நாளுக்கு நாள் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமியர்கள்” தாக்கப்படுவதைக் கண்டித்து ஊடகங்கள் செதி மழை பொழிந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். ஆனால் இதில் பாதிக்கு மேற்பட்ட சம்பவங்கள் பசு வதை சம்பந்தபட்டதல்ல, தாக்கியவர்கள் ஆர்.எஸ்.எஸ் அல்லது பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஏன் தாக்கியவர்கள் ஹிந்துக்கள் கூட அல்ல, சம்பவமும் பசு சம்பந்தப்பட்டதல்ல என பின்னர் உறுதி செயப்பட்ட பின் இச்சம்பவங்கள் பற்றிய செதிகள் சுத்தமாக நிறுத்தப்பட்டிருக்குமே தவிர உண்மைச் செதிகள் வெளிவந்திருக்காது. இதுதான் இன்றைய ஊடக தர்மம்.
ஸ்ரீ நகரில் டி.எஸ்.பி முகமது அயூப் பண்டிட்டும் ஒரு ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். இருவருமே தேசத்துக்கு ஆதரவாக செயல்பட்ட இஸ்லாமியர்கள் என்பதாலேயே இஸ்லாமிய பயங்கரவாதிகள் இவர்களை தேர்வு செது கொன்றனர், தேசத்திற்கு ஆதரவான இஸ்லாமியர் என்றால் இதுதான் உங்கள் கதி என்பதே அந்தக் கொலைகளின் மூலம் விடப்பட்ட செதி. ஊடகங்கள் இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து சிறு முனகல் கூட செயவில்லை.
பரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றி வந்தமைக்காகவே பெங்களூரில் இஸ்லாமியர் ஒருவர் அதே சமூகத்தினரால் கொல்லப்பட்டார். புனே நகரில் ஒரு தலித் சிறுவன் சாதிய காரனங்களால் இஸ்லாமியர் ஒருவரால் கொல்லப்பட்டான். ஊடகங்கள் கப்சிப்.
கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செயும் திரிபுரா மாநிலத்தில் 25 குடும்பத்தைச் சேர்ந்த 100 பேர்கள் தொழுகைக்கு தங்கள் மசூதியில் நுழைவது அந்தப்பகுதி இமாமால் தடை செயப்பட்டது. காரனம் அந்த 25 பேர்களும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தது தான். இந்த தண்டனையை அவர்களுக்கு அந்த இமாம் தன்னிச்சையாக வழங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் வழங்கியுள்ளார். ஒரு பக்கம் பாஜகவில் இஸ்லாமியர்கள் இல்லை என்று பிரச்சாராம், மறு பக்கம் அவ்வாறு சேரும் இஸ்லாமியர்களுக்கு மதநீதியான தண்டனை, பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதுபற்றியும் எந்த ஊடகமும் செதி தரவில்லை.
மோடி ஆட்சிக்கு வரும் முன்னர் மோடிக்கு ஆதரவு கொடுத்த இஸ்லாமியத் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அந்தந்த இயக்கங்களால் மோசமாக நடத்தப்பட்டதை நாம் அறிவோம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. இப்போதோ தேசத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் இந்தக் கூடாரங்களில் இருக்க முடியாத நிலை.
முத்தாய்ப்பாக தில்லி ஷாஹி இமாம் சையது அகமத் புகாரி தனது வெள்ளிக் கிழமை மசூதி உரையில் மிகத் தெளிவாக லவ் ஜிகாதிற்கு ஆதரவாக பேசியதோடு ஊக்கப்படுத்தியும் பேசியிருக்கிறார். இந்தச் செதியும் ஊடகங்களால் கண்டிக்கப்படவில்லை
நம்து ஊடகங்களைப் பொறுத்தவரை இஸ்லாமியருக்கு பாதிப்பு என்றால் அது ரத்தக்கறை. ஹிந்துக்களுக்கு பாதிப்பு என்றால் தக்காளி சட்னி.
ஆனாலும் மக்கள் முட்டாளக இல்லை என்பதே ஆறுதல் தரும் செதி.
வணக்கம் ஐயா!
நான், பெற்றோரின் நிலையைப் பற்றி, ஒரு blog எழுதியிருக்கிறேன்! அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
நான் ஒரு எழுத்தாளனும் அல்ல! எழுதுவது எனது பொழுதுபோக்கும் அல்ல! இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல! இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே!
http://tamilcheithi.com/commaon-man-writing-tamilcheithi/