திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்தடிபயாக வான்சிறப்பைப் பற்றி சொல்லும் போது, “மழை என்பது தேவலோகத்து அமிர்தத்திற்கு இணையானது” என்கிறார்.
`ஓம் சன்னோ மித்ர : சம் வருண‘ என்ற அதர்வண வேத மந்திரமும் `காலே வர்ஷது பர்ஜன்ய’, `யந்து நதயோ வர்ஷது பர்ஜன்யா‘ போன்ற ரிக்வேத மந்திரங்களும் சூரியனும், சந்திரனும், அக்கினியும், பூமித்தாயும், மழையும் இவர்களின் தலைவனான இந்திரனும் நாம் வழிபடவேண்டிய போற்றுதலுக்குரிய இறை அம்சங்கள் என்று குறிக்கின்றன.
இதனால் நாம் உலகில் பெற்றவையாவும் இறைவனின் அருளால் என்று உணர்வதால் அவனிடத்தில் நன்றி உணர்வும் மரம், செடி, கொடிகள், காடு, நதி, மலை, கடல், கரை என்று எல்லாவற்றையும் புனிதமாகக் கருதவேண்டும் என்ற மனோபாவமும் இயற்கை வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என் பதும் பண்டிதன் முதல் பாமரருக்கும் ஏற்படுகிறது. நிலத்தையும், நீரையும் பாழ்படுத்தக்கூடாது என்கிறது.
பாரதத்தில் தொன்றுதொட்டே இயற்கையோடு ஒட்டிய வாழக்கையை நடத்தினார்கள் என்று படிக்கிறோம்.
ஆமாம், ஏனப்பா இன்றைக்கு இதையெல் லாம் எழுதுகிறாய் என்கிறீர்களா? சென்ற வாரம் தியா மிர்சா என்ற திரைப்பட நடிகையும் முன்னாள் ஆசிய பசிபிக் உலக அழகியுமான பெண்மணி தன்னுடைய வலைப்பூ (Blog) மற்றும் சுட்டுரையில் (twitter) எழுதியிருந்தார். “Draw Inspiration to fight climate changes”. தியா ஐநா சபையில் சுற்றுப்புறச் சூழலுக்கான கெளரவத் தூதர் மேலும் ஸ்வச் (தூய்மையான) பாரதம் திட்டத்தை இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பதில் மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பவர் (ஸ்வச் ஸஹேலி)
அவர் வேதங்கள் காட்டிய வழியில் விலங்கினத்தைப் போற்றி சைவ உணவு முறைக்கு மாறலாமே என்கிறார். விலங்கினங்களை மாமிசத்திற்காக, கசாப்பிற்காக வளர்க்கும் இறைச்சிக்கூடங்கள் சூழலுக்குக் கேடான வாயுக்களை வளிமண்டலத்தில் செலுத்துகின்றன என்கிறார்-.
வேதங்கள் காட்டும் நன்னெறி இயற்கையைப் பேணி இயற்கையோடு இயைந்த வாழ்வு என்ப
தைப் பதிவிட்டுள்ளார்.
உலகம் ஹிந்துத்துவத்தை ஏற்கத் தயார். நாம் பரப்பத் தயாரா-?
வேதம் பிறந்த நாட்டினரான நாம் மிகவும் பேறு பெற்றவர்கள். ஆகவே நமக்கு கூடுதல் பொறுப்
பும் உண்டு. உலகெல்லாம் இந்த அறிவுச் செல்வத்தை நாம் தானே எடுத்துச் செல்ல வேண்டும்?
ஸ்ரீஸூக்தம் ஏழாவது சுலோகம் (உபைது மாம் ேவஸக). “உன் அருள் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்கும் பெருமையும் செல்வமும் தருவாய்” என்று நன்றியையும் பிரார்த்தனையையும் வெளிப்படுத்துகிறது.
ஆம், பல்லுயிர் இணைந்து காணப்படும் இயற்கைச் சூழல் (Bio-diversity) நம் நாட்டில்தானே காணப்படுகிறது?