கடவுளுக்குக் கற்பூரம் ஏற்றுவது ஏன்?
– விருகை கந்தசாமி, சென்னை
கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது. அதுபோல ஆன்மா இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற குறிப்பை உணர்த்துகிறது.
ஹிந்து மதத்தை துவக்கியவர் யார்?
– செ. சுரேஷ்குமார், திருவாரூர்
கிறிஸ்தவத்தை இயேசு துவக்கியதுபோல, இஸ்லாமை நபிநாயகம் துவக்கியது போல ஹிந்து மதத்தை எந்த ஒரு தனிநபரும் துவக்கவில்லை. இது இறைவனால் துவங்கப்பட்டது.
– கு. பாஸ்கர், சதுரங்கப்பட்டினம்
நேரு மறைந்தவுடன் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கியதில் முக்கிய பங்கு காமராஜருக்கு உண்டு. இது மிகப்பெரிய சாதனைதான்.
* ஒருவன் குடிகாரன். ஆனால் பிறருக்கு உதவுபவன். மற்றொருவனுக்கு எந்த கெட்ட பழக்கமுமில்லை. ஆனால் யாருக்கும் உதவமாட்டான். இருவரின் யார் மேலானவர்கள்?
– விஜயா சந்தானம், மேலூர்
குடிகாரனாக இருந்தால்கூட பிறருக்கு உதவுவதை பாராட்டத்தான் வேண்டும். ஆனாலும் கூட குடியால் அவன் மதிப்பிழந்து விடுகிறான். வெறுமனே நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு உதவாதவன் வெறும் நடைபிணமே. இந்த இருவரை ஒப்பிடுவதே தேவையற்றது.
* ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு என்றதும் கருணாநிதி துடிப்பது ஏன்?
– மருத்துவம் திருமலைநம்பி, விழுப்புரம்
ஜெகத்ரட்சகன் என்றால் சும்மாவா? திமுக தலைமையின் கஜானாவாச்சே… 40 கிலோ தங்கம், 18 கோடி ரூபாய் ரொக்கம், 450 கோடிக்கு கணக்கு – சொத்தோ 1000 கோடி – இந்த விவகாரத்தில் சிக்கிய நாலு பேரில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்று கூறப்படுகிறது.
சுவாதி கொலையாளி பற்றி திருமாவளவன் தினசரி புதுப்புது தகவல்களை தெரிவித்து வருகிறாரே?
– பார்வதி சந்திரசேகர், காஞ்சிபுரம்
சுவாதி முஸ்லிமாக மதம் மாற இருந்தார். ரம்ஜான் நோன்பு இருந்தார் என்றெல்லாம் திருமாவளவன் சொல்லி வருவதால் அவருக்கும் நிறைய விஷயங்கள் தெரிந்தே இருக்கிறது. ஹெச். ராஜா சொன்னது போல திருமாவளவனையும் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவருமோ?
குளச்சல் துறைமுகத்தை சிலர் எதிர்ப்பது ஏன்?
– க. சாமிக்கண்ணு, மயிலாடுதுறை
குமரியில் விவேகானந்தா நினைவுச் சின்னத்தை எதிர்த்தவர்கள், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை எதிர்த்தவர்கள் பின்னணியில் கிறிஸ்தவ மிஷனரிகள் இருந்தார்கள். இதிலும் அவர்களின் சதி இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.