சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ‘பேராசிரியர் யஷ்வந்த் ராவ் கேல்கர்’ விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 400 திக்கற்ற சீராட்டி வளர்த்துவரும்
ஆர். கோபிநாத்துக்கு அந்த விருது அளிக்கப்படுவதாக ஏபிவிபி அறிவித்துள்ளது. பெங்களூரு இளைஞரான இவர், ‘ஸ்பர்ச டிரஸ்ட்’ என்ற தனது அமைப்பின் மூலம் இதுவரை 2,500 குழந்தைகளுக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக 40 தன்னார்வத் தொண்டர்களையும் உருவாக்கி இருக்கிறார். டிசம்பர் 3 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற உள்ள ஏபிவிபியின் 63வது தேசிய மாநாட்டில் விருது வழங்கப்படும். (ஒரு நினைவுப் பரிசு, ஒரு சான்றிதழ், 50,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை விருதில் அடங்கும்).