ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செது கொண்டதன் காரணமாக எழுப்பப்பட்ட சர்ச்சை இது, ஊடகங்களும் அரசியல் தலைவர்களும், அவர் ஒரு தலித் என்று பிரகடனப்படுத்தி அவதூறு பிரச்சாரம் செது வந்த நிலையில் உண்மையில் அவர் ‘வதரா’ என்று சோல்லப்படும் ‘தச்சர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது அவரது சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது.
ரோஹித்தின் தந்தை மணிக்குமார், மாமா வெங்கடேஸ்வரலு, பாட்டி ஆகியோர் காவல் துணை ஆவாளர் ரமண குமாரிடம் தாங்கள் தலித்கள் அல்ல என்றும் வதரா எனப்படும் தச்சர் சமூகமே என்றும் 2005ல் ரோஹித்தும் அவனது அம்மாவும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார்கள் என்றும் சாட்சி கூறியுள்ளனர். அதுவரை வெமுலா சக்ரவர்த்தி என்ற பெயரில் இருந்த அவன் அதன் பின் ரோஹித் வெமுலாவாக வலம் வரத் துவங்கினான், ஏன் அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறினார்கள்; இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இன்றி, மெரிட் காரணமாகவே பல்கலை கழகத்தில் இடம்பெற்ற ரோஹித், ஏன் தலித் சான்றிதழ் பெற்றான் என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் சாட்சி கூறினர். தெலுங்கு செதி சானலான கூங 9 ரோஹித் தந்தையின் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒலி-ஒளி பரப்பி உண்மையை அம்பலப்படுத்தி வந்தாலும், ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் சோன்ன பொயையே அசராமல் திருப்பித் திருப்பிச் சோல்லி வந்தனர். தாத்ரியில் படுகொலைக்கு உள்ளான ஒருவரை பார்க்கச் சென்றது போல இங்கும் அரசியல்வாதிகள் படையெடுப்பு நிகழ்த்தினர். இவர்களுக்கு மைனாரிட்டி-தலித் இறப்பு டூரிஸம் மனதுக்கு ஆனந்தம் தருவதாக இருக்குமோ என்னவோ..! பிறகு வேறு எப்படித்தான் அரசியல் செவது?
ரோஹித்தின் தற்கொலை குறிப்பு தெளிவான மனநிலையில், உணர்வுகளை மறைக்காமல் எழுதப்ப
ட்டதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தை நாம் படிக்கும் போது, திசைமாறிய இலக்கே அவரின் முடிவுக்குக் காரணமோ, ஆழ்ந்த நுண்ணறிவும் செயலாற்றலும் கொண்ட அந்த மாணவர் தான் சில அரசியல்வாதிகளால் கருவியாக்கப்பட்டதை உணர்ந்து கொண்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
உண்மையில் என்னதான் நடந்தது? ஏன் இந்தக் களேபரம்?
பல்கலைக் கழக வளாகத்தில் மும்பை குண்டுவெடிப்பிற்குக் காரணமான யாகூப்மேமனை தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து கடந்த ஆகஸ்டு 3 அன்று அம்பேத்கர் மாணவர் இயக்கம் போராட்டம் நடத்தியது. போராட்டம் தூக்குத் தண்டனைக்கு எதிரானது என்று கூறப்பட்டாலும், அதில் பிரிவினை கருத்துக்களே அதிகம் உதிர்க்கப்பட்டன. ஒரு யாகூப் தூக்கிலிடப்படலாம், ஆனால் இங்கிருந்து 1,000 யாகூப்கள் உருவாவார்கள்” என்ற பேச்சு ஒரு உதாரணம். போராட்டத்திற்கு சாதிய வடிவமும் கொடுக்கப்படுகிறது. எனவே, இப்போராட்டத்திற்கு ஏபிவிபி இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஏபிவிபி மாணவர் இயக்கத்தலைவர் சுஷில்குமாரை அ.மா.இ. மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒரு இரவில் மிரட்டி, அச்சுறுத்தி, அவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது தவறு என்று மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதோடு, அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு வந்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அம்மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் (இன்னமும் அம்மாணவர் பூரண குணம் பெறவில்லை), அவரின் தாயார் காவல் நிலையம் செல்கிறார். வழக்கு நீதிமன்றம் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மீது பல்கலைக்கழகம் துறைவாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிடுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பந்தமான தகவல் அப்பகுதியைச் சார்ந்த எம்.பி.யும் அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவிற்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அவர், கல்லூரி வளாகத்தில் சாதிய மோதல்கள் ஏற்படுவதாகவும் இது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும் மாணவர்களின் மோதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அமைதிக்கு வழி செயுங்கள் என்றும் துறைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதுகிறார்.
