கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் நடத்தி வரும் அராஜகங்களைப் பற்றி தமிழக, கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ஸ்தாணுமாலயனுடன் விஜயபாரதம் குரு சிவகுமார் நேர்காணல்
கேரளா கடவுளின் பூமி என்கிறார்கள். ஆனால் இன்று சாத்தானின் ரத்தபூமி ஆகிவிட்டதே?
பாரததேசம் முழுவதும் புண்ணிய பூமி . ஆதிசங்கரர் ‘பாரதநாட்டில் பிறப்பது என்பது கிடைத்தற்கரிய பேறு’ – ‘துர்லபம் பாரதே ஜென்மம்’ என்று கூறியுள்ளார். ‘கடவுளின் கொடை’ என்றழைக்கப்படும் கேரளாவிற்கு சுவாமி விவேகானந்தர் 1897ல் விஜயம் செதபோது அங்கிருந்த தீண்டாமையை கண்டு ‘கேரளம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி’ என்று வருத்தத்துடன் கூறினார்.
நவம்பர் 12, 1936ல் ‘எல்லா ஜாதியினரும் கோயிலுக்குள் செல்லலாம்’ என்ற திருவிதாங்கூர் மஹாராஜா அறிவித்தபோது மகாத்மா காந்திஜி ‘ இது ஒரு தீர்த்தாலயம்’ என்று கூறி அகமகிழ்ந்தார்.
அனைத்து வழிபாட்டு முறைகளும் உடைய இந்தப் பகுதி பரசுராமரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே இந்த மலைநாடு ‘கடவுளின் சோந்த நாடு’ (GODS OWN COUNTRY) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இன்று பல்வேறு சிந்தனை உடையவர்கள் தங்களின் கருத்துகளை பரப்பவும் பணிகளை மேற்கொள்ளவும் இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. 1921ம் ஆண்டு முஸ்லிம்களால் ‘மாப்ளா கலவரம்’ ஏற்பட்டதிலிருந்து ஹிந்து சமுதாயம் பல்வேறு துயரங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது.
கேரளாவில் 1957 முதல் கம்யூனிஸ்ட் மந்திரிசபை ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தலைமையில் ஏற்பட்டது முதல் ஹிந்து சமுதாயத்தினருக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது.
மாற்றுக் கருத்து கொண்டவர்களை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிப்பது கம்யூனிஸ்ட்களின் பழக்கம். அவர்களால்தான் கேரளா இன்று ரத்தபூமியாகிவிட்டது. பல குடும்பங்களில் வாரிசுகளே இல்லாமல் செதுள்ளனர்.
கம்யூனிஸ்ட்களின் இத்தகைய கொலை அரசியல் எப்போது ஆரம்பித்தது?
ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வல்கர் 1946ல் திருவனந்தபுரம் வந்தபோது கம்யூனிஸ்ட்டுகள் கூட்டத்தில் புகுந்து ஆக்கிரமிப்பு செதார்கள். அன்றுமுதல் கம்யூனிஸ்ட்டுகளின் அக்கிரமம் துவங்கியது. கண்ணூர் மாவட்டத்தில்தான் முதல் கொலை நடைபெற்றது. தையல் கடை நடத்திவந்த ஏழை தொழிலாளியான வாடிக்கல் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வந்தவர் என்பதால் 1969 ஏப்ரல் 28 அன்று அவரின் தையல் கடையிலேயே படுகொலை செதார்கள் மனிதாபிமானற்ற மார்க்சீய கம்யூனிஸ்டுகள்.
இப்படுகொலையில் முதல் குற்றவாளியாக இருந்தவர் இன்றைய கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன். இரண்டாவது குற்றவாளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் தாமாமன். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக காவல்துறையினரும் செயல்பட்டார்கள்.
கேரள கம்யூனிஸ்டுகள் எங்கெங்கெல்லாம் அராஜகம் செகிறார்கள்?
உலக கம்யூனிஸ்ட்கள் தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துகொண்டவர்களை அழித்தொழிப்பதை கொள்கையாகக் கொண்டவர்கள். எங்கெங்கெல்லாம் இவர்களது ஆதிக்கம் மிகுந்து உள்ளதோ அங்கெல்லாம் கொடும்செயல்களை செவார்கள். அந்த இடங்களை கட்சியின் கிராமம் (Party Village) என்று அழைப்பார்கள். அந்த பகுதிகளில் வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை பணியாற்ற விட மாட்டார்கள்.
அவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறார்களோ அப்போது எல்லாம் மாற்று கருத்துடைய ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை அழித்தொழிப்பதற்காக எல்லாவித முறைகளையும் அவர்கள் கையாளுவார்கள்.
குறிப்பாக, 2016ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சோந்த ஊரான பிணராயியில் கொலை அரசியல் செய துவங்கியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் தொகுதி கஞ்சிக்கோடு. அங்கு விமலா என்ற பெண்மணி, கணவரின் சகோதரரை தீயிட்டு கொளுத்தி கொலை செதார்கள். அவரது கணவன் கண்ணன் இன்றுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அந்தக் குடும்பமே கம்யூனிஸ்ட்களின் கொலை பாதக செயலுக்கு உள்ளாகி இன்று தத்தளித்து வருகிறது. மேலும் திருவனந்தபுரத்தில் விஷ்ணு என்ற மாணவனும் கொலை செயப்பட்டார். அங்கு பெண் கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்டார். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சூர், பாலக்காடு என கேரளா முழுவதும் இவர்களது அராஜக செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
பாரதிய மஸ்தூர் சங்க தொழிலாளி ராமச்சந்திரன் கொலை செயப்பட்டார். இதுபோன்று கண்ணூர் மாவட்டத்தில் இன்றுவரை ஹிந்து இயக்க தொண்டர்கள் 82 பேர், கம்யூனிஸ்ட்களால் படுகொலை செயப்பட்டார்கள்.
இந்த ஆட்சி வந்த பிறகு கொலைவெறி தாக்குதல் தவிர வேறு என்னவெல்லாம் செது வருகிறார்கள்?
2016 மே மாத தேர்தல் வந்த போதும் பிணராயி கிராமத்தில் முதலமைச்சரின் உறவினர்களில் பாஜக விற்கு ஆதரவாக வாக்களித்த குடும்பங்களின் வீடுகள், கடைகள், விளைநிலங்கள், வண்டி வாகனங்கள், ஏன் அவர்கள் வளர்த்த பசு, ஆடு, கோழி உட்பட அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. கைக்குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. வீடுகள் மட்டுமல்லாமல், வீட்டு கிணறுகளில் முடிதிருத்தும் கடையின் கழிவுகளை, மனித, மிருக கழிவுகளை போட்டு அட்டூழியம் செதார்கள்.
காஞ்சங்காடு பகுதியில் பெண்களே நடத்தும் தையல் கடை, துணிகடைகள் அழிக்கப்பட்டன. கேரளா முழுவதும் இதே போன்ற சம்பவங்கள்! கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக வாக்களித்தவரின் வாழ்வாதாரத்தை அழித்தார்கள். வாக்குச்சாவடி முகவர்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை தவிர வேறு பல அமைப்பினரையும் தாக்குகிறார்கள் என்று கூறப்படுகிறதே…
கேரளாவில் காங்கிரஸ்காரர்கள் 50 பேரை சி.பி.எம் இதுவரை கொலை செதுள்ளது. சி.பி.எம்மிலிருந்து சி.பி.ஐக்கு மாறிய பி. தாமோதரன் என்ற கம்யூனிஸ்ட் தொண்டரையே இவர்கள் கொலை செதார்கள். கேரளத்தில் கம்யூனிஸ்ட் துவங்கிய கிராமம் பிணராயி பாறப்புறத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கிய முதல் நபரான கோபாலன் மாஸ்டரின் மகன் ஷாஜி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய காரணத்தால் அவரை கொலை செய முயற்சித்தார்கள். அடித்து உதைத்து துவைத்ததில் அவர் இன்று, வாழ்க்கை நடத்த இயலாமல் நடைபிணமாக இருக்கிறார்.
அமைச்சராக இருந்த எம்.வி. ராகவன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி (CMP) என்ற கட்சியை துவக்கி மாநில காங்கிரஸ் கட்சியுடன் தோழமை கொண்ட காரணத்தால் அவரை கொலை செய முயற்சித்தார்கள். அப்போது ராகவனை காப்பாற்றுவதற்காக கொலைகார கும்பலை நோக்கி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் கம்யூனிஸ்டுகள் 5 பேர் பலியானார்கள்.
2012 மே 4 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு (SFI), இளைஞர் அமைப்பு (DYFI) களில் மாநில பொறுப்பாளர்களாக செயல்பட்ட டி.பி சந்திரசேகரன் அவரது மனைவி ரமா இருவரும், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய கட்சி துவக்க முயற்சி செதார்கள். 51 வெட்டுகளுடன் சந்திரசேகர் கொலை செயப்பட்டார்.
முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறார்களா?
முஸ்லிம் லீக்கை சேர்ந்த ஷிபில், சுகூர் ஆகியோரை படுகொலை செதவர்கள் கம்யூனிஸ்ட்கள். கண்ணூர் மாவட்டத்தில் கட்சிப் பிரமுகர் ஜயராஜன் முஸ்லிம்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தினார். பல இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பின்னர் முஸ்லிம்களுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். கேரளாவில் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கினார்கள், எம்.எல்.ஏ ஆக்கினார்கள். அமைச்சராக்கி பதவி கொடுத்தார்கள். மேலும் முஸ்லிம்கள் மேல் உள்ள வழக்குகளை திரும்ப பெற்று அவர்களுக்கு சாதகமாக வழக்கை முடித்து வைத்தார்கள்.
கருத்து சுதந்திரம், ஜனநாயகம், மனிதநேயம் பேசும் கம்யூனிஸ்ட்கள் அரசியல் சார்பு அல்லாத வேறு யாரையெல்லாம் தாக்குகிறார்கள்?
கம்யூனிஸ்ட கருத்துகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை கொண்டவர்கள் யாராயினும் பல்வேறு வகைகளில் அவர்களை துன்புறுத்துவது கம்யூனிஸ்ட்களின் கொள்கை.
உதாரணம்: முன்னாள் தூதரக அதிகாரி டி.பி ஸ்ரீநிவாசனை ஒரு பொது நிகழ்ச்சியிலேயே தாக்கினார்கள். மாற்றுக் கருத்துடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கருத்து கூறுபவர்கள் யாராயினும் அவர்களை மிரட்டி அடித்து அவமானப்படுத்துவது கம்யூனிஸ்ட்களின் கலாச்சாரம்.
இவ்வளவு கொலை நடந்த பிறகும் இருதரப்பினரையும் அழைத்து அமைதி காக்கும் முயற்சி நடைபெற்றதுண்டா?
1980களில் இதே மாதிரியாக கொலை அரசியல் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்பட்டபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணயரின் தலைமையில் சமாதான கூட்டம் நடைப்பெற்றது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ராமமூர்த்தியும் இன்னும் சிலரும், ஆர்.எஸ்.எஸ் சார்பில் தத்தோபந்த் தெங்கடி, பி. பரமேஸ்வரன் ஆகியோரும் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்கினார்கள். 2016ல் சர்சங்கசாலக் (ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர்) மோகன் பாகவத் எர்ணாகுளம் முக்கியஸ்தர் முன்பேசும்போது நாம் தயார் என்று கூறினர். ஆனால் சிபிஎம் அன்று தயாரில்லை.
இப்போதும் 2017 பிப்ரவரி 13 அன்று முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் கண்ணூரில் சமாதான சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது. அன்று இரவே கூத்துபறம்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதற்கு உடன்படுவதில்லை. குறிப்பாக கண்ணூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜன் சமாதானத்தை ஏற்றுகொள்ளத் தயாராக இல்லை. அதேசமயம், ஹிந்து இயக்கங்கள் அமைதிகாக்க முயற்சித்து வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கம்யூனிஸ்ட் தாக்கப்படுவதாக சோல்லபடுவது உண்மையா?
ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகின்றபோது தற்காப்புகாக அவர்கள் ஒன்றுகூடி எதிர்த்து நிற்கிறார்கள். சில இடங்களில் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக சில பாதிப்புகள் வந்திருக்கலாம். பெரும்பான்மையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வசிக்கின்ற பகுதிகளில் கம்யூனிஸ்ட்கள் தாக்குவதில்லையே! தற்காத்துக் கொள்வது தனிமனிதனின் உரிமை என்கிறது நம் அரசியல் சாசன சட்டம்.
பல படுகொலைகளின் பின்னணி விசாரித்த காவல்துறை, கம்யூனிஸ்ட் தலைவர்களின் தூண்டுதலால் தான் திட்டமிட்டு கொலைகள் நடந்துள்ளன என்று கண்டறிந்துள்ளது. உதாரணம், காராயி சந்திரசேகரன் கொலை முயற்சிக்கு, திட்டமிட்டுக் கொடுத்து தூண்டுதல் செதது கண்ணூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜன் தான் என மத்திய புலனாவு துறை (CBI)யும் கேரள மாநில காவல்துறை உறுதி செதுள்ளன. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கம்யூனிஸ்ட்கள் கொலைவெறித் தாக்குதல்கள் செவது கேரளாவில் மட்டும்தானா?
