் மூலமாக, நம் தெவப்புலவர் வள்ளுவரை கிறிஸ்தவத்திற்குள் ஈர்த்து தமிழ்/திராவிட கலாச்சாரம் கிறிஸ்தவத்தில் வேர்கொண்டது என்ற பொயை பரப்புரை நடந்து வந்தது நாம் அறிந்ததே.
நம் பார்வையில் இது நம் சமுதாய கட்டமைப்பை உடைக்கும் ஒரு முயற்சி என்றே கூறலாம். கடவுள் மனிதனாக அவதரித்து மக்களை நல்வழிப்படுத்தியதும் மனிதன் கடவுள் நிலைக்கு உயர்ந்ததும் இந்த நாட்டில்தான். அதனால் நமது நம்பிக்கையை சிதைக்க, அதே வழியில் கடவுளை சாதாரண மனிதனாக்கி கடவுளின் தன்மையை சிதைக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம். தேசியமும் தெவீகமும் இரு கண்கள் என்று அறைகூவல் விடுத்தார் பொன். முத்துராமலிங்கத் தேவர். பல்வேறு பெயர்களுடன் விளங்கும் முருகனுக்கு பல விழாக்களை மற்ற சமுதாய மக்களுடன் இணைந்து கொண்டாடி வரும் தமிழ் ஹிந்துக்களின் சமுதாயக் கட்டு உடைக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் ஹிந்து தர்மம் நிலைப்பது பெரும் கேள்விக்குறி ஆகிவிடும். அந்த சமூகங்களில் நிலவும் விவசாய, வேலைவாப்பு பிரச்சினைகளைக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தி ஹிந்து சமுதாயத்திடமிருந்து பிரித்துவிட கிறிஸ்தவ மிஷனரிகள் திராவிட கட்சிகள் மூலமாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சீரிய வலுவான ஹிந்து தலைமையே சமுதாயத்தை சரியான திசையில் வழிநடத்தி இந்த சதியை முறியடிக்கக் கூடியது. அதை முன்னெடுக்க வேண்டியது ஹிந்து அமைப்புகளின் தலையாய கடமை.
Very true… I love reading your book in library.
Awareness should be spread among people in villages who are the main target for missionaries.