இக்கடிதத்தின் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானியும், துணைவேந்தருக்கு பல்கலைக் கழக வளாகத்தில் கலகம் வேண்டாம், உரிய நடவடிக்கை மூலம் அமைதியை நிலை நாட்டுங்கள் என கடிதம் மூலம் கேட்டுக் கொள்கிறார், நீதிமன்றமும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சோல்ல, மேம்பாட்டு அமைச்சரும் அதையே சோல்ல, துணைவேந்தர் கலகத்திற்குக் காரணமான 5 மாணவர்களை இடை நீக்கம் செகிறார். அவர்களில் மாணவர் ரோஹித்தும் ஒருவர். மாணவன் ரோஹித்தின் நடத்தை முரட்டுத்தனமாக இருந்துள்ளதை யாராலும் மறுக்க இயலவில்லை. காவி நிறமே இந்த வளாகத்தில் இருக்கக் கூடாது, ஆம் அதை எங்கு கண்டாலும் நான் கிழித்து எறிவேன் என்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அவர். போராட்டம் மிகத் தெளிவாகத் தூண்டிவிடப்பட்டு, அந்த தூண்டிலில் ரோஹித் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
எனினும், பின்னர் உரிய விசாரணைக்குப் பிறகு அவர் மீதான தண்டனை குறைக்கப்பெற்று, இடைநீக்கம் விலக்கப்பட்டு, விடுதியில் இருந்து மட்டுமே தள்ளிவைக்கப்படுகிறார். அதே வேளையில் ஆராச்சி மாணவருக்கான மாதாந்திர ஊக்கத்தொகை ரூ. 25,000 நிறுத்தப்படுகிறது. இந்நிலை நான்குமாதமாகத் தொடர்கிறது. அவர் வகுப்புகளுக்கு வந்து செல்லலாமே தவிர வேறு சலுகைகள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மாணவர்களோடு தண்ணி அடிப்பதும், தகாத காரணங்களுக்காக பணத்தை செலவு செவதும் இவரது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விடுதியிலும் மீண்டும் தங்களைச் சேர்க்க வேண்டும் என்று கடந்த 15 நாட்களாக நீக்கம் செயப்பட்ட மாணவர்கள் போராடி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அமைதி காத்துவந்த ரோஹித் திடீரென்று தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செது கொள்கிறார்.
உண்மை என்னவென்றால் மாணவன் ரோஹித் துவக்க காலத்தில் மோடியின் ஒரு விசிறியாகத் தான் இருந்துள்ளார். மோடியின் சோலார் எனர்ஜியைப் பாராட்டி முகநூலில் பதிவு செதுள்ளார். மற்றொரு பதிவில், 2002 குஜராத் படுகொலையைப் பற்றி மட்டுமே பேசும் ஊடகங்கள் அஸாமில் மண்ணின் மைந்தர்கள் கொல்லப்படுவதை ஏன் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். இவற்றிற்கான அவரது முகநூல் பதிவு இன்னமும் உள்ளது.
ஆர்வக் கோளாறால் அண்ணா ஹசாரே ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் வலைதளம் மூலம் பங்காற்றத் துவங்கிய பின்பு தான், ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்கத் துவங்கிய பிறகுதான் இவனின் மனத்தில் விஷம் விதைக்கப்பட்டுள்ளது. அவனது மூர்க்கத்தனமே அவனது படிப்பிற்கு ஆபத்தாக மாறியதால், மதம் மாறியதால் குடும்பத்தில் பிறருடன் வாழாமல் போனதால் அவன் இந்த சோக முடிவை எடுக்கக் காரணமாக இருந்தது பிந்தைய வாழ்க்கை முறைதான். இந்த வேதனையைத் தான் அவனது கடிதம் உணர்த்துகிறது.
அம்பேத்கர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மாணவர் இயக்கம் ஏன் எப்போதுமே தேச விரோத ஆர்ப்பாட்டங்களே நடத்துகிறது?
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்ரமணியசாமி, ரோஹித் மதம் மாறியது பற்றியும் தலித் என்று தான் சாராத சாதியில் அச்சாதியினர் போல முனைப்புகாட்டியது பற்றியும் விசாரணை தேவை என்கிறார்.
உடையும் இந்தியா” புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டன், ஆந்திர மாநிலம் எங்கும் பிரிவினை விதைகளை விதைக்கும் சக்திகளும் அவற்றோடு இணைந்த அந்நிய சக்திகளுமே இதற்குக் காரணம் என்கிறார். கிறிஸ்தவ மிஷினரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செதுவரும் பேராசிரியர் கன்ச்சா இலயா, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களிடையே பிரிவினையை விதைத்து சுட்டிக்காட்டுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.
தலித்களை, சிறுபான்மையினரை, மாணவர்களை இந்த பாஜக அரசுக்கு எதிராகத் திருப்பும் வேலை படுபயங்கரமாக நடந்து வருகிறது. மாணவர்கள் இதில் பலியாக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையான செதி.
கல்லூரி வளாகங்கள் தேசவிரோதக் கூடாரங்கள் ஆவது தடுக்கப்பட்டே ஆக வேண்டும். டூ
ஹைதராபாத்: பிரதமர் கருத்து
லக்னௌவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 22 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எனது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ரோஹித், தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக செதிகள் வெளியாகியுள்ளன. பாரதத் தா தனது மகனை இழந்து விட்டார். அவரது தற்கொலைக்கு காரணங்கள் இருக்கலாம்; அதைச் சுற்றி, அரசியல் இருக்கலாம். ஆனால் இதில், ஒரு தா தனது மகனை இழந்து விட்டார் என்பதே உண்மை. அந்த வேதனையை நானும் உணர்கிறேன்.”