கம்யூனிஸ்ட்கள் எண்ணிக்கையில் பலமாக இருக்கின்ற பகுதிகளில்தான் மாற்று கருத்துடையவர்களை சகிப்புதன்மையற்று இவர்கள் படுகொலை செகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, திருவட்டாறு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கம்யூனிஸ்ட்கள் வென்றபோது அந்த பகுதிகளில் உள்ள பிற கட்சியினரை தாக்கினர். பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு கம்யூனிஸ்ட்கள் மரணமடைந்துவிட்டார்கள்.
கோயம்புத்தூரில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஆந்திராவில் 20 ஆண்டுகளாக அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளில் படுபாதக செயல்களை செதுவருகிறார்கள். தற்போது ஏ.பி.வி.பி மாணவர் ஒருவரை கொலை செய முயற்சித்தார்கள். முன்பு, தற்போதைய தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவை தாக்கி, கொலை செய கம்யூனிஸ்டுகள் முயற்சி செதனர்.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மாற்றுக் கட்சியினரை கம்யூனிஸ்ட்கள் கொலை செவது வழக்கமாக நடைபெறும் ஒன்று.
இதற்கு தீர்வுதான் என்ன?
முதல் நாடாளுமன்றத்திலேயே பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இன்று ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உலகம் முழுவதும் கம்யூனிஸ சித்தாந்தம் தோல்வியடைந்து விட்டநிலையில் இப்போது நம் நாட்டில் இவர்கள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து தடுமாறிகொண்டிருக்கிறார்கள். மக்களால் புறம் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிற கட்சியினருடன் கூட்டணி அமைத்து அவர்களின் ஆதரவை பெற்றே இவர்கள் தேர்தல்களில் நிற்கிறார்கள். மக்களிடம் மதிப்பிழந்த இவர்கள் சொந்தக் காலில் நிற்க இயலாதவர்கள். ஜனநாயகத்தில் நம்பிக்கையற்று ‘புரட்சி ஒன்றே வழி’ என்று முழங்கி வந்தவர்கள் குரல் ஒடுங்கிப் போயுள்ளனர்.
ஜனநாயக முறைப்படி மாற்று கொள்கையாளர்களுடன் தங்கள் கொள்கையை எடுத்துரைக்க இயலாமல் திராணியற்று வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
முன்னேறிய மனிதகுல சமுதாயத்தில், பல கொள்கைகள், பல சித்தாத்தங்கள், உள்ள பாரத தேசத்தில் ஆதிசங்கரர் முதல் அனைத்து வாழ்வியல் வழிக்காட்டிகளுமே கொள்கைகளை எடுத்துரைக்க வாதம் செதுதான் வெற்றி பெற்றார்களே தவிர, கம்யூனிஸ்ட்கள் போல வன்முறையை கையாண்டதில்லை. புத்தியினால் கொள்கைகளை சந்திக்க தயங்குகிற கம்யூனிஸ்டுகள் கத்தியை எடுத்து மாற்றுக் கருத்தியலாளர்களை, கொள்கையினரை அழிக்கிறார்கள்.நாகரீக சமுதாயத்திற்கு இது நல்லதல்ல. ஜனநாயக நாட்டில் எல்லாவகையான சிந்தனைகளுக்கும் கட்சியினருக்கும் அரசியல் சாசன சட்டத்தின்படி செயல்பட உரிமை உண்டு. இந்த மாதிரி அராஜக கம்யூனிஸ்டுகளின் படுபாதக செயல்களை அறிஞர்களும் பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் தோலுரித்துக் காட்ட வேண்டும். பயங்கரவாத தன்மையுடைய ஜனநாயகம் மனித உரிமை என பேசும் கம்யூனிஸ்ட்டுகளின் போலித்தனங்களை வெளிக்கொணர வேண்டும். இவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்.
அரசு எந்திரம் அரசியல்வாதிகளின் கைப்பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அமைப்புகள் அரசியல் கட்சிகள், பொதுநல ஆர்வலர்கள், சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து கொலைவெறி பிடித்த கம்யூனிஸ்டுகளை எதிர்க்கத் துணிய வேண்டும். மக்கள் நலன் காக்க அனைவரும் ஒன்றிணைந்து இது போல் உள்ள விஷமிகளை தடுக்கவேண்டும். உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதும் அவசியம்.